அறிவொளியில் சில கிறுக்கல்கள் -7- வா போவோம்....

கண்ணாடி கோப்பைக்குள் விழுந்த மின்மினி பூச்சிகள் நாம் ...

ஔிர்கிறோம் தான். உலவுவதில்லை...

வேர் தேவைதான்.. பிடிமானதிற்கு மட்டும் கிளைப்பது வேரின் கடிவாளத்திற்குள் அல்ல... முளைப்பது மட்டுமே..

அண்டம் அகண்டது வானம் என்பதே அதன் துளி .. எண்ணிலா ஏகத்தை அறிவோம் .. அனுபவிப்போம்...

கூட்டுபுழுவாவது பட்டாம்பூச்சியாய் பறக்கதான்... பறக்காவிடில் அதுவே உனது ஐீவசமாதி...

பிறந்தது முதல் உன் முளை ஓய்வதில்லை.. நீ மட்டுமேன் ..

முடிவெடுப்பதில் தெளிவிருக்கனும் அல்லது தீரமிருக்கனும்...

உலகத்தை வெல்லும் வித்தை ஒன்றும் பெரிதல்ல..
நான் சொன்னாலும் நீ ஏற்கபோவதில்லை...

அல்க்சாண்டரின் தீரம்...
அன்னை தெரசாவின் கருணை....
கணியன் பூங்குன்றனின் விசால மனம்...
காந்தியின் பொருமை...
புத்தரின் பற்றின்மை...
பூக்களின் கடமை...

எடுத்து உன்னில் கலந்து நீயே திரிந்து தெரிந்து வா...

உலகம் உன் அடிமை... உள்ளங்கள் உனது பல்லக்கு...

வா... வந்து பார்...பார் என்பது சிறு புள்ளி தான்... சிகரங்கள் அப்புள்ளியின் ஒழுங்கற்ற மேடுகள்

வா .. நாம் காணாத சில சூரியன்கள் ..
நாம் பாடாத பல சந்திரன்கள்....

நாம் வாழாத பல பூமிகள்...

தோரணம் கட்டி... தோகை விரித்து...
பானங்கள் உருவாக்கி... சாமரம் செய்து...

வரவேற்க்க யுகயுகமாய் காத்திருக்கின்றன...

வா போவோம்....

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post