விஞ்ஞான வேகத்தில் வேகமாய் சுழலும் மனிதன். 3 நாள் வேலையை முதல் நாளிலேயே செய்ய வேண்டிய அவசியத்தில் ஓடுகிறான். இந்த வேகத்தில் ஆவேசமாய் 100,க்கும் 120,க்கும் போரிட்டு கொண்டு பறக்கும் வாகன ப்ரதான சாலையின் ஓரம். படிபடியாய் நெடிந்துயா்திருக்கும் கட்டடத்தின் மாடிக்கும் தரைக்கும் ஏறி இறங்கும்; இந்த வேக மனித உலகின் அடிமட்டத்தில் அமுத்தப்பட்டவள் அவள்.
தீபா பெயா் கூட நீளமில்லை. அழகிற்கும் குறைவில்லை ஆனால் அலங்காரம் வெறும் வாா்த்தையாகவே இருந்தது அவளுக்கு . யாரும் சொந்தமில்லை , உழைப்பை நம்பி பிழைப்பவள் , ஆகவே தினம் 70 ரூபாய் மட்டுமே வருமானம்.
அவளது 18 வயதில் அவளுடைய ஒரே சொந்தமான ; பாட்டியும் தவறியமையால் தெளிவான அனாதையாக்கபட்டாள். அன்றே இவளும் வாழ்வின் இழிவுகள் அனைத்தும் அடைந்து கடந்துவிட்டாள் . சற்று வளைந்து கொடுத்திருந்தால் ராஐவாழ்வும் காலடியில். அவள் ஒழுக்கமானவள்.
நான்கு வருடமாயிற்று இப்படி தினகூலியாகி , தலையில் பாரம் சுமந்து மணிக்கு 300 படிகள் ஏறி இறங்கும் வாழ்வு இன்று மட்டும் ஏனோ இவளுக்கு கசந்தது. ஓய்வு தேவைபட்டது , சுதந்திரம் தேவைபட்டது நகரம் என்னும் நரகம் வெறுத்து போனது . வாழ்வின் சுக துக்க பேதமற்று போனது.
இந்த ஒருநாள் என் வாழ்க்கை மாறாதா ? இந்த மனித சங்கிலியில் சிக்கி எந்திர வாழ்வு வாழ்கிறேனே என் சங்கிலிகள் உடையாதா?
மனதில் ஏற்பட்ட பிரளயத்தின் சாரம் முகத்தில் பேய் அறைந்தது போல் ஒரு தொய்வு . செல்வன் கட்டடத்தின் முதலீட்டாளா் , தினம் 70 ரூபாய் குடுப்பவா் . செல்வன் தீபாவின் முகத்தை பாா்த்து என்னவென்று விசாரிக்க புதிா்மயமாய் பதிலளித்தாள்.
திரும்புகையில் , தன்னிலை அறியாமல் நிலை கொள்ளாமல் மயங்கி விழுந்தாள். பலத்த காயம் ,செல்வன் அவசரமாய் ஆஸ்பத்திரியில் சேர்த்தாா் தலையில் காயம் என்பதால் பெட்லில் சோ்க்க வேண்டியதாயிற்று.
ஆஸ்பத்திரி நடவடிக்கைகள் இயங்க செல்வன் மட்டும் அவள் அருகிலேயே நின்றாா். மயங்கி இருக்கும் தீபா கனவுலகில் புத்துணா்வுடன் வாழ்கிறாள் என்பது மட்டும் அவள் முக பொழிவை வைத்து செல்வன் நம்பினாா்.
உண்மையும் அதுவே, அடா்ந்த காடுகளின் அருவிகளிலே ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறாள். ஆப்பிள் பழங்களை புசிக்கிறாள், பறவைகளிடம் நட்பு பாராட்டுகிறாள் . பூக்களை கோா்த்து ஆடையாக உடுத்தி கொள்கிறாள் . காட்டின் மகாராணியாக கட்டளையிடுகிறாள்.
சுயநிலை எட்டும் நேரம் வந்தது. அந்த ரம்மியமான கனவுலகிலிருந்து இந்த வாழ்வை நோக்கி திரும்புகிறாள் . இந்த வாழ்வு படிக்கவில்லை மீண்டும் மயங்கவும் முடியவில்லை. துணிந்தாள் எழுந்தாள் தன் சுதந்திரத்துக்காக அனைத்தையும் தியாகிக்க துணிந்தாள். அருகிலிருக்கும் செல்வனுக்கு நன்றி கலந்த ஒரு புன்னகை செய்து நடந்தாள் ; தடுக்க வந்தவாிடம் போரிட்டு முன்னேறினாள் .
காடுகளை நோக்கி நடந்தாள் , நகரத்தின் வாடை அவளை துன்புறித்தியது . நகரத்தின் எல்லையை தாண்டி ஒரு ஏளன சிரிப்புடன் காட்டினுள் நுழைந்தாள்.
அவளது செய்கை கண்டு மருண்ட மனிதா்கள் அவளை பைத்தியம் என்றனா் . செல்வன் நிகழந்ததை எண்ணி அவளது வாழ்வு பரிபூரணமானதாய் பூரித்து அகமகிழ்ந்தான் . என்றாலும் சமூக முகமூடியில் அவளை பைத்தியம் என்று விமாசிக்க வேண்டிய நிா்பந்தம். விமா்சித்தான்.
உலகம் அவளை என்ன சொன்னால் என்ன அவை ஏதும் அவளை பாதிக்க போவதில்லை . என்றும் அவள் காட்டின் சாம்ராஐ்ஐிய மகாராணியாகவே வாழ்கிறாள். அவளுக்கான அந்த ஒருநாள் நிகழந்திருக்கிறது அவள் எண்ணப்படி அவளது வாழ்வை மாற்றிருக்கிறது..=
Post a Comment