திருப்புகழ் விளக்கம் -4 - வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்)

 இல்ல இந்த மனுசன என்ன சொல்றதுன்னு தெரியல. ஒரு காதல் பாட்டுல ஒரு பெண்ணையும் அவள் குணங்களையும் வர்ணிச்சா தப்பில்ல. நம்மாளு பக்தி பாட்டுல அப்படி எழுதியிருக்காரு. ஈராயிர குழவிகளுக்கு மட்டுல 90களின் பிள்ளைகளுக்குமே தெரியாத ஒரு இலக்கியம். சொல்லப் போனா வைரமுத்துவுக்கே வாத்தியாருங்கிற மாதிரி தான் இருக்கும்..

பாருங்க. நம்மாளு முருகா இப்பவே வந்து என்ன வழிநடத்துனு தான் கேட்குறாரு ஆனா மனுசன் அதுல முருகன பத்தி ஒரு நாலுவரி பாடியிருக்காப்ல.

வண்டு சுத்தி வர மாதிரி நல்ல வாசனையான மலர்கள் பூத்திருக்கும் கானகத்துல வாழுற குறமகள் வள்ளியை விரும்பினாய். எலும்புகளை தூக்கி அணிகலன்களா மாட்டிக்கிற உலகின் மீது அன்பு கொண்ட சிவனின் கன்றாய் இருக்கிறாய். உன்மீது அன்பு கொண்ட மக்களின் தலைவனாக இருக்கிறாய். சங்குகள் நிறைந்த கடலலை மிதக்கும் செந்தூரில் இருக்கிறாய். கொஞ்சமும் சூரன் செஞ்சத எண்ணி ஏழுகடலும் ஐந்து கண்டமும் அழியுற மாதிரி கோபப்படுகிறாய். எல்லாம் சரிப்பா . இதுக்கெல்லாம் நடுவுல என்னையும் நீதான் வழிநடத்தனும்னு சொன்ன வரைக்கும் அருணகிரிநாதர் ஒரு அடியார் தான்.. ஆனா சூரியனை மாதிரி நெருப்புகளை வீசி தாக்குற அம்புமாதிரியும். மீன் மாதிரியும் வேல் மாதிரியும் கண்கள் கொண்டு. தேன்கலந்த பாகுமாதிரியும் குயில் மாதிரியும் பேசுகிற. குயில் மாதிரி கரிய மென்மையான கூந்தலை உடைய பெண்ணின் தோள்களை தழுவிடனும் என்பதற்காக வங்காளத்திலும் சோனநகரத்திலும் சீனாவிலும் சென்று பொருள் சேர்த்து துன்ப படாம என்னை முருகா நீ வழிநடத்துங்கிறதுல தான் அருணகிரியார் கவிஞன்.. அத அதே உணர்வுல பாடுன Yaazh Music Venkatesan Thirunaukkarasu அண்ணாக்கு நன்றிகள் தான் சொல்லனும்.


வெங்காளம் பாணஞ்சேல் கண்பால் மென்பாகஞ்சொற் ...... குயில்மாலை மென்கே சந்தானென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி வங்காளஞ்சோனஞ்சீனம் போய் வன்பே துன்பப் ...... படலாமோ மைந்தாருந்தோள் மைந்தா அந்தா வந்தேயிந்தப் ...... பொழுதாள்வாய் கொங்கார் பைந்தேனுண்டே வண்டார் குன்றாள் கொங்கைக் ...... கினியோனே குன்றோடுஞ்சூழம் பேழுஞ்சூரும்போய் மங்கப் ...... பொருகோபா கங்காளஞ்சேர் மொய்ம்பாரன்பார் கன்றேவும்பர்க் ...... கொருநாதா கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்திற் ...... பெருமாளே.

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS