இது அருணகிரிநாதர் அருளிச் செய்த தேவேந்திர சங்க வகுப்பு என்னும் ஒரு திருவகுப்பு. இதில் பதினாறு வரிகள் உள்ளன. பன்னிரண்டு வரிகள் அம்பாள் மேல். அதுவும் ஏகாம்பரை என்று வருவதனால் காமாக்ஷி அம்பாள் மேல் என்று என் எண்ணம். அடுத்த இரண்டு வரிகளில் அம்பாளிடமிருந்து வேல் வாங்கி சூரசம்ஹாரம் செய்த முருகப் பெருமானின் புகழ். பதினைந்தாவது வரியில் கணபதியை எப்போதும் தியானிப்பவர்கள் மனதில் முருகன் குடி கொள்கிறான் என்று கூறி பின் கடைசி வரியில், செந்திலில் நாயகனாக விளங்கும் முருகனை யார் வழிபடுகிறார்களோ, அவர்களை இந்திராதி தேவர்கள் வந்து நமஸ்கரிப்பார்கள் என்று சொல்கிறார்.
தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதிகொடு
சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
தாமாங்குசம் என்றிரு தாளாந்தர அம்பிகை
தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி
இரண கிரண மடமயில் ம்ருகமத புளகித இளமுலை இள
நீர் தாங்கி நுடங்கிய நூல்போன்ற மருங்கினள்
இறுகிய சிறுபிறை எயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
யான் ஏங்குதல் கண்டெதிர் தான் ஏன்று கொளும் குயில்
இடுபலி கொடுதிரி இரவலர் இடர் கெட இடு மன கரதல
ஏகாம்பரை இந்திரை மோகாங்க சுமங்கலை
எழுதிய படமென இருளறு சுடரடி இணைதொழு மவுனிகள்
ஏகாந்த சுகந்தரு பாசாங்குச சுந்தரி
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெட நினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரி கமலை குழை
காதார்ந்த செழும் கழுநீர் தோய்ந்த பெருந்திரு
கரைபொழி திருமுக கருணையில் உலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்
அரண் நெடு வட வரை அடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன்குகன்
அறுமுக னொருபதொ டிருபுயன் அபிநவன் அழகிய குறமகள்
தார்வேய்ந்த புயன் பகையா மாந்தர்கள் அந்தகன்
அடன்மிகு கடதட விகடித மதகளிற் அனவரதமும் அகலா
மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்
அதிபதி எனவரு பொருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே
Post a Comment