நீங்கள் கர்மாவை நம்புகிறீர்களா? நம்பினாலும், நம்பாவிட்டாலும் கர்மா உண்மையா, எல்லாருக்கும் நடக்குமா?

 

நீங்கள் கர்மாவை நம்புகிறீர்களா? நம்பினாலும், நம்பாவிட்டாலும் கர்மா உண்மையா, எல்லாருக்கும் நடக்குமா?


இதுல நம்பவோ மறுக்கவோ அவசியமில்லை. எல்லாருக்கும் நடக்கும். மிக சாதாரணமான விசயம் தான் ஒருநாள் திட்டமிட்டு ஒரு இடத்துக்கு சரியா 10:10க்கு சென்று சேர முயற்சித்து பாருங்கள் . தினமும் நீங்கள் சரியாக சென்றிருப்பீர்கள் அன்று மட்டும் சரியாக போக முடியாது. காரணம் வீட்டில் லேட் , சாப்ட லேட் , ட்ராபிக் , லிப்ட் வேலை செய்யலை , இப்படி எத்தனை காரணங்கள் . ஆனால் இதுவரை நீங்கள் சரியாக சென்று சேரும்போது எப்படி எல்லாமே ஒரே கோர்வை பிசிரு தட்டாமல் நடந்தது நடக்கிறது. உங்கள் பேருந்து ஓட்டுனர் சரியான நேரத்தில் கிளம்பி உங்கள் நிறுத்தத்திற்கு சரியாக வந்திருக்கிறாரே அவரு எத்தனை தடங்கல் வந்து இன்று வராமல் போகவோ ?. தாமதம் ஆகவோ ? காரணமில்லாமலா?. இத்தனையும் நூலளவில் சரியாக நடக்க ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறதல்லவா…

இப்ப சொல்லுங்க யாராவது இந்த தொடர்புல ஒரு சிக்கல பண்ணா அது உங்களுக்கு எங்கேயோ பாதிக்காதா?. அப்ப நீங்களே அந்த சிக்கல பண்ணா எப்படி இருக்கும். ?. அதுதான் கர்மா..

உதாரணமா. உங்களுக்கு மூன்று மாதம் நேரம் தந்து படிக்க சொல்லி ஒரு பரிட்சை வைக்கிறார்கள் நீங்கள் புத்தகத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. இப்போது தேர்வு எப்படி இருக்கும்!. தேர்வின் முடிவு எப்படி இருக்கும் !. இதுக்கு யாராவது காரணமாக முடியுமா? . இதுதான் கர்மா

அப்படியே நீங்கள் நன்றாக படித்து எழுதினாலும் உங்கள் விடைதாள் தொலைந்து போனால் என்னாகும். இதுதான் விதி .

இது ரெண்டும் சேர்ந்தது தான் கர்மவினை..




0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS