உரை எழுதலாம் அதுக்கு முன்ன ஒரு முக்கியமான கதை இருக்கு .. தமிழ் இலக்கியத்துல பரணினு ஒரு இலக்கியம் இருக்கு அதுல ஒரு கான்செப்ட் இருக்கும். அதாவது போர்களத்துல நடப்பவைகள பற்றி பேய்கள்(கூளிகள்) காளிக்கு வியந்து சொல்லுமாம். அந்த கூளிகள் போரில் இறந்தவர்கள் பொருட்டு அவர்கள் உதிரத்தால் காளிக்கு கூழ் செய்து படைத்து தாமும் அருந்துமாம்.. அப்படி ஒரு பெரும்போர் இங்க நம்ம பட்டாலியூர் ல நடந்தது. முதல்ல பட்டாலியூர் எங்க இருக்கு?. திருப்பூர்ல இருந்து காங்கேயம் போற வழியில சிவன் மலை அழகுமலை னு ரெண்டு மலை முருகன் கோயில சொந்தமா வெச்சிருந்த கொங்கு நாட்டு சிற்றரசு தான் பட்டாலியூர். இப்ப குக்கிராமமா ஆகிருச்சி அங்க உள்ள பால்வண்ணீஸ்வரர் கோயில் இப்பவோ அப்பவோன்னு இருக்கு..
நம்ம சிவன்மலையில தான் வள்ளிக்கும் முருகனுக்கும் கல்யாணமாச்சு . அப்ப வள்ளிய தேடிவந்த குரவர்கள் படையே போர்ல இறந்து போக அங்க படைக்கல நாயகி காளி வருகிறாள்.. இறந்தவர்கள் உதிரத்தால் சமைத்த கூழை கூளிகள் (காளியின் சேவகர்கள்) கொண்டு தர . அந்த இடமே சுடுகாடா கிடக்க. இந்த கோரத்தை பார்த்து வள்ளி கலங்கி போய் நம்ம முருகன பார்த்து வேண்ட காளி இறந்த படை வீரர்களுக்கு உயிர்தர மறுக்க முருகன் சிவபூசை செய்து பால்வார்த்த காரணத்தால் வள்ளியின் மக்கள் ஈசனருளல் மீண்டு வந்தனர். அப்போது காளியின் கூளிகள் அமலியில் வேண்டிட காளி சிவனொடு ஒன்றி காட்சி தந்தாள்.
முருகன் பால்வார்த்ததால் ஈசன் பால்வண்ணீசரானார். காளி. நல்லமங்கை என்றானாள். இப்போ போலாம் உரைக்கு எங்காளு எவ்வளவு ரசனைக்காரருன்னு
கம்மல் போன்ற அணிகலன்கள் இரண்டும் காற்றில் நழுவி காதில் மோத தாமரையாய் நளினமாக சீறிவந்து எப்பேர்பட்ட வேலையா இருந்தாலும் நாம விட்டுபுட்டு கொஞ்சம் தாவி திரும்ப வருகிறபடியாக. செய்யும் இவள் மிகவும் பலமான எமனின் ஆட்களை படையோடு அழிந்தோடும்படி; அமுதமும் விஷமும் சேத்து ஆளையே ஈர்க்கும் மன்மத கலைகள் தப்பில்லாம நம்மை சூற்றிக்கொள்ள .
அந்த முனிவர்களையே விரகத்தால் ஏங்கி மெலியும்படி பார்வை வீசி. தன்னை திருடுவதற்கான ஆசையை தூண்டி இப்ப விட்டா உலகமே அழிஞ்சுரும் போல துடிக்க தவிக்க விடுமாறு நளின நடனமாடும் வடிவேல் மாதிரி உயிரையே வாங்கும் கண்களை கொண்ட என் காதல் பெண்களின் இன்பம் தரும் அந்த மயக்கத்தில் போய் விழாமல் முருகா உன் திருவடி நிழலில் ( நீ காட்டிய பாதையில் ) சேர்ந்து வாழனும் கேட்டதும் ஒருநாள் .
அழகா விரிந்த மலர் மாலையை சூடிய உன்னை விரும்பிய மரகதம் போல் மின்னும் தோகை கொண்ட மயிலோடு . உச்சி சூரியன போல ஔிவீசி நீ தோன்றிய வயலூர்ல அருள் செய்தாய்..
கட்டுக்கடங்காமல் முரண்படும் கூந்தல் காற்றில் அலைய காயங்களை தந்து உதிரப்பட்ட சூலாயுத்தை தாங்கிய தன்னை சரணடைபவர்க்கு மிகவும் அன்பாகி கட்டுப்படும் சாதகமானவளுமான உக்ரமான கடிமான யாளியை வாகனமாக கொண்டவளுமான காளியை
பரம போத (உச்சகட்ட விருப்பம்) மோகினியாக அரகர என வோதுவோர்க்கு வித்தைகளை தரும் ஆமளியாக முழுமுதற் கடவுளாக கொண்டாடும் கூளிகள் காளிக்கு விருப்பமான இனிமையான கூழை படைத்து பருகிட.
அவர்கள் நடமாட ஏதுவாக பறை அறைந்திட இறந்தவர்கள் சேரும் காட்டில் கோயில் கொண்ட நாயகியான காளியும் . முன்னம் இறைவன் ஈசனொடு இடப்புறம் இந்து உலகம் தோன்ற காரணமானவள் இன்றும் இணைந்த ஆடிடும் காளியின் பட்டாலியூர் தலத்தில் கோயில் கொண்ட பெருமாளே.. என்று முடிக்கிறார்.
எங்காளு ரசனைய சினிமா Frame by frame பாக்கலாம்.. லிஸ்ட பாருங்க..
காது கம்மல காத்துல ஆடுவது
வாசனையும் நளினமும் சேர்ந்த வேகமும் கோபமும்
எந்த வேலையா இருந்தாலும் கண்ணு கொஞ்சம் போய் வந்துரும் இவ வந்தா
ஆனாளபட்ட எமனோட படையே தோத்து தலைகுனியனும் இவ அழகுக்கு முன்ன ( இவள மாதிரி நம்மாள கொல்ல முடியாதுனு தலைகுனியனும்)
அமுதமாவது விசமாவது எதுனே தெரியல ஆனா ஆளை இழுக்குறாளே.
இவ மட்டும் வரனுமே நான் சாய இவளுக்காக அந்த பாவிபய மன்மதன் எல்லா வேலையும் பன்றான்.
முனிவனே இவ பார்வை தந்த சுகத்துக்கே விரகத்தால உருகி
யாராயிருந்தாலும் இவள தூக்கிடனும் ஆச வரும்
என்னமோ தெரியல இவள பாக்கும் போதெல்லாம் யுகமே முடியுற மாதிரி இப்பவே அடையனும்னு கிடந்து தவிக்கிறேன்..
என்னமோ வேல் வந்து உயிர கொல்லுமாமே அட இவ கண்ணு போதாதா உசுர வாங்குறதுக்கு?.
எப்புடி எங்காளு ♥♥♥
0 Comments