எழுதபடாத கவிதைகள் - பாரதியிடமிருந்து

தீராத விளையாட்டு பிள்ளை .. கண்ணன்
தீராத விளையாட்டு பிள்ளை...
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை.

எண்ணமடி நீயெனக்கு எல்லையடி நானுனக்கு
வண்ணமடி நீயெனக்கு வானமடி நானுனக்கு
வாயுளறும்  பொற்தமிழே பேதையெந்தன் பேரறிவே
தங்கநிற மேகமென எங்கும்பொழில் பெருமழையே..

சீதையடி நீயெனக்கு ராமனடி நானுனக்கு
கீதையடி நீயெனக்கு கண்ணனடி நானுனக்கு
இன்பம்நிறை தத்துவமே
எந்தன்விழி  எரிதழலே
விண்ணை விஞ்சும் பெருமனமே 
நல்லிசையே..

வெல்லமடி நீயெனக்கு வேந்தனடி நானுனக்கு
உள்ளமடி நீயெனக்கு ஊஞ்சலடி நானுனக்கு
ஊனுறக்கும் மறந்ததடி
ஊர்பெயரும் மறந்ததடி
ஊனுறையும் உள்ளொளியே... பேரொளியே...

இமையடி நீயெனக்கு இன்பமடி நானுனக்கு
ஈசனடி நீயெனக்கு ஈகையடி நானுனக்கு
அன்பைதரும் ஆயுதமே
ஆசைக்கென்ற ஆரம்பமே
ஈசலுக்கான இருளொளியே
தீமைசுடும் பேரருளே

சேவையடி நீயெனக்கு  சர்வீஸ்டாக்ஸ் நானுனக்கு
ராஜ்ஜியங்கள் நீயெனக்கு ராஜனடி நானுனக்கு
புலமையுல்ல புத்தகமே
புன்னகையின் புகழிடமே
பூக்களுடை பூங்கொத்தே
பூமியின் பொற்சுரங்கே.. என்னுயிரே..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post