செவ்வாய் நம்மை விட அதாவது பூமியை விட ஒரு விதத்தில் பொருந்தி ஒரு விதத்தில்யை வேறுபட்ட கிரகம். ஆயினும் அத்துணை வளர்ச்சியிலும் நம்மை விட்ஸ் வேகமாய் செயல்படும் கிரகம்.
நமக்கு ஆக்ஸிஜென் தான் உயிர் பொருள் என்றாள் அங்கு நீயாந் தான் மூல உயிர் நாடி, நம்மை போல் மனித இனம் இன்னும் அங்கே வாழுமோ என்கிற விஞ்ஞானம் நாம் அறிவினை அலசி கொண்டிருக்கும் அந்தி வேளையில் அங்கே பெரும் மணற்பரப்பில் ஒரு சைன்யமே போரிட்டு கொண்டிருக்கிறது. நமது புராண கதைகளின் கட்டுரைக்கும் , 3ஆம் உலக போர் கற்பனைக்கும் அப்பாற்பட்ட விசித்திர ஆயுதங்கள் அங்கே அடிப்படை ஆயுதங்களாய் பயன்படுத்தப்படுகின்றன.
சரி, இன்றைய நிகழ்காலத்தை விட்டு இக்கதையின் நிகழ்காலத்தை அடைவோம்.
அச்சாரமாய் 2357வது வருடம் 24ஆம் நூற்றாண்டு; கண்டங்கள் கடந்து, நிற, மத,சாதி,தேச,இன பற்றுகளை அடியோடு மறந்து, இல்லை அறியாமலே வாழும் மனித சந்ததியினர். புவி முழுதும் பிரிவேண்பது கடலாலும், மலையாளும், மட்டும் இருக்கட்டும், நம்மில் தேவையில்லை என்ற கருத்தின் அடையாளமாய் வாழும் சமுதாயம்.
வேறுபட்ட பணம் கூட அழிந்து எலெகிட்றோனிக் பணமானது, நிஜத்தில் இப்படியும் ஒரு ஒற்றுமை உண்டோ என்ற அளவில் ஆகிப்போனது என்னவோ அன்றைய வசந்த காலம்தான். அப்போது ஓவொருவரும்பகுதி நேர விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். மற்ற நேரத்தில் அறிவியல் ஆய்வுகளுக்கும் வானவியல் சிந்தனைகளுக்கும்; வாழ்வியல் கலைகளுக்கும் கலந்து செலுத்தினர்.
அன்றைய தினத்தின் உணவுத்தேவை போக பொதுவாகவே இன்னும் சில பத்தாண்டுகளுக்கு போதுமான உணவப்பொருள் சேமித்து இருந்தது. அக்காலத்தில் அரசியல்வாதிகளும் கட்சிகளும் இல்லை பதுக்கிக்கொள்ள.
இத்தனை ரம்மியமான வாழ்க்கையை பார்த்தால் நாம் கண்கள் பொருக்குமா? வந்ததே வினை செவ்வாய்யிலிருந்து; ஒரு குடும்பம் நிம்மதியாய் சந்தோசமாய் இருந்தால் உறவுகளுக்கும் பக்கத்து வீட்டாருக்கும் பிடிக்குமா என்ன?அதே சூழ்ச்சி தான். ஆனால் உணவுக்காக [இங்கேயே கதை முடிந்தது; எனக்கு நிறைய வேலை இருக்கு என்போர் இதித்ஹோடு முடித்து விடவும், வேளை இருக்கு என்போர் தொடரவும்].
செவ்வாய் கிரகம் ஒரு மாபெரும் மக்கள் தோகை கொண்ட கிரகமாக இருந்தது. அங்கே இரண்டே நிலவகைதான் ஒன்று பாலைவனம் இன்னொன்று பனி பிரதேசங்கள். அங்கே வனங்கள் இல்லை ஆகையால் மாமிசத்திற்க்கும் சகோதரன் அன்றி வேறு உயிர் இல்லை. நாளைக்கோரு உணவு மாதித்திரை விழுங்கும் விஞ்ஞான கருவாடு போல் இருக்க தண்ணீர் என்னவோ பருகும் பொருளாக மட்டுமே உல்லது.ஆயிநும் நொடிக்கோரு விக்ான சாஸ்திர; சகசங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.
மேத்தாலிக் மைக்ரோப் ஹ்டாயர் காலை தூவி எதிரலிகளை போர்க்களத்திலேயே சமைத்து தின்றனர், இதன் விளைவு மனித அழிவுதான் என்பதை படிக்கு பாடி அழிந்த பின்தான் விக்ான மூளையும் விளங்காத மனமும் ஒப்புக்கொண்டது.
பின்னர் ஒரு குழுவினை உருவாக்கி அவர்களுக்கான தேவையை அலசினர். முதல் தேவை உணவுதான். அதை சரி செய்தலே முக்கால் வாசி தேவைகள் தீரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட சூரிய குடும்பத்தில் உணாவுப்பொருட்கள் அதிகம் உள்ள இடங்களை ஆராய்ந்து பூமியின் பக்கம் கவரப்பட்டனர்.
[செவ்வையிலிருந்து ஓர் கள்வன் முதற் பகுதி மீதி இன்னொரு நாள் தொடர்வோம்]
[செவ்வையிலிருந்து ஓர் கள்வன் முதற் பகுதி மீதி இன்னொரு நாள் தொடர்வோம்]
செவ்வாயிலிருந்து ஓர் கள்வன் by tamizh short story is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Based on a work at http://writerpavithrankalaiselvan.blogspot.in/.
Permissions beyond the scope of this license may be available at http://freetamilebooks.com/.
Post a Comment