திருப்புகழ் விளக்கம் -3 - ஏறு மயிலேறி (திருவருணை)

 பாகம் 1 . 

  அர்ச்சனை பாட்டேஆம் னு அப்பன் சிவபெருமான் சொன்னது போல இது முருகனுக்கான அர்ச்சனை பாட்டு. நல்லா அலங்காரம் பண்ணி வீட்டுல பூசிக்கும் போது அர்ச்சனைக்கு  இந்த பாட்டு ரொம்ப உகந்தது. அழகா சினிமால ப்ரேம் ப்ரேமா காட்டுற மாதிரி எழுதிருப்பாரு எங்காளு.  சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச் சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங் கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங் கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய் கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத் தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச் சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே. சந்தனமும் பச்சை கற்பூரமும் குங்குமமும் மகிழ்த்து பூசிய கடகரேகை ஓடிய தோள்கள் கொண்ட போர்களத்தில் தலைவனாக மயில்மீது வரும்  அறுமுக சரவணா கனத்த கொண்டையிட்டு பழமையான வேட்டைக் குலத்தில் தோன்றிய குரப்பெண் வள்ளியின் காதலா. ஆனையின் மகளையும் மலர்நிறைந்த கானக மகளையும் கொண்ட முருகா கூதள மலர் போல இருக்கும் உன் குளிர்ந்த பாதங்களை எனக்கு அருள்வாய்  கந்தா கருணைக்கடலே.  அழகிய பசும்பொன் கும்பத்தையும் சிறுகரும்பையும் கைகளில் தாங்கிய சாமரம் போன்ற விரிந்த காதுகளும்  உயர்ந்த துதிக்கையும் கொண்ட எந்தை.  பெறுவயிறும் எலிவாகனமும் கொண்டு செந்தூர வண்ண தாமரை போன்ற அழகிய முகங்கொண்ட விநாயகப் பெருமானின் தெய்வ சகோதரனே. என்கிறார்.  கேமரா ஆங்கிள்ல முதல்ல முருகன காட்டி வள்ளிக்கு Zoom போய் closeup காட்டி zoom out ல வரவர வள்ளி தெய்வானையோட ப்ரேம்ல காட்டி . மறுபடியும் முருகனோட பாதத்துக்கு zoom போய். கருவறை வாசல்ல இருக்குற விநாயகர் கைக்கு closeup போய் zoom outமுழுசா காட்டி தெய்வ சகோதரனேக்கு முருகன காட்டுனாப்ல . எங்காளு எழுதிருப்பாரு . அப்படியே பாலோ பண்ணிப்பாருங்க செம்மையா இருக்கும்.  பாகம் 2   ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே. இளமையான ஆண்மயில் மீதேறி விளையாடிய போதும் ஒருமுகம் தான். ஈசருடன் சுவாமிமலையில் உபதேசித்த(எங்காளு நுணுக்கம் சிவனை குறைக்கக் கூடாதாம் அதனால் பேசுகிறன்னு சொல்றாரு) போதும் ஒருமுகம் தான். தன் குறைகளை கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் போதும் ஒரு முகம்தான். கிரௌஞ்ச மலையை இரண்டாய் பிளக்க சிக்கலில் வேல் வாங்கிய போதும் ஒருமுகம் தான். தந்த வாக்கில் மாறுபடும் சூரரை வதைத்த போதும் ஒருமுகம் தான் . வள்ளியை கல்யாணம் செய்யும் போதும் ஒருமுகம் தான் . அப்புறம் எதுக்குயா உனக்கு ஆறுமுகம் . சொல்லுப்பா. என்கிறார்.. (இதுல தேவயானியை கல்யாணம் பண்ணத சொல்லிருக்க மாட்டார். அது இல்லாம 5 முறை ஒரு முகம் தான்னு சொல்லி முடிச்சிருப்பார்.) ஆறுமுகம் ஆன பொருள் என்னன்னா? . அப்பாக்கு ஐந்து முகம் என்று பலர் நினைக்கின்றனர். சிவனாரும் ஆறுமுக நாதர் தான்.. பரம்பொருளுக்கு பிரபஞ்சத்தை இயக்க 5 தொழில்கள் உண்டு படைத்தல் காத்தல் மறைத்தல் அருளளல் அழித்தல். இந்த 5ம் எல்லாருக்கும் தெரியும். ஆறாவதா ஒடுக்கல் னு ஒரு தொழில் உண்டு. அதாவது அண்டங்கள் எல்லாம் தனக்குள் ஒடுக்கிக் கொண்டு சூன்யமாய் இருப்பது. இது பரம்பொருளுக்கு மட்டுமே இருக்கும் குணம். அதனால் தால் பிரம்மாவுக்கு 5 தலை மட்டும் .. சிவன் பரம்பொருள். முருகன். சிவன் வழி வெளிபட்ட பரம்பொருள். அந்த ரகசியத்தையும் வெளிப்படையாக்கி எளிமையாய் வந்த பரம்பொருள்.. ♥.

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS