அண்டமெல்லாம் நடுநடுங்க - முருகன்

 அண்டமெல்லாம் நடுநடுங்க அந்தரங்கள் கிடுகிடுக்க அவுணர்குலம் பதைபதைக்க - வந்துஆடி


அப்பனுக்கு ஆடிவந்த அந்தவொரு ஞானதந்து ஆனைமுகர் வாழ்த்தவந்த - முருகோனே


கண்டவர்கள் கண்மயங்க கங்கிலெழு செந்தழலாய் வந்தகுக கந்தமெனும் - அழகோனே


சங்கரனும் சாரங்கனும் சத்பிரம்ம சாத்திரனும் சுத்தவீரங் கண்டுமன - மகிழ்வோரே


பொங்குகடல் அஞ்சுபட பொங்குசினம் தான்தணிய பண்மயத்த பாடலொடு - பணிவோமே


சந்தனமும் குங்குமமும் தந்துவுனை போற்றிவர மங்களங்கள் கூடுமய்யா - கந்தவேளே


செந்திலிலே சூரனையும் வென்றகதிர் காமனுனில் பொங்குசினம் தணியும்படி - பணிவோமே. 


கோபமெல்லாம் குறைச்சிக்கய்யா கொஞ்சநீயும் ஆறுமய்யா வீறுகொண்ட வேகமெல்லாம் - தணிச்சிக்கய்யா. 


அப்பனென சுப்பனென ஆசையோட வாரவுக அஞ்சிடாம பாத்துக்கய்யா - வடிவேளே.

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS