வழக்கமாக சந்திரன் தினசரி ஒரு நட்சத்திரம் என்று சுற்றிவரும் அப்படியாக ஒரு ராசியில் 2.5 முதல் மூன்று நாட்கள் வரை நகரும். இப்படி ஒருவரின் பிறந்த ராசியில் இருந்து 8வது ராசியில் இருப்பது சந்திர+ அட்டமம் - சந்திராஷ்டமம். சோதிட சாஸ்திர படி இயல்பாக எட்டு என்பது ராசிக்கு ப்ளைட் ஸ்பாட் அதாவது மறைவு இடம்.
ஒருவரின் மனநிலையை ஆளக்கூடிய சந்திரன் மறைவதால் அன்றைய தினங்களில் அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
இயல்பாக கவனசிதறல்கள் , மன குழப்பங்கள் , உணவு செரிமாண சிக்கல்கள் , முன்கோபம் முதலியன மிகந்து காணப்படும் அவற்றை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும்.
உதாரணமாக மேஷ ராசியினருக்கு விருச்சிகத்தில் சந்திரன் பயணிக்கும் போது சந்திராஷ்டமம் .
மனோகரன் - அன்னாகரன் என சந்திரனை சொல்லிவிடலாம்.
உங்கள் மனநிலைக்கும் உணவு விடயங்களுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் அவரே பொறுப்பு. ஒருவருக்கு தாயார் பற்றி குறிப்பதும் சந்திரன் தான்..
இதர அசுப கிரகங்கள் நேரடியாக செயல்படாத பொழுது சந்திரனை வைத்தே தாக்கும்.
0 Comments