வெண்பா இயற்றுவது எப்படி?.

வெண்பா இயற்றுவது எப்படி? நல்ல கேள்வி.. முதல்ல சில விசயம் சொல்றேன் அப்புறம் வெண்பா பற்றி போகலாம்.

தமிழ் உலகின் ஆக சிறந்த மொழி. காரணம் அத்தனை நெடிய பாரம்பரியம். கொண்டது. உலகில் எத்தனையோ கலாச்சாரங்கள் பழக்கத்தின் வழியாகவும். நடைமுறைபடுத்தியதன் வழியாகவும் தொடர்ச்சியாக வந்திருந்தன. ஆனால் தமிழ் ஒன்று மட்டுமே கலாச்சாரத்தையும் பண்பாடு நாகரீகம் போன்றவற்றை தன்னுள் வைத்து பழக்கிவந்தது.

அதில் முக்கியமானது இந்த மரபுக்கவிதைகள். விருத்தமென்றும் வெண்பாவென்றும் ஆசிரியப்பா மற்றும் வஞ்சிப்பா என. யாப்பு கொண்டு அமைந்த கவிதை அமைப்பு இருக்கிறதே. அடேயப்பா..

சரி எதற்கு இந்த யாப்பு.? யாப்பு என்பது ஒரு முன்னேற்பாடாய் குறித்துக்கொள்ளப்பட்ட வடிவமும் அதன் உட்பொருட்களும். உதாரணமாய் நாம் பார்க்கவிருக்கும் வெண்பாவை எடுத்துக்கொள்வோம். ஈற்றடி மூச்சீர் . மற்ற அடிகள் நான்கு சீர் . தளைகொண்டு அமைதல். அடிஎதுகை. பொழிப்பு மோனை. போன்றன முன்னேற்பாடாய். வடிவமைத்துக்கொண்டனர்.. இதன் அடிப்படையே சந்தத்தோடு பாடவைத்தது.

சரி வெண்பாவிற்கு போயிரலாம்... வெண்பா ரொம்ப கரார் பேர்வழி. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமேன்னு. சிவனே எழுதுனாலும். தப்புனா தப்புதான். ஒரு புலவர் 1000 வெண்பா எழுதிருக்காரு வைங்க அத நூறுபேருள்ள சபையில அரங்கேற்றம் பண்ணனும். 986 வது பாட்டுல தளை தட்டினாக்கூட புலவர் தலை இருக்காது. அவ்வளவு கடுமையானது வெண்பா. ஆனா எழுத எளிமையானது அதே வெண்பாதான்.

வெண்பா = வெண்மை + பா. மிக சுத்தமான கலப்படமற்றது என்பதால் வெண்பா என்று அழைக்கபட்டது.

சரி இனி  அடிப்படைகள்::

1) எழுத்து
2) அசை
3) சீர்
4) எதுகை
5) மோனை
6) தளை
7)ஈற்று.

இந்த ஏழும் எல்லாவகையான மரபுகவிதைக்கும் நமக்கு தேவையான அடிப்படை புரிதல்.

1) எழுத்து:
           தமிழ் எழுத்து 4 வகை. அதுல ஒன்று கணக்கிற்கு மட்டும். மற்றவை குறில். நெடில். மெய்.
உதாரணமாக : க - குறில் . கா- நெடில் க்- மெய் /ஒற்று..

2) அசை:
          அசைனா ஒன்றுமில்ல.. ஒரு பசுமாடு வாயை அசைபோடுதல் போலதான் இதுவும். வார்த்தையின் ப்ரேக் பாயிண்ட்ஸ் என்பது அசை. ஆங்கிலத்தில் சிலபல் எனப்படும்.

தமிழில் அசைகள் இரண்டு . நேரசை. நிரையசை.

நேரசை.:

    ஒரு தனிக்குறில் .
     ஒரு குறில் + மெய்.
      ஒரு தனிநெடில்
       ஒரு நெடில் + மெய்.
உதாரணமாக : த, தம், தா, தாம்.

நிரையசை.:
     இரு குறில் .
      ஒரு குறில் + ஒரு நெடில்
       இரு குறில்+மெய்
       ஒருகுறில் + ஒரு நெடில் + மெய்.
உதாரணமாக: தனை, தொடா, இனம், துலாம்.

ஒரு வார்த்தையை இப்படி அசைகளாக மாற்றுதல் வேண்டும்.
உதாரணமாக. :
  செய்யுள் = செய்/யுள் = நேர் + நேர்
   மறைமலை = மறை/மலை = நிரை + நிரை
   மலர்மாலை = மலர் /மா/லை = நிரை+நேர் +நேர். காரணம். நெடில் + குறில் என்பது அசையாகாததால். இரு அசையாக கொள்ளப்படும். இவ்வாறு பிரித்த அசைகளை சேர்ப்பதால் சீர் எனப்படும்

3) சீர்:
       அசைகளின் அடுக்கான அமைப்பு தான் சீர். .
மாச்சீர்; (ஈரசைச்சீர்)
நேர் + நேர் = தேமா
நிரை + நேர் = புளிமா.
விளச்சீர்; (ஈரசைச்சீர் )
நேர்+நிரை = கூவிளம்
நிரை + நிரை = கருவிளம்.

காய்ச்சீர்; (மூவசைச்சீர்.)
நேர்+நேர் +நேர் = தேமாங்காய்
.
.
.நிரை+நிரை +நேர் = கருவிளங்காய்.

கனிச்சீர் ; (மூவசைச்சீர்)
நேர்+நேர்+நேர் =தேமாங்கனி
.
.
.
.கருவிளங்கனி.

4) எதுகை:
         இது ஒரு சப்த அமைப்பே. ஒரு சொல்லின் இரண்டாம் எழுத்தில் வரும் சப்த சேர்க்கையே எதுகை.

தொட்டதும் மலர்ந்தன பூக்கள்
பட்டது தென்றல் அன்றோ
தொட்டது பட்டது. ட்ட் எதுகை. அடிவரிசையில் வருதலால் அடிஎதுகை.

5) மோனை :
        இதுவும் எதுகையை போன்றதே ஆனால் முதல் எழுத்து.
சற்றென்று...
சந்தனமே... சச மோனை

6)தளை :
         தளை என்பது இரு சீருக்கும் இடையே ஆன தொடர்பு. மேட்சிங். இத வெண்பா வரும்போது பாக்கலாம் முக்கியமான கட்டம்..

7)ஈற்று:
        ஈற்று என்பது முடிவு. பாடலோ கவிதையோ அதன் கடைசி சொல். எனலாம்..

ஆக இந்த ஏழும் என்னவென்று தெரிந்ததா இனி வெண்பாவிற்குள்  செல்லலாம்

# வெண்பா விதிகள்:
1) ஈற்றடி சிந்தடி - அதாவது கடைசி அடி மூன்று சீர் மட்டுமே வரவேண்டும்.

2) ஏனையது அளவடி - ஈற்றடி தவிர மற்றவை நான்கு சீர் கொண்டிருக்க வேண்டும்

3) இயற்சீர் & வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். ஏனைய தளைகள் கூடாது..

இங்க தளை னா இரு வார்த்தைக்கும் இடையே ஆன தொடர்பு. உங்களுக்கு எல்லாம் சாமிப்பூ கட்டிருப்பதை தெரிந்திருக்கு. பெரும்பாலும் காமந்திஅல்லது அரலியால் கட்டிருக்கும். இரு கணுவிற்கும் இடையில். துளசி மரிக்கொழுந்து. வெண்பூஞ்சை போன்ற தளைகள் வைத்து கட்டிருப்பர். அப்படித்தான் இங்கும் ..

முதற்சீருக்கும் இரண்டாம் சீருக்கும் ஒரு அமைப்பை உருவாக்கும். அதில் வெண்பாவிற்கானது இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை...

இயற்சீர் வெண்டளை.
    மாமுன்நிரை
    விளம் முன் நேர்..

மாமுன் நிரை...
    அதாவது தேமா மற்றும் புளிமா போன்ற சீர்கள் வந்தால் அடுத்த சீரின் முதல்பகுதி. நிரையசையாக இருக்க வேண்டும்..

உதாரணமாக.:
      கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை..

இந்த குறளில்.  கோளில் என்பது முன்சீர். பொறியில் பின்சீர். இதில் கோ/ளில் = நேர்+நேர் =தேமா. . எனவே மாமுன் நிரை. எனும் விதிபடி. பின் சீர் நிரையசையில் தொடங்கிட வேண்டும்.

பொறி/யில் = நிரை + நேர் = புளிமா..

அதுபோல்..

விளம்முன்நேர்.:
  
      முன்சீர் . விளச்சீரானால். பின்சீர் நேரசையில் தொடங்கிட வேண்டும்.

உதாரணமாக.:
      
அறமுடை அந்தணர் போல் உயர்வு

இந்த வரியில் முன்சீரான அற/முடை = கருவிளம் ஆதலால் விளம் முன்நேர் விதிப்படி.. பின்சீர் நேரசையில் தொடங்கவேண்டும். அந்/தணர். = நேர்+நிரை =கூவிளம்.

வெண்சீர் வெண்டளை :
  காய் முன் நேர்.:
      முன்சீர் காய்சீரானால் பின்சீர் நேரசையில் தொடங்க வேண்டும்...

உதாரணமாக.:
        
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

இந்த குறளில் முன்சீரான பொறி/வா/யில் =புளிமாங்காய் காய்ச்சீர் ஆதலால். காய் முன் நேர் எனும் விதிப்படி பின்சீர் நேரசையில் தொடங்க வேண்டும். ஐந்/தவித்/தான். கூவிளங்காய். நேரசையில் வந்துள்ளது..
அதுபோல் ஒவ்வொரு சீருக்கும் தளைகளை பார்த்து அமைக்க வேண்டும்.

4) கனிச்சீர்கள் வருதல் கூடாது.
5) ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என்ற உறுப்புகளை கொண்டு மட்டுமே வர வேண்டும்.

அதாவது நாள்- நேர். மலர்-நிரை காசு - தேமா பிறப்பு- புளிமா ஆகிய சீர்களில் மட்டுமே வர வேண்டும்.

6) மோனை - பொழிப்பு மோனை ( ஒரு அடியின் முதற்சீரின் முதல் எழுத்தும் மூன்றாம்சீரின் முதல் எழுத்தும் ஒன்று) வருவது நன்று கட்டாயமில்லை

7) எதுகை- அனைத்து அடிகளிலும் ஒரே எதுகை வருவது ஒருவிகற்ப வெண்பா. முதல் இரு அடி ஒரு எதுகையும் பின் இருாஅடி வேறு எதுகையும் வந்தால் இரு விகற்ப வெண்பா. எதுகையின்றி வந்தால் பலவிகற்ப வெண்பா ...

வெண்பா வகைகள் :
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா.

ஒரு விகற்ப அல்லது இருவிகற்பம் கொண்டு நான்கு அடி கொண்ட . இரண்டாம் அடியில் தனிச்சொல் கொண்டது நேரிசை வெண்பா

ஒரு இரு பல விகற்பம் கொண்டு இரண்டாவது அடியில் தனிச்சொல் இல்லாதது இன்னிசை வெண்பா..

இவை வெண்பாவிற்கான இலக்கணங்கள் இதுபோக தங்கள் கருத்தும் கூறப்படும் விதமுமே வெண்பாவை சிறக்க செய்யும்..

3 Comments

  1. AVS Video Editor Crack is a professional and powerful software for editing video files. It allows you to edit various file formats including AVI, VOB, MP4, DVD, WMV, 3GP, MOV, MKV and H.264, MPEG-4, H.236 codecs.
    VMware Workstation Pro Crack
    AutoCAD 2021 Crack
    Adobe Audition Crack

    ReplyDelete
  2. ChessBase Crack is an independent personal database, which has become the worldwide standard. Everyone uses this, from the world champion to the amateur next door.
    Registration Code For Windows Movie Maker
    Sandboxie Crack
    Allavsoft Video Downloader Crack

    ReplyDelete
  3. வெண்பா இயற்றுவது எப்படி?. >>>>> Download Now

    >>>>> Download Full

    வெண்பா இயற்றுவது எப்படி?. >>>>> Download LINK

    >>>>> Download Now

    வெண்பா இயற்றுவது எப்படி?. >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post