திருப்புகழ் விளக்கம் -2 - சரண கமலாலயத்தை (சுவாமிமலை)


 இந்த ரெண்டு பாட்டு என் பேவரைட் லிஸ்ட் .. அருணகிரியார் உண்மையா வெளிப்படையாாபேசிருப்பாரு.. 

வாசனையான மலர்களையும் வாசனையும் உடலுக்கு பூசிக்கொண்டு விளையாடல்கள் செய்கிற . சூரனது பிழைக்கு தண்டித்து திருத்திய கதிர்கொண்ட வேலுடையவா. ஏமராகிய சிவனார் உயர்ந்த மலையாகிய கயிலாயம் போன்ற மயில் மீது வரும் வீரா. காம வயப்பட்டு பெண்கள் மீதும் பொருள்கள் மீதும் ஆசையில் ஆழ்ந்து அழுந்தி உடல் மெலிந்து போகமல் . ஏமனின் கையில் சிக்கி அழிந்து போகாமல். ஓம் என்ற எழுத்தின் பொருட்செரிவில் ஞானம் அடைந்து . அதனால் பெருகும் அன்பினில் லயித்து . இந்த ஓவிய பிரபஞ்சத்தின் அந்தமான முடிவினை உணர அருள்வாய் ஏரகமாகிய சுவாமிமலை முருகனே..  பாட்டு 2 . பாதமலர்களை தியானத்திலும் கூட அரைநிமிடம் கூட நினைந்து உருக வழியறியாத மூடனை அறிவில்லாத சடம் . இந்த பாவ புண்ணிய பவங்களில் வினைகளால் பிறந்த  சிறுதுரும்பினை போன்ற என்மேல். கருணை புரியாதிருப்பது ஏன்?. என்ன குறை என்று இப்போது சொல்வாய் சிவனார் குமரா.   கடக ரேகை பதிந்த தோள்கள் மேல் ரத்னமணிகள் கலந்த தங்க மாலை அணிந்து செச்சை மணம் வீசும் கடப்ப மலர்மாலை அணிவோனே .  பெருத்த கனமான செல்வங்களும் நீண்ட ஆயுளும் சகல செல்வ யோகமும் மிகுந்த பெருவாழ்வினை  இத்தருணம் நீ தரவேண்டும் ஐயா.  கௌரவமும் சிவஞானமும் முக்தியும் பரகதியும் நீகொடுத்து உதவி புரிய வேண்டும் ஐயா.  சோதியின் இருப்பிடமாக விளங்கும் பாதத் தாமரைகளை அனுதினமும்நான் துதிக்க எவருக்கும் கிட்டாத உயர்ந்த அரிய தமிழ் கொடுத்தாய்.  அதிசயம் பல நிகழும் பழனிமலை மீது தோன்றிய அழகிய திருவேரகத்தின் முருகேசா..  இந்த பாட்டு பலரும் இணையத்துல ஜாலியா பாடிருப்பாங்க.  ஆனா அருணகிரியார் அழுது அழுது பாடியது இது.. கெஞ்சுவார்.. அதே உணர்வ அப்படியே பாடிருப்பாரு அண்ணா.. அதுக்கே வாழ்த்துக்கள் அண்ணா..❤❤❤❤ 🎉🎉 .. எனக்கு இந்த பாட்டு பிடிக்க காரணம் என்னன்னா..   பணக்கஷ்டம் , வறுமை , வெறுமை சுற்றியிருப்பவர்களின் ஏளனம் , தாங்க முடியா துயரம். வாழவே விரும்பாத சூழல்ல. ஆன்மீகத்துல கூட முன்னேற்றம் இல்லாம இருக்குறப்ப. யார் யாரோ எப்படியெல்லாமோ நல்லா வாழும் போது தவத்திலாவது உன்னை அடையலாம்னு முயற்சி பண்ணா முடியல . யாருக்கும் கிடைக்காத பாக்கியமா உன் பாதத்தை நிதமும் துதிக்க மிக உயர்ந்த மொழியான தமிழை கொடுத்தியே எப்பா ஏஞ்சாமி இதெல்லாம் தர உனக்கு பிடிக்கலயா?. . ன்னு அழுவாரு.  என்பங்குக்கு நானும் எழுத வேண்டாம் .. .  அரியதொரு சோதிமிக்க அழகுபதம் தான்நினைத்து அடையும்வழி நானறியேன் -  குமரேசா  அதிகதுய ரால்தவித்து அவதிமிகு வாழ்வினுக்குள் அழியும்படி யாய்விதிக்க - நினைந்தாயோ.
கரியபெரு மாளுதித்த கடலின்மிசை யேவிரிந்த கயிலைமலை யானசெந்தில் - பதிவாழ்வே
 கருணைபுரி யாமலெனை கடைவெளியில் வீசிவிட்ட கருமமெதை யானொழிக்க - மொழிவாயோ
விரிசடையில் வான்பிறையும் விதிதனக்கு காலனையும் வழங்கியவர் தான்விரும்பும் - முருகோனே
 வெளியவர்கள் வாழ்த்திடவும் வறுமைபிணி நீங்கிடவும் வளருமின்பம் நீகொடுக்க - வருவாயோ. 
பரிதவிக்கும் மாறுயென்னை பவவினையி லேவிடுத்து பயிலுமொரு பாடமென்ன - பகர்வாயோ
 பகலிரவி லாதுநித்தம் பணியுமொரு பாதபத்மம்  பரவியெனை ஆளுங்கந்தப் - பெருமாளே..



0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS