செவ்வாயிலிருந்து ஓர் கள்வன் - 2 end

பூமியை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் அங்குள்ளவற்றை; எளிதில் அடையலாம் என கணித்தனர். அத்திட்டத்தை குழுவினர் அனைவரும் ஆமோதித்ததால் ஒரு கள்வனை அனுப்பி அங்குள்ள உணவு பொருட்கள் பற்றியும் மனித மற்றும் ஆயுத வளர்ச்சி பற்றியும் அறிந்து கொண்டு உணவு பொருள்களை கவர்ந்து வர திட்டமிட்டார்கள்.

அவ்வாறே ஒரு கந்தர்வ கள்வன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனிடம் திட்டத்தை விளக்குவது எல்லாம் போலோக மரபு, அங்கோ அதற்கு மாற்றுவழி உண்டு. திட்டத்தை ஒரு அள்காரிதம் ஆகா மாதிரி ஒரு மெமரீஃபைல்லாக உருவாக்கி அதனை அவன் மூலைக்குள் பதிவு செய்து விடுவர்.



மேற்கொண்டு; திட்டமெல்லாம் அவன் திரன்படியும்; திட்தபதியும் நிகழும்; அவன் முதல் திட்டமாக பூமிக்குள் நுழைய வேண்டும். சாமானியானாக பெரும் பொருள்களை கவர்ந்து வருவது கடினம், எனவே பூமியில் பெரும் மதிப்பிற்குறியவனாக நுழைய வேண்டும் என்று முடிவு செய்தான், மேலும் அங்குள்ளவர்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். அதற்கான ஒன்றையும் செய்தான்.


அதுதான் HRA (Human Respiration Alterrator) என்கிற நுண்மவாயு அதனை புவியின் காற்று மண்டலத்தில் பரவவிட்டால் மனிதர்களுக்கு ஒவ்வாமையால் வண்டி மயக்கம் தோள் வியாதிகள் என அனைத்து ஒன்றாய் நிகழும் கிட்ட தட்ட ஒரு பெருநோய் தாக்கியத்தாய் பயப்படும் அளவிற்கு விளைவுகள் ஏற்படும். தீர்வு தேடி பூமி வாசிகள் அலைய , அந்த வேளையில் நாம் தலையிட வேண்டும் என்று வகுத்தான்.

அதுவே நிகழ; பூமி மனிதர்கள் கண்ணீரும் ரத்தமும்மாய் நலிந்து கிடக்க; எல்லாம் முடிந்ததாய் மக்கள் முடங்க , விஞ்ஞானிகள் கூட காவல் தெய்வம் தேட, நல்லவனாய் வந்தான் கந்தர்வ கள்வன், ஊசி மூலம் தீர்வு கொடுத்தான்.

கந்தர்வ களவன் பூமியின் மனித கடவுள் ஆனான், செவ்வாயின் சாதனையாளர் ஆனான். மொத்த பூமியும் ஏறத்தாழ செவ்வாய்யின் அடிமை காரணம் கந்தர்வ கள்வன் செய்த செயல். பூமீவாசிகள் அனைவரும் கந்தர்வ கள்வனின் ஆனைக்கு அடங்கி நடந்தனர்.

விஜயன் பூமியின் புதல்வன் கிரக ஞானம் பெற்ற விஞ்ஞானி, தான் உணர்ந்த வேறுபாட்டை ஆராய்ந்து பார்த்து அதிர்ந்து மற்ற மக்களிடம் விளக்க அவர்கள் அவனை பைத்தியமாகத்தான் பார்த்தனர். விஞ்ஞானிகளின் புனைபெயரே அது தானே. இவை அனைத்தும் செவ்வாய் கிரக தலமை அலுவலகத்துக்கு தெரிய அவன் கைத்து செய்யப்பட்டு நிபந்தனையில் விடுதலையகிரான். காரணம் பின்னால் தெரியும்.

ஆனால், விஜயனுக்கு இப்போதே தெரியும் அவன் உடலில் ஓடும் , ரத்தத்தில் கலந்திருக்கும் . . . . என்பதும் அது கந்தர்வ கள்வன் கொடுத்த ஊசியில் இருந்து அனைவருக்கும் கலந்திருக்கும் என்பதும். அதன் மூலம் நாம் நடவடிக்கைகளை; எண்ணங்களை கூட கணினியில் படிந்து ஒலிக்ற்றைகளாக்கி, செவ்வாய்க்கு அறியப்படுகிறது என்படுவரை.


இவை அனைத்தும் விஜயனுக்கு தெரியும் என்பது செவ்வாய் வாசிகளுக்கும் கந்தர்வ கள்வனுக்கும் தெரியும். அப்படி இருக்க விஜயனை விட்டது என்னவோ ஆச்சரியம் தான் என்றாலும் செவ்வாய்யின் குடுமி விஜயன் கையில் சிக்கி இருக்கும் என ஏவெறும் எதிர்பார்த்திருக்க முடியாது,.


கந்தர்வ கள்வன் தான் பணியில் துரிதமானான். தனிமையில் சென்று அரேபிய காதல் எல்லையில். வெறும் கையால் காற்றினை சுழற்ற அந்த சுழற்சியினால் காற்றின் சம நிலை திரிந்து தான் உள்ளங்கையில் ஓங்கி அடிப்பது போல் செய்ய, உடனே ஒரு பரந்த infographic transparent screens , விரிய பூமியின் உணவு கலங்கியங்களை கண்டறிந்து விரலால் டிரக் செய்து ஒன்றாக சேர்த்து அதஹன் தகவல்களை செவ்வாய்க்கு அனுப்பினான். பின்னாலே விஜயன் நின்றிருந்தான்.


தான் செயல்களை தெளிவாய் செய்த திருப்தியில் திரும்பிய கந்தர்வ கள்வனுக்கு இதியாய் இடித்தது, விஜயனது பிரஸநம். அவன் நாம் செயல் அனைத்தாயும் பார்த்து விட்டனிஎ என்கிற பதடற்ற பயம் வேறு துணை கொண்டது. நிகழும் விசித்திரங்களின் அடிநாதத்தாய் பிடித்த விஜயன் வெற்றி பெற்றதாய் தான் கணக்கு என்றாலும் கந்தர்வ கள்வனும் ஜெய்துவிட்டான்.


மொத்த பூமிக்கும் விசயம் பரவி; ஆக்ரோசமாக தாக்க வந்த போது விஜயனே அவர்களை தடுத்து கந்தர்வ கள்வனை காப்பாற்றினான், பின்னரவர்கள் நிலை அறிந்து மனிதாபிமானாதால் பூமி வாசிகள் உணவினையும் விவசாயத்தையும் கற்று தந்து கந்தர்வ கள்வனை, செவ்வாய்க்கு அனுப்ப, கந்தர்வ கள்வன் விஜயனை செவ்வாய்யின் அறிவியல் வளர்ச்சிகளை கற்று தர அழைத்து சென்றான்.

பின்னாளில், விஜயன் பூமிக்கு மேலும் அறிவியல் ஞானம் கொண்ட விஞ்ஞாணியாய் வந்து சேர்ந்தான், இன்றும் செவ்வாய் நமக்கு பக்கத்து வீடாய் இருந்து வருகிறது. இருவரும் இணைந்து இப்போது தொடர்பு வலயத்தை மற்ற கிரகங்களுக்கும் விரித்து கொண்டே போகிறார்களாம்.


Creative Commons License
செவ்வாயிலிருந்து ஓர் கள்வன் by tamizh short story is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Based on a work at http://writerpavithrankalaiselvan.blogspot.in/.
Permissions beyond the scope of this license may be available at http://freetamilebooks.com/.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post