எழுதப்படாத கவிதைகள் 9 - நட்சத்திர விதைகள்

எப்போது பார்த்தாளோ , எதற்காக சிரித்தாளோ
இருந்தாலும், அவள் இல்லாத போதும்
அந்த நினைவுகள் மட்டும் போதும்.
பல யுகங்கள் ஜீவன் தாங்கும்..

அட நிகழ்வுகள் என்பது புரிந்த விதிகள்
அவள் நினைவுகள் என்பது நட்சத்திர விதைகள்..
ஔியில்லா இரவு ஏதுமில்லை..

எங்கே நான் போனாலும் , அங்கங்கே நின் முகங்காணும்.
திரிந்தாலும் ; நான் கரைந்தே போயிருந்தாலும்..
நீ உடன் இருந்தாலே போதும்..
நிமிடம் நின்றே போகும்..

அட நாட்கள் எல்லாம் பாரமில்லை..
நம் வாழ்க்கை என்றும் காரமில்லை..
கறையில்லா கடல்கள் ஏதுமில்லை...

நினைவுகள் என்ன .. நட்சத்திர விதைகள் தான்.
நிகழ்வுகள் என்ன.. அதன் மினுமினுப்பு தான்..
நடப்பவை என்ன .. நம் கனவுகள் தான்..
நிகழ்காலம் போகட்டும்.. எதிர்காலம் நமக்குத்தான்..

கண்கள் எதற்கு.. ஆனந்த கண்ணீருக்கு தான்.
காயங்கள் எல்லாம். ஆறிடத்தான்..
காலம் எதற்கு; காத்திருக்க தான்..
கவலை எல்லாம் கனிவதற்கு தான்...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post