சண்முக சட்கண்டம் - 30 - சரவணத்தேவே

 அகர முமாகி அதிலு யர்வாகி

உகர முமேகி உருது ணையாகி

சகத்த திலேழும் சமர்து ணையாகி

சுகத்தி னிலேகும் சரவ ணத்தேவே. 1


சிகர மோர்கோடி சிறுகு டிலாடி

நகர மோர்கோடி நலம திலாடி

இகப ரத்தோடு இதம ருள்வாயே

சுகத்த தனிலேகும் சரவ ணத்தேவே 2


மகத்து நீராடி மகிழ்வ துங்கோடி

முகத்து ஆறோனுள் முகில்வ துங்கோடி

நிகர்த்து ஒன்றில்லா நிமலக் கந்தம்தா

சுகத்தி தனிலேகும் சரவ ணத்தேவே 3


தகர்த்த குன்றமும் தடைகள் தூள்சிந்த

பகன்ற சொல்லினை பரமனுங் காக்கத்தான்

சகத்தில் நின்றக்கோன் சிரங்கள் தூள்சிந்த

சுகத்தி தனிலேகும்  சரவ ணத்தேவே 4


செகத்து சோதியன் சகல முமானவன்

மகத்து சோதியே மருவில் இளையவே

தகத்து தாதிதி தகதத் திமிதிமி

சுகத்தி லேகிடு்ம் சரவ ணத்தேவே 5


அகத்தில் நின்றுநீ ராடிடும் ஆடலில்

சகத்து துண்பொருள் சீரொடும் ஆடுமே

பகுத்து கண்டவர் பரத்து கண்டரே

சுகத்தி லேகிடும் சரவ ணச்சரா 6


உகுத்த கண்ணீர் உலரு முன்துயர்

செகுக்கும் செவ்வேள் சிரத்து சோதியாய்

ககனம் தூசாய் கடக்கும் வாய்தரு

சுகத்தி லேகு சரவ ணத்திறை 7


எகனையும் மோனை எழுதுபுது சுருதி

நகனையும் பாவ நயமதில் நிறையும்

குகனையும் பாடா குறைநிலை வருமோ

சுகத்தினி லேகும் சரவணக் குமரா 8


முகம லர்ந்தானை முழுமு தற்கோனை

அகம மர்ந்தானை அறுமு கத்தானை

இகப ரத்தெங்கும் இதம ருள்வானை

சுகத்தி னில்நின்ற சரவ ணத்தேவே 9


சிகரத் தில்நின்ற சிவகு ருத்தேசா

நகரத் தில்நின்ற நறுகு ணத்தெய்வ

அகரத் துள்நின்ற அறுமு கச்சோதி

சுகத்தி னில்நின்ற சரவ ணத்தேவே. 10






Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post