(இப்போதைக்கு ஜாதகம் பார்க்காமல் இருப்பது நல்லது குறைந்தது 8- 12 வயது வரை ஜாதகம் பார்க்காமல் இருப்பது நலம்…) ஏன்? இது பற்றி மேற்படி விளக்கமாக கூறுங்கள் அன்பரே…
என் பதிலே எனக்கு கேள்வியாக வருவது முதல்முறை.. ♥♥
இது.ரொம்ப சின்ன விசயம் ஒருவேளை ஜாதகத்தில் சில பொருந்தா விசயங்கள் இருந்தால் அது அந்த குழந்தையின் மீதான அன்பினை கெடுத்துவிடும்.
இப்போதெல்லாம் பலரும் சோதிடர்களாக இருக்கின்றனர் சில நுணக்கங்களும் நாகரீகமும் அறியாமல் வெளிப்படையாக சொல்கிறேன் என்று கண்டபடி சொல்லிவிடுகிறார்கள்..
லக்னத்தில் இராகு உள்ள குழந்தை மனநிலை பாதிக்க பட்டிருக்கும் என்கிற கருத்தை அப்படியே சொல்லிவிடுகின்றனர். எந்த லக்னம் லக்னாதிபதி யார் என்று பார்க்காமல் மற்ற குறிப்புகளை பார்க்காமல் சொல்லிவிடுகின்றனர். அது பெற்றோர் மனதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி சிறுபிரச்சினை வந்தாலும் குழந்தையே பழி போடுகிறார்கள் இப்படி பழிபோடப்படும் குழந்தை பின்னாளில் மனநிலை பாதிக்க காரணமே பெற்றோர்களாக இருக்கின்றனர்.. ஒருவேளை சுக்கிரனின் லக்னத்தில் இராகு நின்றால் ஜாதகர் அமானுஷயங்களையே அசால்டா கையாள்வார்.. லக்னத்தில் கேது இருந்தால் மிகவும் கடினமான வாழ்க்கை இருக்கும் யாரிடமும் உதவியிருக்காது என்றெல்லாம் சொல்வர் ஆனால் கேது சுபர் பார்வை பட்டால் வழக்கமாக மற்ற எந்த கட்டத்திலும் வரும் பலனை விழுங்கும் கேது . லக்னத்தில் இருக்க சுபர் பார்க்க அள்ளி தருவார்..
நான் நேரடியாக பார்த்த சம்பவம் ஒன்று உண்டு. ஒரு சோதிடர் நல்ல அனுபவம் மிக்கவர்.. எனது ஜாதகம் பார்க்க காத்திருந்த போது . ஒரு 3 வயது குழந்தையின் ஜாதகத்தை பார்த்து பலன் சொல்லிக் கொண்டு இருக்க . மேலாட்டமாக சொன்னவர் 12ம் பாவம் வந்தவர் நருக்கென பையனின் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாம போகுது ஆஸ்பத்ரிக்கு அதிகம் செலவு பண்ண வேண்டாம் பிரேஜனமில்லைன்னு சொல்லிட்டார்.. அந்த நொடி உடன் வந்த பாட்டி அந்த பேரனை பார்த்த பார்வை இருக்கிறதே வீட்டிற்கு போனவுடன் அவனை வீட்டை விட்டு விறட்டிருப்பார் போல..
இதெல்லாம் மேலாப்ல சொன்னது. .
ஆழமா சாஸ்திர ரீதியா பார்க்குறப்ப குழந்தை ஜாதகம் பார்க்காமல் இருக்க காரணம் நாம் பார்க்கும் வரை தோராயமாக 8 வயசு வரை குழந்தைக்கு ஜாதகமே வேலை செய்யாது . அந்த குழந்தையின் ஜாதகத்தை பெற்றோரின் உடன் பிறந்தோரின் ( மூத்த குழந்தைகள் ) ஜாதகம் தாங்கியிருக்கும்..
அட அந்தாளு என் ஜாதகத்த பாத்து கொஞ்ச நேரத்துல அப்பா இருக்காறா னு கேட்டாப்ல இல்ல சமீபத்துல தான்னு சொல்ல அதான சூரிய தசையில ஏழரை சனியோட சனிபுத்தி அப்பன விட்டுருக்க மாட்டானே. னு சொன்னதும் இப்பயெல்லாம் என் குடும்பமே நான் தான் எங்கப்பா சாவுக்கு காரணம்னு நம்பிகிட்டு இருக்காங்க.. சின்ன வயசுலயே என் ஜாதகத்த பாத்த ஒருத்தர் குலதெய்வம் துணைக்கு வரல பரம்பரை எவன் மாந்திரீகம் பண்ணான்னு பாருனு சொல்லிட்டு போயிட்டான் அது என்னமோ பெரிய பாவம் போல நான் பழிபட்டுட்டு இருக்கேன்.
0 Comments