புத்தாண்டு 2025 - முதற்பா

 #மார்கழித்திங்கள் #புத்தாண்டு #முதற்பா


சமர சிகாவல சகல சிரோன்மணி சிகர பதாமிர்த - சிவநேயா

 சதிகள் வராமலும் சரமும் விடாவகை சலதி வராநிலை - செகமீதே


விமல மனோநிலை விதமும் வழாவகை விவரம் ஓரேநொடி - தருவாயே

 வறுமை தொடாதுயர் வழமை விழாநிலை வழங்கு விநோதனே - வடிவேலா


அமரர் படாதுயர் அவதி விடாதருள் அவுணர் கொடாவலி - அருள்வோனே

 அகில பராபர அருகு நிலாசடை அரர்க்கு ஓரேபொருள்  - பகர்வோனே


கமல மதாய்விழி  கருட உலாவரு கரிய கதாயுதர்க் - கினியோனே

ககன மெலாந்திரி கனக கலாபம்மேல் கனத்தில் உலாவரு - பெருமாளே.



0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS