BREAKING NEWS

Search This Blog

Latest Updates

Thursday, July 29, 2021

துறவறவியல் - கள்ளாமை

கூடாத ஒழுக்கம் பற்றி பொதுத்தன்மையாக சொல்லிவந்த பேராசான் இனி அவைகளின் பெரும்பான்மையினை செய்யாவண்ணம் உற்று உணர்த்த செய்கிறார் பேராசான்.. 

281. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

உரை: ஒருவனை எவரும் இழிவாக பேசாமல் இருக்க வேண்டும் என்றால் அவன் எதன் காரணமாகவும் பிறர் பொருளை திருடுவதை மனதிலும் கூட எண்ணாமல் இருக்க வேண்டும். 


282. உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்.

உரை: பிறர்பொருளை திருட்டுத்தனத்தால் திருடலாம் என்று மனதால் நினைப்பது கூட தீயதே.

283. களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

உரை: திருடுவதால் பெறுகிற செல்வம் அளவில்லாததாக ஆவது போலவே அழியும். 

284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

உரை: திருட்டின் மீதான ஆசை  வரும் விளைவினால் போகாத  துன்பமே தரும். 


285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

உரை : ஒருவர் ஏமாறும் சமயம் பார்த்து திருடக் காத்திருப்பவர் எப்போதும் எவருக்கும் அன்புடையவனாக மாட்டார்..

286. அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

உரை :  திருட்டின் மீது தீராத ஆசை உடையோர்  குறிப்பிட்ட அளவினோடு நின்று விடமாட்டார் .

287. களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்.

உரை : திருட்டு என்னும் குறைந்த அறிவுடையோர் அறம்பற்றி தன் அளவில் வாழும் ஆற்றல் தெரிந்தவராய் இருப்பது  இல்லை.


288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

உரை: பலரோடும் இணைந்து வாழ்பவனின் நெஞ்சில் நன்மை நிறைந்து இருப்பது போல . திருடர்கள் மனத்தில் வஞ்சகம் நிறைந்து இருக்கும். 


289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

உரை: திருட்டை விட்டு திருந்தி வாழாதவர் அத்திருட்டினாலேயே அழிவர். 


290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.

உரை:  திருடுவாரை  உயிர்கள் வெறுத்து ஒதுக்கும்.  திருடாதவரை எவரும் வெறுத்து ஒதுக்க மாட்டார்

துறவறவியல் - கூடா ஒழுக்கம்

தவமிருந்து உய்வார்க்கும் கூடா ஒழுக்கம் கேடே தரும் என்று அறிந்து விளக்குகிறார் பேராசான்..

271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

உரை: வஞ்சக மனம் கொண்ட ஒருவனின் பொய்யான  ஒழுக்கத்தை பார்த்து பிரபஞ்சம் முழுதும் எப்போதும் இருப்பவையாக இருக்கும் பஞ்சபூதங்கள் அவனுக்குள்ளும் இருப்பது எண்ணி சிரிக்குமாம்.

272. வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்.

உரை : வானளவு உயர்ந்த புகழ் நின்ற போதும் என்ன பயன்?  தன் நெஞ்சமே தானறிந்து குற்றம் செய்திருந்தால்.

273. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

உரை : தன்னை குற்றங்களில் இருந்து விலக்கி வாழும் வலிமை இல்லாதவன் பெற்ற தவம் என்பது புலியின் தோல் போர்த்தி பசு பயிர்களை மேய்வது போல தான் பொய் வலிமையால் மறைத்தாலும் எளிதாக கண்டறியக்கூடியது..

274. தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

உரை : தவ ஒழுக்கும் போய் தவறானவை செய்தல் என்பது புதர்பின் மறைந்திருந்து வேடன் பறவையை பிடிப்பது போல. நேர்மை இல்லாதது.

275. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்.

உரை: பற்றுகளை விட்டுவிட்டோம் என்று பொய்பேசி ஒருவன் தவறு செய்தால். துறவை ஏன் ஏற்றோம் என்று எண்ணி எண்ணி வருந்துமளவுக்கு பல கெடுதல் தரும்.

276. நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.

உரை: மனத்தினால் துறவாது துறவிபோல் ஏமாற்றி வாழ்பவனை விட இரக்கமில்லாதவன் யாருமில்லை.

277. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து.

உரை: புறத்தில் குன்றிமணி போல அறமாக நின்றவராயினும் மனத்தில் குன்றிமணியின் மூக்கு போல கருமை கொண்டு இருப்பவரும் உண்டு.

278. மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

உரை: மனமது அசுத்தமாக வைத்துக்கொண்டு குணத்தை கொன்றுவிட்டு வெளியில் நன்னீரில் நீராடி மறைகளை மட்டும் பின்பற்றி வாழும் மனிதர்கள் பலர்.

279. கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்.

உரை: நேராக இருந்தாலும் அம்பு கொடியது அதுபோல புறத்தில் மட்டும் நேர்மையானவர்களின் செயல்கள் கொடியவை. வளைந்தாலும் யாழ் நல்லது அதுபோல புறத்தில் அசுத்தமாய் இருந்தாலும் அகத்தில் தூய்மையாய் இருப்பர் நல்லவர்.  இவ்வாறு மனிதர்களின் செயல்களை கொண்டு வகைப்படுத்திக் கொள்ளலாம்.

280. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.

உரை: தலை சிரைத்து மொட்டையடிக்கும் துறவும் வேண்டாம் . முடி நீட்டி சடைகொண்ட துறவும் வேண்டாம். உலகம் இழிவாக பேசும் செயல்களை விட்டுவிடும் துறவே துறவு.


 

துறவறவியல் - தவம்

துறவிக்கு உய்வழி இன்ப துன்ப நன்மதீய நிகழ்வுகளில் சிக்குள்ளாகாத நிலை என்பதால் தவம் உயர்ந்தது.. துறவிக்கு மட்டுமல்ல சகலருக்கும் அநாவசிய நேரங்களில் தவம் மிகவும் பாதுகாப்பானது.. என்பதால் தவத்தின் சிறப்பை விளக்குகிறார் பேராசான்.

261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

உரை : வந்த துன்பம் அனுபவித்தல் பிற உயிர்களுக்கு தொல்லை இல்லாமல் இருப்பதே தவத்திற்கு அறிகுறி.

262. தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

உரை: செயல்களில் சிறந்தது தவம் என்பதால் அது அதற்கான குணமுடையார்க்கே ஆனதாகும். அக்குணங்கள் இல்லாதார் அதனை செய்வது தவத்திற்கு இழுக்கு. 

263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்.

உரை: பலரும் தவம் செய்யாததின் காரணம் நோக்கி பார்த்தால் உயரிய துறவிக்கு உரிய உதவி செய்தலில் மகிழ்ந்து தான் தவம் செய்ய முயற்சிப்பதை மறந்தனர் போலும்..

இன்னொரு பார்வை :  உரிய குணமுடையவர்க்கே தவம் என்பதால் மற்றார்க்கு அவர்தம் தவம் செழிக்க உதவுதலே தவமாகிறது.

264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

உரை : தவத்தால் வரும் பயனானது பகைவரை ஒடுக்குதலும் அன்பரை உயர்த்துதலும் எண்ணும் நொடி முடியும்..

265. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

உரை: விரும்பியதை விரும்பியவாறே அடைவதால் செய்யப்படும் தவம் இங்கு  பலராலும் முயலப் படும்..

266. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

உரை: தவம் செய்பவர்கள் தன் கடமைகளை மட்டுமே செய்வர் மற்ற அனைவரும் ஆசையில் சிக்கி பலவினைகளை செய்வார்..

267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

உரை: தீயில் சுடசுட மின்னும் தங்கம் போல ஔிவீசுவர் துன்பம் சுடசுட தவம் செய்வார்.

விளக்கம் : சுட சுட மின்னும் பொன் உலகில் மதிப்பு பெறுவது போல . தவமுடையார் துன்பத்தை ஏற்று  தாங்க தாங்க தங்கமாக மதிக்கப்படுவர்.

268. தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

உரை: தன்னுயிரை விதி பறிக்காது தானே உடலைவிட்டு பிரித்து வாழும் தவம் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் பணிந்து வணங்கும்.

இன்னொரு உரை: தன்னுடல் பிரித்து உயிர்ஆக்கம் பெற இயங்கத் தெரிந்தவனுக்கு எல்லா உயிர்களும் அடங்கும் .


269. கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

உரை: எமனை வெல்லவும் முடியும் தவவலிமை உடையவர்க்கு .

இன்னொரு உரை: கூற்று - பேசும் அங்கு - இடத்தில் உதித்தல் - தோன்றுதல் . கைகூடம்..

தன்னை பற்றி எண்ணி கூப்பிடும் இடத்தில் தோன்றவும் முடியும் தவவலிமை உடையவர்க்கு.

270. இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

உரை: ஏதுமில்லாதவர் , ஏழைகள்  பலராகிய காரணம் தவம் செய்வது சிலரே என்பதாலும் பலர் தவம் முயலாததும் தான்.

 

Tuesday, July 27, 2021

சமர்ப்பணம்.

#மீள்...

#சமர்ப்பணம்

சமர்ப்பணம்.. ஆம் சமர்ப்பணம்
என் வாழ்வின் உணர்வனைத்தும் 
என் வாழ்வின் நிகழ்வனைத்தும் 
சமர்ப்பணம் சில உயிர்க்கு சமர்ப்பணம்...

முதல்மரப் பழந்தின்று விதையெச்சம் விட்டு
முதல்காடு தனைச்செய்த உயர்பறவைக்கு 
என் ஆனந்த கண்ணீர் அனைத்தும் சமர்ப்பணம்..

வயிற்பசி தீர்க்க நற்றுணவு காண
உயிர்நீக்கும் விஷமுண்ட உயிர்தமக்கு
என் விரதங்கள் அனைத்தும் சமர்ப்பணம்..

உயிர்பசி தீர்க்க உற்பத்தி உத்திகண்ட
உயிர்தனக் கெல்லாம் உறுதுணையாகியவைக்கு
என் பகிர்தல் அனைத்தும் சமர்ப்பணம்..

மனிதகுலம் தழைக்கும் மாபெரும் வழியறிந்து
மனிதவுயிர் தொடர முதற்பிரசவம் பொருத்தவளுக்கு
என் வாழ்நாள் அனைத்தும் சமர்ப்பணம்..

தூரங்கண்டு ஈரங்கண்டு நேரங்கண்டு வாழ்வினை
சீராய் வகுத்த வீரமறங்கண்ட முன்னோர்தமக்கு
என் வாழ்வின் இன்பங்களனைத்தும் சமர்ப்பணம்..

மருந்தறிந்து விருந்தமைத்து சுற்றம் வளர்த்த
கரும்பினிய சித்தர் ஞானியர் தமக்குமே
என் வாழ்வின் அறிவெல்லாம் சமர்ப்பணம்..

போதையும் கீதையும் நீதியும் சதியும்
கோதையும் விதியும் விளக்கி எழுதியவர்க்கு
என் வாழ்வே முழுதாய் சமர்ப்பணம்.. 

சமர்ப்பணம் ஆம் சமர்ப்பணம்
உலகம் தர்ப்பணம் தந்தவர்க்கு 
உயர்வாய் என் சமர்ப்பணம்..

Sunday, July 25, 2021

இல்லறவியல் - விருந்தோம்பல்

உலகின் தலையாய குணப்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல் அதிலும் தமிழ்குடிக்கே பெரிய சிறப்பாக இருக்கும் விருந்தோம்பலை தமிழின் திலகமாய் விளங்கும் குறள் விளக்குகிறது. இங்கனம் வாழ்க்கை விருந்து பற்றி வகைபடுத்தி விளக்கம் தருகிறார் பேராசான் வள்ளுவப் பெருந்தகை..

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

உரை: இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு செல்வங்களை சேர்த்து காத்து வாழ்வது எல்லாம் விருந்தினருக்கு உதவுவதற்காகவே.

82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

உரை: தான் உண்பது வாழ்வை காக்கும்  அமுதமே ஆனாலும் விருந்தினன் இல்லாமல்  உண்பது அறமல்ல.

83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

உரை\:| நாள்தோறும் வரும் விருந்தினனை காத்து உதவுவான் வாழ்வில் வறுமை வந்து வீண்பட மாட்டான்..

84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

உரை :  ஒருவன் விருந்தினனை நன்முறையில் முகமும் மனமும் மகிழ்ந்து பேணுவதை கண்டு திருமகள் என்னும் செல்வத்தின் தேவதை விரும்பி அவன் இல்லம் தங்குவாள்..

85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

உரை : விருந்தினனுக்கு படைத்து மிஞ்சியதை உண்பவனின் வயலில் அவன் சென்று தான் வித்து இடவேண்டுமா என்ன.? என்று அவன் விதைக்காமலே செல்வம் சேரும் என்கிறார்.

அதுக்காக வயலுக்கு போகாம இருக்காதீங்க.. அவன் புண்ணிய கணக்கு என்னும் வயல் செழிக்க தனியாக நல்ல விசயம் ஒன்று செய்ய வேண்டுமா  என்ன? என்று தான் வள்ளுவப்பெருந்தகை மொழிகிறார்.

86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

உரை : உண்டு களித்து ஆசுவாசம் கொண்டு செல்கிற விருந்தினனை சிறப்பொடு வழியனுப்பி அடுத்து வரும் விருந்தினனுக்காக ஆவலாய் காத்திருப்பவன். வானுலக தேவர்களுக்கு நல்ல விருந்தனனாம்.

87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

உரை: விருந்து  தரும் துணையை துணைவியான மனைவியுடன்  மேற்கொண்ட வேள்விக்கு பயன் என்று இணையாக ஒன்று இல்லை.

88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

உரை : பாத்து பாத்து சேர்த்தும் கடனாதான் வந்து நிக்கிது என்று புலம்புவர் விருந்து படைக்கும் வேள்வி செய்யாதவர் ..

89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

உரை: செல்வம் இருந்தும் வறுமையில் தான் வாழும் முட்டாள்தனம் விருந்தோம்பல் செய்யா முட்டாள்களிடம்  உண்டு 

90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

உரை: நுகரந்திட வருந்தும் அனிச்ச மலர் அதுபோல முகம்மாறி பார்க்க வருந்தும் விருந்து..


சண்முக சட்கண்டம் - 24 - வெட்பை ரெண்டாய்

வெட்பை ரெண்டாய் கூறு செய்த வேலை பிடித்தாயே
நுட்பம் தேடும் நூலார் எண்ணும் நுண்மை தருவோனே
தட்டித் தட்டி நெஞ்சம் எங்கும் தூய்மை புரிகின்றாய்
எட்டி ஒட்டி ஓடி வந்து உள்ளம் தருகின்றாய். 1

வண்ண மஞ்ஞை மீது வந்து வன்மை தருகின்றாய்
எண்ணம் என்னும் தங்கத் தேரில் எங்கும் திரிகின்றாய்
கண்ணன் தென்னன் தேவி சொல்லக் காவல் தருகின்றாய்
வெண்ணை போல என்னை என்றும் நெய்யாய் உருக்குகிறாய். 2

பஞ்ஞை உண்ணும் தீயாய் எந்தன் பாவம் புசிக்கின்றாய்
மஞ்ஞை மீதே வேளாய் வந்து மந்தம் ஒழிக்கின்றாய்
தஞ்சம் தந்து தன்தாள் தன்னில் என்னை நிறுத்துகிறாய்
நஞ்சை உண்ட நீல கண்டன் கண்ணில் பொழிகின்றாய். 3

அப்பில் வெந்த செந்நெல் சூடும் அப்பன் வழிவந்தாய்
ஒப்பில் அன்பை தந்து என்னை ஓமில் நிறுத்துகிறாய்
தப்பித் தப்பி தேயும் என்னை தாயாய் நடத்துகிறாய்
சிப்பிக் குள்ளே முத்தை போல சுற்றி யிருக்கின்றாய். 4

நுந்தை சிந்தை தீயில் வந்து நீரில் மலருகிறாய்
விந்தை எல்லாம் விந்தை கொள்ள வாசம் வளர்கின்றாய்
சந்தம் சொல்லி பாடும் பாடல் கேட்டு மகிழ்கின்றாய்
எந்தை சிந்தை எல்லாம் நீயே என்றே பரவுகிறாய். 5

இல்லை தொல்லை என்ற வாறு இன்பம் தருகின்றாய்
முல்லை கொல்லை போல எங்கும் மாகம் வளைகின்றாய்
எல்லை இல்லா இன்பம் தந்து என்னை அசத்துகிறாய்
சொல்லை சொல்லி சொல்லாய் நின்றும் சொர்க்கம் புனைகின்றாய் . 6

கண்ணை கட்டி விட்ட வாழ்வில் காவல் வருகின்றாய்
பெண்ணை நம்பி பேயாய் போகா போகம் தருகின்றாய்
உண்ணும் உண்ணல் உள்ளே சக்தி யாக விரிகின்றாய்
மண்ணில் விண்ணல் என்று சுற்றும் மயிலில் வருகின்றாய் 7

சின்னச் சின்ன மாயம் செய்து சித்தம் வளர்க்கின்றாய்
நன்மை தீமை ரெண்டும் தந்து நித்தம் சிரிக்கின்றாய்
மென்மை வன்மை மேவச் செய்து வீரம் தருகின்றாய்
தன்னில் தன்னை காணா வண்ணம் நீயாய் விரிகின்றாய் 8

கண்டு கொண்டு வண்டாய் சுற்ற தேனாய் பொழிகின்றாய்
கண்டாய் செண்டாய் உண்டால் உள்ளம் கொள்ளும் சுவையானாய்
அண்டம் பிண்டம் ரெண்டும் தீர அண்மை தருகின்றாய்
சண்டை வந்தால் சீறும் வீரம் தந்தே செழிக்கின்றாய். 9


அன்றும் இன்றும் அன்பில் என்னை ஆண்டு அளக்கின்றாய்
தென்றல் தீண்டும் காட்டில் நின்று தெய்வம் எனவானாய்
நன்றில் நன்றாய் நன்மை தந்து நாளும் நிலையானாய்
கன்றாய் என்னை கையில் வைத்து காலம் கடக்கின்றாய். 10

ஒரு கவிதை என்ன செய்யும்?

ஒரு கவிதை என்ன செய்யும்? 


பால்வெளித் தொட்டிலில் படர்கிற உயிர்களை

பார்க்காமலேயே தடவி விடும். - இருந்தவிடத்தே

ஆல்மரத்தடியில் ஊஞ்சல் செய்து தரும்..  - விண்கலமின்றி

நிலவில் வீடுசெய்து ஒருயுகம் வாழச்செய்யும்..


எப்போதோ நட்ட மரத்தின் மலர்களை

அவ்வப்போது கையில் கொண்டு தரும்.  - சிலநேரம்

காகித்திற்குள் கானகத்தை காட்சி காட்டும்

பூவுலகில் கொஞ்ச நேரம் புதுமைகாட்டும் - ஒருவேளை

உணவாகும் பசிநேரம் அமுதாகும் விருந்தாகும் 


நினைத்தாலே நினைவூரும் அணைக்காமல் அனைத்தாளும்

எலிசபத்தையும் ஏழையாக்கும் அரைக்கிறுக்கனையும் ஐன்ஸ்டீனாக்கும்..  - பித்தாகிப் 

பின்சென்றால் போதியாகி புத்தனாக்கும் இல்லையேல்

புத்தனையே உங்கள் பக்தனாக்கும்  - கவிதை.. 


எழுதப்படும் மந்திரக்கோல்  சுவைதீர ருசிப்பார்க்கு

மன்மதனின் அம்பாகும் மனமாற சுகிப்போர்க்கு - போர்வைதரும்

குளிராகும் எங்கிருந்தோ நமைப்பார்த்து கண்சிமிட்டும் 

விண்மீனுக்கு இங்கிருந்தே நாம் செய்யும் பரிபாஷையே கவிதை..


தென்றலுக்குள் சூரியனையும் எரிமலைக்குள் மல்லிகையையும் வைத்துவிட்டு சிரிக்கும் குழந்தை கவிதை.. 

காமம் தொட்டுவிடா இடத்தை எட்டிநலம் செய்யும். கவிதை.. இல்லறவியல் - புகழ்

வாழ்தலில் முக்கிய பயன் புகழ் பெறுவது தான் அது குறித்து வள்ளுவ பேராசான் விளக்கம் செய்கிறார். 


231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.

உரை: தான் செய்வது உலகம் முன்னேற ஏற்றவாறுை வாழ்வது இவையின்றி உயிர்க்கு ஒரு ஊதியம்(கூலி) இல்லை


232. உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.

உரை: அறங்களை உருவகித்து விளக்கி செல்லுபவர் செல்லுவதெல்லாம் யாசகம் கேட்பார்க்கு தருபவர் மீது நிற்கும் புகழைதான்.. 


233. ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.

உரை : ஒன்றில்லாது பலவான உலகத்தில் உயர்ந்தது புகழ் மட்டும் தான் காரணம் அதற்கே அழியாது நிற்கும் தன்மை உண்டு..


234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

உரை : நிலைத்து நிலவுகிற நீண்ட புகழை கவிதை செய்யாவிடின் புலவரை ஏழுலகமும் மதிக்காது. 


235. நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

உரை: உடலை நீர்போல் உளதாக்கி புகழை நிலைபெற செய்து சாவாது வாழும் சாவும் முறை அறிந்த வித்தகர்க்கு இன்றி மற்றவர்க்கு அரிது..


236. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

உரை: உலகம் முன் உயர்ந்து தோன்ற வேண்டுமானால் புகழோடு தோன்றுக இல்லையேல் தோன்றாததே நல்லது. 


237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.

உரை : புகழோடு வாழாதவர் தன்னை தானே நொந்து கொள்வர் அப்படியிருக்க. அவனை இகழ்வாரை எப்படி அவன் நொந்து கொள்வது .

238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

உரை : புகழ் பெறாதது உலகத்தில் எல்லோருக்கும் இழிவு. 


239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

உரை : புகழ் பெறாதவரை சுமந்த நிலமும் விளச்சலில் குறைபடும்..


240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

உரை: புகழோடு வாழ்தலே வாழக்கை மற்றவை வாழ்க்கை அல்ல..

இல்லறவியல் - ஒப்புரவறிதல்

சமூக வாழ்வில் பிறர்க்கும் பயன்படும் படி உதவி வாழ்தல் என்னும் நற்குணம் குறித்து விளக்குகிறார் பேராசான்.

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.

உரை : கைமாறு கேட்காமல் கடமை செய்யும் மழைக்கு தான் என்ன பதில் செய்திடும் உலகு . அதுபோல் கைமாறு பாராது உதவுக.

212. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

உரை : நான் உழைத்து சேர்த்த பொருளெல்லாம் முடியாதார்க்கு உதவுவதற்கே என்று எண்ணுக.

213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

உரை : உதவுதலை விட நல்லது என மற்றொன்று என்றும் புதிதான ஏழு உலகங்களும் தந்தாலும் பெறுவது கடினம்.

214. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

உரை : இல்லாதவர்க்கு உதவி வாழ்பவனே உயிர் வாழ்கிறவன் ஆவான் மற்றவர் செத்தவராக கருதப்படும்.

215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

உரை : ஊர் குளம் நிறைந்தது போலவே உதவுபவனிடம் இருக்கும் செல்வம் உலகத்திற்கானது .

216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

உரை : கனிகள் தரும் மரம் ஊருக்குள் பழுத்திருப்பது போலதான் அறமுடைவனிடம் இருக்கும் செல்வமும். ஊருக்கு நன்மை செய்வது.

217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

உரை : மருத்துவ மூலிகை மரம் போன்றது  பெரும் குணம் கொண்டவனின் செல்வம். ஊரார் துயர் துடைத்து தேவை தீர்க்கும்.

218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.

உரை : ஒப்புரவை அறிந்து செயல்படுவார் தான் வறுமையில் இருந்தாலும் பிறர்க்கு உதவுவார்.

219. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.

உரை: பிறர்க்கு உதவ முடியாமல் வருந்தும் போதுதான் ஒரு ஒப்புரவாளன் வறுமை அடைகிறான். ஏனெனில் கடைசிவரை அவர் முயன்று உதவுவர் என்பதால் .

220. ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

உரை: உதவுதலால் ஒரு துயர் வருமானால் தன்னை விற்றாவது அத்துயரை பெற்று பேரடைய வேண்டும் ..


இல்லறவியல் - ஈகை

நற்குணங்களின் வரிசையில் தானம் பற்றி விளக்குகிறார் பேராசான். 

221. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

உரை: இல்லார்க்கு தருவதே தானம் மற்றவை ஒன்றை எதிர்பார்த்து செய்வது. 


222. நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈ.தலே நன்று.

உரை : நல்லதே என எவர் சொன்னாலும் ஒன்றை பெறுவது தீயது.  சொர்க்கம் கிடைக்காது என்றாலும் தானம் நல்லது. 

223. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

உரை : தன்னிடம் இல்லாத துயரத்தை சொல்லாது தானம் செய்தல் நல்ல குலத்தில் பிறந்தவனிடமே இருக்கிறது . 


224. இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.

உரை: யாசகம் கேட்டு வந்தவர் முகம் மலர தந்து அந்த மலர்ந்த முகத்தை யாசகம் கேட்டு நிற்பான் கொடுப்பவன். 


225. ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.

உரை: வலிமையிலும் வலிமை தன் பசி பொறுத்தல். அதனிலும வலிமை பிறர்பசி தீர்த்தல் ..  ஒருநிமசம் ஔவையார பாத்த மாதிரியே இருக்கு ஆசானே. 226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

உரை : வறுமையில் வாடுபவரை அழிக்கும் பசியை தீர்ப்பதால் ஒருவன் புண்ணியம் என்ற  செல்வங்களின் புதையலை பெறுகிறான்.. 


227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.

உரை: பலருடன் பகிர்ந்து உண்ண பழகியவனை பசி தொடுவது கடினம். 


228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

உரை: தன் செல்வங்களை சேர்த்து வைத்து இழந்து போகும் கல்மனத்தார் தான். பிறர்க்கு தருவதால் வரும் இன்பத்தை ஏன் தான் அறிவதில்லையோ?. 


எனக்கு பிடிச்ச குறள். வள்ளுவரை கவிஞனாக சாமானியனாக நான் கொஞ்சும் குறள். கொடுக்கும் இன்பம் அடையத் தெரியலயேடா ன்னு கேட்கும் மகாரசிகன். பேராசான்..230. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை.

உரை:  சாவை விட கொடியதில்லை தான் ஆனால் தானம் செய்ய முடியாத போது சாவது கூட இனியதே. இல்லறவியல் - தீவினை அச்சம்

சமூக வாழ்வுக்கு தேவையான குணங்களை படியமைத்து விளக்குகிறார் பேராசான் . அவ்வரிசையில் தீவினைக்கு அஞ்சுதல்  என்ற குணத்தை விளக்கம் செய்கிறார். 


201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு.

உரை: தீமை செய்ய முன்பே
           தீமை செய்தவர் பயப்படார்
          தீமை செய்யா நல்லோர் பயப்படுவார்


204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

உரை: மற்றார்க்கு கேடுதரும் செயலை 
             மறந்தும் கருதாதீர் கருதினால்
             கருதுவார் கெட அறம் கருதும்
 
மத்தவனுக்கு கேடு வர நெனைச்சா அவனுக்கு கேடு வர அறம் நினைக்கும். 


205. இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து.

உரை: இல்லாத ஒன்றை பெறுவதற்கு தீமை செய்யாதீர் . செய்தால் இருப்பதும் பிய்த்துக் கொண்டு போய்விடும். 


206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

உரை : நோய்பட்டு அழிய விரும்பாதவன் பிறர்க்கு தீமை செய்ய மாட்டான். 


207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.

உரை : எந்த பகை பெற்றாலும் தப்பலாம் தீமையால் வந்த  கர்மவினைப் பகையில் தப்ப முடியாது. 

208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று.

உரை: பிறரை இருளில் தள்ளும் தீமை செய்யாதீர் அந்த இருளில் உங்கள் காலடியில் நிழலாக இருக்கிறது . 209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.

உரை : உங்களை நீங்களே காதல் செய்ய வேண்டுமானால் எப்போதும் தீமையின் அருகில் கூட செல்லாதீர். 210. அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

உரை : தீமையுள் திரிந்தும் தீமை செய்யாது வாழ்பவன் தான் கேடு இல்லாதவன்