பள்ளிப் பருவத்தில் பார்த்த கடவுள்

நான் வளர்ந்தது தருமபுரியில் படித்து அமலா இங்கிலீஷ் ஸ்கூல். இன்றுவரை ஆங்கிலம் எனக்கு புழங்குவதற்கு அந்த பள்ளி தான் ஒற்றை காரணம்.. இப்போதும் அப்பள்ளியின் சிறுபிள்ளையை அழைத்து ஆங்கிலத்தின் கடினமான வார்த்தையை குடுத்தாலும் 90 சதவீதம் சரியாக படித்துவிடும்.. அது அந்த பள்ளியின் சிறப்பு..

அந்த பள்ளின் தனித்த அடையாளம் என்பது அது தரும் கையெழுத்து பயிற்சி எழுதும் போதே இட்டாலிக் சாய்வினை சொல்லி பழக்கி விடும் கோர்வை எழுத்தில் அந்த அமைப்பே தனி அழகு. அதற்காக என் கையெழுத்தை எல்லாம் கேட்காதீர்கள் . என் எழுத்திலாவது அழகியல் எதிர்ப்பார்க்கலாம் கையெழுத்தில் இல்லை.

அது தவிர அந்த பள்ளி தந்த விசயங்கள் ஏராளம். அதனருமை என்போன்ற ஏழெட்டு மர ஸ்கேல்கள் உடைய அடிவாங்கியவர்களுக்கு தான் தெரியும்.

வருடாவருடம் கிருஸ்மஸ் கொண்டாட்டம் ஒரு மாதமே நடக்கும் . நான்கு வாரங்கள் நான்கு கொள்கைகள் அன்பு கருணை மன்னிப்பு பகிர்ந்தளித்தல் என்பதுபோல் . கடைசி வாரத்துக்கு முன்பு அல்லது இடையில் வரும் பகிர்ந்தளித்தல் வாரத்தில் பல பொருட்கள் சேகரித்து கருணை இல்லத்திற்கு வழங்கப்படும்.

அப்படி ஒருநாள் ஐந்தாம் வகுப்பு என்று நினைக்கின்றேன் . பள்ளியிலிருந்து சோகத்தூர் பிரிவு சாலையில் உள்ள கருணை இல்லத்திற்கு கூட்டிப் போனார்கள்.

நாங்கள் ஒரு 50 - 60 மாணவர்கள் சென்றிருப்போம் . காலையில் கிளம்பும் வரை எனக்கு தெரியாது ( அவ்வளவு அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட் ) எதாவது வாங்கிப் போவது என்ற எண்ணத்தில் .அப்படி எல்லாம் சொல்லக்கூடாது மத்த பசங்க எல்லாம் வாங்கிருக்காங்க என்ற எண்ணத்தில் . பாக்கெட்டை பார்த்தால் பத்து ரூபாய் இருந்தது ( கேவலமாக பார்க்க வேண்டாம் 2000+ ஆண்டுகளில் ஐந்தாவது பையன் கையில் பத்து ரூபாங்கிறதே ஒரளவு உயர்வான தொகை தான் 2 ரூபாய் இருந்தால் இப்போது விற்கும் 20 ரூபாய் 5ஸ்டார் 1 வாங்கலாம்)

மற்றவர்கள் கார் பொம்மைகள் , பேனாக்கள் , கிரையான்கள், இன்னபிற விலை உயர்ந்த , உபயோகப் படக் கூடிய பொருட்களை எல்லாம் வாங்கியிருந்தனர் அவையெல்லாம் குறைந்தது 30 ரூபாயிலாவது தொடங்கும். அதிலேயே பொருாதார வர்க்க பேத அரசியலெல்லாம் பேசலாம்.

மொத்த வகுப்பு மாணவர்கள் எல்லாரும் எனக்கு நண்பர்கள் தான் ( இன்றும் என்னை எப்படியோ அடையாளம் கண்டு கொள்கிறார்கள் ) அதிலும் நமக்கு வாய்த்தது என்றபடி ஒருவன் முரளி என்பவன். என்னை காப்பாற்றுவதும் அவன் தான் காட்டிக் கொடுப்பதும் அவனே தான். எல்லாவற்றிலும் பங்குக்கு வருபவன் அதுபோல அவனுடையதிலும் என்பங்கு என்று எப்போதும் எடுத்து வைத்துவிடுவான்.

இருக்குற பத்துரூபாய் ல என்ன வாங்கலாம்னு பாத்தா இவன் வேற வந்துட்டான் தேங்காய் தலையன்னு நினைத்துக் கொண்டு அவசரத்தில் அருகிலிருக்கும் பேக்கரியில் 3 பார்லேஜி பிஸ்கட் பேக்கெட்களும் ரெண்டு ரூபாய் 5 ஸ்டார் ரெண்டும் வாங்கினேன் ( கணக்கு இடிக்குதேன்னு யோசிக்க வேண்டாம் பார்லேஜி அப்ப 2 ரூபாதான் )

ஏறிய சில நிமிடங்களில் முரளிக்கு ஒரு 5 ஸ்டார் எனக்கொன்னுன்னு சாப்டாச்சு. மூணு பார்லேஜியும் ஆளுக்கு ஒன்னு ஹோம்க்கு ஒன்னுன்னு டீலிங்க் போட்டாச்சு. பத்துநிமிடத்துல பஸ்ஸும் மெர்சி ஹோம் வந்தாச்சு .
( பஸ் பத்தி சொல்லனுமில்ல CBM chandra balasubramaniam matric school ன்னு ஒரு ஸ்கூல் அப்ப தருமபுரில பெரிய ஸ்கூல்ல ஒன்னு இப்ப இல்ல சங்கரா கண் பரிசோதனைக்கு விட்டுட்டாங்க )

அப்படியே வந்து இறங்கியாச்சு கருணை இல்லத்துல அப்பவே நிறைய பேர் இருந்தாங்க எங்களுக்கு எல்லாம் அவங்ககிட்ட இருந்த சின்ன சின்ன சேர் எல்லாம் போட்டதும் எங்களோட வந்த மிஸ் எங்களை வரிசையா உட்கார வெக்க எதிர்ல ஒரு பத்து பென்ச் பக்கம் இருக்கும் பென்ச்க்கு ஆறாறு பேரா நசுக்கிக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க வழக்கம் போல எல்லா சேவை இல்லங்களும் பன்ற மாதிரி அவங்கள எங்களுக்காக கடவுளை வேண்டிக்க சொன்னாங்க.

அப்பவும் சரி இப்பவும் சரி எனக்கு அந்த சடங்கே பிடிக்காது. ஏன்னா எனக்கு அப்ப எனக்காகவே கடவுள்கிட்ட கேட்க வராது இதுல எப்படி மத்தவங்களுக்காக வேண்டிக்கிறது எல்லாம்.. அவங்களும் அப்ப கிட்டதட்ட என் வயசு தான.

இதுல பிராத்தனை அப்பவே முதல் பென்சில நசுக்கிட்டு உட்கார்ந்திருந்த பையன் தொப்புனு விழுந்துட்டான் எல்லாரும் சிரிச்சிட்டோம் . பாவம் அந்த பையன் ரொம்ப சங்கடமா இருந்துருக்கும் . அப்புறம் அவங்கவங்க வாங்கிட்டு வந்தத அவங்கவங்களே போய் குடுக்க சொன்னாங்க.

எல்லாரும் குடுக்கப் போனாங்க எல்லாம் நல்ல நல்ல பொருளா இருந்தது. இதுல நாராயணன் ன்னு ஒருத்தன் டெடி பியர் எல்லாம் வாங்கி்ட்டு வந்துருந்தான். எனக்கு இத்தனை பேர் முன்னாடி இப்படி பிஸ்கட் எடுத்த தரவே அவமானமா இருந்தது ( இப்ப எல்லாம் தைரியமா குடுக்க பழகி்ட்டேன் ) அப்படியே தயங்கி தயங்கி மெதுவா முதல் பென்ச்சுக்கு போனேன் விழுந்தானே ஒரு பையன் அவன்கிட்ட யாருமே எதுவும் குடுக்கல .

சரின்னு தயங்கிகிட்டே ஒரு பேக்கட் பிஸ்கட்ட குடுத்தேன் . அவன் அதை சிரிச்ச முகம் மாறாம வாங்கி பிரிச்சான் பாருங்க எனக்கு ஒரு நிம்மதி வந்துச்சு பாவி பையன் அந்த நிம்மதிய கொஞ்ச நேரங்கூட விடுல .

பிரிச்சான் வரிசையா அந்த பென்ச்ல இருந்த 8 பேருக்கும் பிஸ்கட் போச்சு மிச்சமிருந்த 9 வது பிஸ்கட்ட என்கிட்டயே குடுத்தான் பாருங்க . அந்த நிமிசம் நான் அங்கயே செத்துட்டேன் .

கண்ல என்னையும் மீறி கண்ணீர் வருது. பிஸ்கட் குடுக்க அவமானமா நெனைச்சேன் . ஆனா யாரோட பொருளும் இப்படி எட்டு பேருக்கு போய்டு திரும்பவும் வரல . ச்ச இப்படிபட்டவங்க மத்தியில நீ திருட்டுத்தனமா பிஸ்கட்ட ஔிச்சி வெச்சிக்கிட்டு ஒன்னு மட்டும் குடுத்தியேடான்னு மனசாட்சியே காரி துப்ப அப்படியே பாக்கட்ல கைவிட்டு மீதி ரெண்டு பாக்கெட்டையும் எடுத்து டேபிள்ல வெச்சிட்டேன் .

டேபிள்ல எடுக்க கைவெச்சவன் கைமேல என் கண்ணீர் விழுந்தது.  நிமிர்ந்து பாத்தான் இடதுகையில என்கிட்ட நீட்டுன பிஸ்கட்ட கீழ வெச்சான் ரெண்டு பேக்கெட்டையும் பிரிச்சான் அடுத்தடுத்த வரிசைக்கும் குடுத்தான்  ஆறாறு என்று மூன்று வரிசைக்கு சென்று மீதி 3; வந்தது அந்த மூணு எடுத்து எனக்கு பின்னாடி இருந்த முரளி, நாராயணன் , நிரஞ்சன்னு மூணு பேருக்கும் குடுத்தான் .
இப்ப கீழ வெச்ச என் பிஸ்கட்ட எடுத்து என் கையை பிடித்து அதில் வைத்தான்..

அதுசரி இதெல்லாம் எப்படி சரியா சொல்றன்னு கேட்கலாம் . மறக்கக் கூடிய விசயமா இது .

இதுல இருந்து தெரிஞ்சுகிட்டேன் கீதை சொல்ல போர்களம் அவசியமில்ல . பிஸ்கட் பேக்கட் போதும்… குருவா கடவுள் குருந்தை மரத்தடியில மட்டுந்தான் இருப்பான்னு இல்ல கருணை இல்லத்திலும் இருப்பான்..


2 Comments

  1. Arumai Pavi கொடுக்கும் பொருள் முக்கியம் அல்ல கொடுக்கும் மனசுதான் முக்கியம்

    ReplyDelete
  2. https://online-traffic-bot.blogspot.com/

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post