கிரக பிரவேசம் - நாவல்

அதிகாலை 3.35; அமுதகலசமான திங்கள் நிலவு தன் அமுதஒளியை கிரணத்தை அகிலம் முழுதும் பரவிட செய்துகொண்டே பயணம்; தென்றல் அலையும் தெள்ளிய காலம்; வெள்ளி பவளம் போன்ற மினுத்திடும் நிலாவென ரசித்துகிடக்கும் தூங்கக்கூடாத இரவினில் அயர்ந்த வேளையில் அந்த புரோகிதர் வந்தார் ; ஆஸ்தானமாக அவர்தான்.
காலை 6:50 கிரக பிரவேசத்திற்காக குறிக்கபட்ட நேரம் ; அதற்குள் கணபதி ஹோமமும்; லட்சுமி ஸ்கஷ்ர நாம ஹோமமும் செய்தல் நல்லது என்றார் புரோகிதர். ஆம் சரியாய் சொன்னீர்கள் ; அனைத்து தேவைப்பொருட்களும் வாங்கி வைத்திருக்கிறேன் இப்போதே துவங்கலாம் என்றேன் நான் : பவித்ரன் தான்.
ஆகட்டும் தம்பி ; ஹோமகுண்டத்துக்கு சில சம்பரதாயம் உண்டு ; வாயு பகவானையும் அக்னிபகவானையும் வணங்கி 4 கற்களை அடுக்கி சந்தனம், குங்குமம் மஞ்சளால் அலங்கரிச்சு; பூக்களால் அர்ச்சிக்கனும்; என்றபடியே செய்தும் முடித்தார் நான் கேட்டாதால் எனக்கு சொல்லிக்கொண்டே செய்கிறார்; வசிஷ்டர் காலத்துல அவர் சொல்ல சொல்ல அவரது சீடர்களால் ஹோமசாஸ்திரம் எழுத்து வடிவம் பெற்றது அதுபோல இப்போது.
இவையனைத்திற்கும் அறிவியலும் உண்டு; வாயு மந்திரத்த சொல்லி வைக்கபடும் கற்களை வாயுபாதமாக சொல்வர். அப்படி கற்கள் வாயுவாக இருக்க அதன் கட்டுபாட்டினில் அக்னி தோன்ற வேண்டும் என்பதால். வாயுவை காவலாக இருக்கசொல்லி வேண்டுவதே வாயுமந்திரம். இதனால் ஹோமத்தீ மிகாமல் காற்று அடக்கிக்கொள்ளுமாம். திருபதன் யாகவேள்வியில் அப்படி வாயுவை அடக்க சொன்னதால் தான் யாகத்தீ அகலாமல் உயர்ந்தது என்பர்.
ஆக இப்போது ஹோமகுண்டம் தயாராகியது; தம்பி எங்க மத்த பொருட்களெல்லாம் ? இருக்கு ஐயா டேய் வெங்கி கார்த்தி எல்லாம் எடுத்துவாங்க. எல்லாம் கொணர்ந்து வந்தனர் தட்டு தட்டாக மலர்கள் அரலி சம்மங்கி சாமந்தி என ஆறு தட்டிலும் ; ஆஹுதியாக வழங்க பழங்கள்; வேஷ்டி சட்டை (பட்டில்) ; வெற்றிலை பாக்கு ; குங்குமம்; சந்தனம் ஆகியன கற்கண்டு ஒரு தட்டில் என ஒரு பெரும்பட்டியலே இருந்தது.
கார்த்தி இன்னும் குச்சிகள் கற்பூரம் குத்துவிளக்கு எல்லாம் வரல எடுத்துட்டுவா சீக்கிரம்
சரிண்ணா இதோ வந்தறேன்
வக்கீல் சார் பின்னாடி தீபெட்டி இருக்கு எடு ; அப்புறம் நீ போயி ஹோமத்துல உக்காரு
டேய் நீதான்டா உக்காரனும் அதானமுறை.
இதுல என்னடா; அதுல்லாம வேஷ்டி கட்டனுமாம் அதான் உன்ன உக்கார சொன்னேன் எனக்கும் வேஷ்டிக்கும் ஆகாதே
சரிசரி என்றபடி வேஷ்டியை மாற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தான் அதற்குள் கார்த்தியும் வந்திட கார்த்தியையும் உக்கார சொன்னேன்
புரோகிதர் தம்பி உன்கையால கற்பூரத்த பத்தவைச்சு ஆராத்தி காட்டி ஹோமகுண்டத்துல விட்டுரு
வெங்கி பத்தவைடா
இல்ல தம்பி நீதான் செய்யனும் ஆகமத்தை மீறலாகாது என்றார் செய்தேன் அவர் அக்னி தேவ ப்ராப்திரஸ்தோ என்றார் எனக்கு தெரிந்தவரை சமஸ்கிருதத்தில் ப்ராப்திரஸ்தோ என்றால் வாய்க்கட்டும் என்று பொருள் .
ஆகமத்தில் இரண்டு வகை உண்டு ஒன்று சிவாகமம் மற்றொன்று திருமாகமம் உங்களுக்கு எதுபடி♪? என்றார் நான் பிரம்மாகமம் இருந்ததா என்று யோசிக்க வெங்கி சிவாகமம் என்றான்.
அதன்படி கணபதி ஹோமத்திற்கு முன் வில்வ இலையை தண்ணீரில் நனைத்து ஹோமகுண்டத்தின் முகப்பின் முன் வைக்கவேண்டும் இதுவே திருமாகமத்தின்படி துளசி இலை; ஈஸ்வர பிரசாத்தியமாய் விபூதியை நெற்றியில் இட்டுகொண்டபின் ; ஹோமகுண்டத்தில் எரியும் கற்பூரத்துடன் விபூதியை தூவினார் ; தீயிலிட்ட விபூதி காற்றில் கலந்து அறையெங்கும் மணத்தது.
பின் , ஆலங்குச்சியை தெற்கிலிருந்தும் வேலங்குச்சியை வடக்கிலிருந்தும் வில்வபட்டையை மேற்கிலிருந்தும் தீயிற்குள் வைக்கவேண்டும் சொன்னபடி வக்கீல் வைத்து கொண்டிருக்க விஜயனும் விமலனும் அடுத்த அறையில் எதையோ அடுக்கி கொண்டிருந்தனர் . ஹோமத்தீ சிரத்தையுடன் வளர்ந்துவர புரோகிதர் வேத மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தார். அருளியோ அன்பிலோ வெறுப்பிலோ வெகுண்டோ எப்படி சொன்னாலும் தன் பயனை தந்தேன் என்கிற சொல் யாவுமே மந்திரம் தான்.
தீயின் தீரம் வளரதுவங்கியது; தம்பி எல்லாரும் சேவிச்சுக்கோங்கோ
டேய் விமல் விஜயா வந்து கும்பிட்டுகோ

அதன்பின்; மஞ்சளை மிதமாக கரைத்து அரிசியுடன் பிசைந்து அரிசியும் மஞ்சளுமாய் கலந்த கலவையில் பிள்ளையார் என்பது போல் பிடித்து வைத்தார்; மதுரை மீனாட்சி சுந்தரனார் திருக்கல்யாணத்திலதான் பிள்ளையார் சிலையாய் வைத்து செய்வதுண்டு மீதமெல்லாம் மஞ்சள்பிடிதான்.
விமல் எல்லாம் அடுக்கிட்டியா? விஜயா எல்லாம் ஒரு முறை சரிபாத்துக்கோ.

தரியம்மகே சுகாம ஹந்தி புக்திமர்தனாம்; உருவார்
கரியம்பனார் மிருத்யோ மிருத்யுன் ஜெயார்ஜெய பவ

என்கிற மிருத்யுன்ஜெய மந்திரத்துடன் துவங்கியது கணபதி ஹோமம் . சில நிமிடங்கள் இவை தொடர அதற்குள் நான் வெளியில் வந்து விமலனிடமும் விஜயனிடமும் சரிபார்த்தவற்றை தெரிந்துகொண்டு வந்தேன் அதற்குள் மணி 4:15 புரோகிதர் , தம்பி 6:50 காலங்குறிச்சுக்கோ என்க விமலனிடம் 6:50 குறிக்க சொன்னேன் விஜயன் வந்து உள்ள செல்ல 6:50 ஆ அப்ப 5:20 க்கு ஆரம்பிச்சா சரியா இருக்கும் என்றான்.
நான் உள்ளே வந்து டீ குடுக்க; புரோகிதர் இப்ப குடிக்காதே இரு ; ஆஹுதி குடுத்தறலாம் அதுவரை விரதம் அவசியம் என்க நான் ஓரம் வைத்துவிட்டு பார்க்கிறேன் , கார்த்தி என்னை பார்த்து சிரிக்கிறான் வழக்கமாக அவன் தான் டீ கொண்டுவருவான் இப்போ நான்  , அட இத கட்ட நான் பட்ட பாடு இருக்கே அடேயப்பா! என்றெண்ணியபடி இருக்கபுரோகிதர்  அழைத்து ஆஹுதி பொருட்களை தீயிலிட சொன்னார் , மனமார நினைத்து ஆடுகளை பலியிடுவதும் இதற்கு இணைதான் ஆயினும் உயிர்பலிவிட  இவை சாந்தமானது சமூகநலமிக்கது.
த்த்த தானதம் தானதம்த்த தம்  தனதம்தம்தனம் என்பது போல் ஒலி பரவிட காரியசித்தி பவ என்றபடி பழங்களை மூவரும் சேர்ந்து தீயிலிட்டு பின் புரோகிதர் சொன்னார் இவை தீயிலிடும்போது பழங்களின் உயிரானது பிரபஞ்சத்தை அடைந்து வேண்டிய சக்திபெற்று தக்க சமயத்தில் தமக்கு உதவும் என்றார் ; நான் நம்பவில்லை என்றாலும் எலியாட் ஆய்வின் படி மேக மண்டலத்துக்கு அருகில் ஒரு சதர இன்ச்க்குள் 5 லட்சம் உயிரகள் இருப்பதாக சொல்லியிருக்கிறது.
பின் உடை அவை உயிரற்றவை ஆயிற்றே என்றேன்; இவை கடவுளுக்கு நாம் தரும் பொருள் என்றும் பட்டாடை தங்க கிரீடமாகவும் ; பருத்தி உடை வெள்ளி கவசமாகவும் சேருமாம் . பார்ரா நாம தங்க கிரீடத்தையே தானமா தர அளவுக்கு இருக்கோம் என்றேன். கற்கண்டு இவை நிவேத்தியம் போன்றது ; மஞ்சள் குங்குமம் போன்றன சக்தி பிஜங்கள் என்பார்கள் அதாது சக்தி விதைகள். அத்துடன் கணபதி ஹோமம் முடிய; இனி லஷ்மி ஸகஷ்ர நாம ஹோமம் அதற்கு கணவன் மனைவியாக தான் அமரவேண்டுமாம்.
ஒரு நிமிடம் வெங்கியையும்
கார்த்தியையும் பார்த்தேன் சிரித்துவிட்டேன் . கார்த்திக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகிருக்கு அதனால் அவனை அமர சொல்லி நிவேதாவுக்கு போன் செய்து வர சொன்னேன் அடுத்த தெருவில் தான் வீடு அவளும் வர துவங்கியது மணி 4:55

விஜயன் வந்தான் எல்லாம் தயார் இனி காலம் தான் வரனும் . 5:20க்குள்ள முடிஞ்சிரும் இல்ல? என்றான் தெரியலடா 
சரி பாத்துக்கலாம் விடு அட டீ இன்னும்குடிக்கல டேய் வெங்கி இந்தாடா டீ குடி; அவங்களுக்கும் குடுத்துடு விஜயா ; விமல் எங்க போனான்.

இருக்கேன்டா ஒரு சின்ன வேலை
விஜயனுக்கு நித்யா மீது அதீதமான காதல் , அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணிவச்சிரனும் அதுக்குள்ள ரெண்டு வீட்டிலும் பேசிறேன், வெங்கி நீயும் பேசு வக்கீலாச்சே மடக்கு பாக்கலாம்.
டீ குடித்தபடிய புரோகிதர் ஆஹுதிக்கு வந்துவிட்டார்; கார்த்தியும் நிவேதாவும் சேர்ந்து நிற்கும் போது அவர்களை கல்யாணத்தில் பார்த்த மாதிரியே இருந்தது, வெங்கி உனக்கு கிடைச்ச நல்ல அசிஷ்டெண்டா அவன்; நிவேதாவும் இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்கா பாரு ; அந்த கேஸ பத்தி ஏதும் அவங்களுக்கு தேவைபடல இல்ல.
ஆமாடா, கடைசியில் இதுக்காக தான் அந்த கேஸ எடுத்தனோனு இருக்கு நல்லாயிருக்கணும்டா.
அதிருக்கட்டும் வக்கீல் சார் உங்க கதை என்னாச்சு வீட்டுல பேசட்டுமா?
எத?
அட தினம் கால் படுதாமே ச்சே வருதாமே ? கேஸுக்கு கூட போறதில்லையாமே ? கார்த்தி சொன்னான்.
அதுக்குள்ள சொல்லிட்டானா ; இன்னும் கொஞ்சநாள் போகட்டும் டா அதுக்குள்ள கல்யாணம் வேண்டாம்; சரி நீ எப்ப கல்யாணம் பண்ணுவ?
பண்ணமாட்டேன்டா நான் வேஷ்டிக்கே இன்னும் சரிவரல இதுல புடவைக்கு எப்படி?
சரி சுடிதாரா பாத்து லவ் பண்ண வேண்டியது தான.
பாக்கலாம் லவ் வரும்னு தோணல, வந்தா பண்ணலாம் அதிலென்ன?
அப்பாடா இந்த சாமியாரகிட்ட இப்படி ஒரு வார்த்தை வாங்க எவ்வளவு கஷ்டம் ?
டேய்.
அதற்குள் விமலன் வந்தான் சொன்னபடி எல்ராம செஞ்சிட்டேன் என்றார்
என்னடா சொன்ன? என்றான் வெங்கி

சொல்றேன்டா என்க, கார்த்தியும் நிவேதாவும் வர , புரோகிதர் வந்து தம்பி முடிநதது இனி நீங்க நேரம் பாத்து உள்ளே போகலாம்
ஐயா உங்க நம்பர் குடுத்துட்டு போங்க சீக்கிரமே ஒரு கல்யாணம் இருக்கு வந்து செஞ்சிதரனும் என்று கார்த்தியிடம் கண்ணடித்தேன். நம்பர் வாங்கிகொண்டு ,ஐயா போகும் போது நிவேதாவ இறக்கிவிட்டுருங்க என்று அனுப்பி வைத்தேன்.
விஜயா மணி என்ன?
5:10டா இன்னும் பத்து நிமிசம் .
கார்த்தி நீயும் அதுக்குள்ள ஹோமதீர்த்தமெல்லாம் தெளிச்சிட்டு வந்துரு , வெங்கி பக்கத்து ரூம்ல மீட்ர் போர்டு இருக்கு இன்வெட்டரல் இருந்து மெயின் மாத்திரு, விமலா ட்ராக் க்ளியரா உள்ள போகலாம் தானே.
ரெடிடா; காரத்தி வாடா ; எல்லாரும் கிளம்பலாம்.
விஜயா டெக் ஆன் பண்ணு ஏதாவது இன்ஸ்ட்ருமெண்டல் ஆல்பம் போடு வெங்கி எல்லாம் வந்தாச்சா போலாமா?
டேய் வாடா சீக்கிரம்
அவர்களுடன் சேர்ந்து அடிவைத்து உள்ளே நுழைய , துவங்ஊியது எங்கள் பயணம் நீயூரா கிரகத்திற்கு ,இப்போது முதல் கவுண்டவுன் துவக்கம்
(தொடரும்...)
இதுவரை தான் குறும்படத்திற்கு கொடுத்தேன் இதற்குமேல் வருபவை அவர்களால் அவர்களின் பட்ஜெட்டில் சாத்தியமல்ல

************************************************

வானூர்தியில் நான், கார்த்தி எங்கடா என் ஆயுதம். இதோ வந்துட்டேன்ண்ணா.. இன்னும் விடலயாடா நீ என்றான் வெங்கி. எப்படிடா விடுவேன் எல்லாம் என்னோட கலந்துருச்சே.என்கிறபோது கார்த்தி ஒரு 400 எம்எல் கோக் தந்தான். காரத்தி நீபோ. வெங்கி குடிக்கிறியா?  குடு.. ஒன்றிரண்டு சிப்களுக்கு பிறகு.

ஆமா அது என்ன விசயம்? எது?அதான் அப்புறமா சொல்றேன்னு சொன்னியே.. ஒன்னுமில்லடா இன்டர்நெட் கனெக்ஷனோட ஒரு டிவி வெக்கசொன்னேன்... எதுக்கு? யார்கண்டா நீவேறகவிதா கவிதானு இழைச்சிட்டீனா.. டேய் அதெல்லாம் இல்ல மொதல்ல வேல. டேய் கார்த்திக்கும் விஐயனுக்கும் ஆவும்டா...

சரிவா மீடிங் ஹால் போகலாம்.. நாங்கள் செல்ல நடுவில் நிவேதா குறுக்கேவர, ஏ நிவேதா நீ எப்படி இங்க ? இல்ல பாஸ் கார்த்திதான்.நீயுமா இரு அவன.. நான் மட்டுமல்ல நித்யாவும் தான். அவளுமா என்னடா நடக்குது இங்க? என்றான் வெங்கி.எல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும்டா  இவனுங்க சின்சியரா வேல செய்யும் போதே நெனச்சேன் ஏதோ ப்ராட் வேல செய்றாங்கனு . சரிவிடு பேமிலி டடூர் ஆக்கிட்டாங்க. ஆமா நித்யா எங்க? அவ அங்க விஜயனோட.. புரியுது உனக்கு காரத்தி கண்ணுல படல அதான.. கிண்டல்பண்ணாதீங்கண்ணா . நாங்க உன்ன கிண்டல் பண்றமா? இந்த கண்ணு தேடுறது தெரியில பாரு.. டேய் மறைஞ்சிருந்தது போதும் வெளியவா...  சாரிண்ணா , நீ கேட்கும் 350வது  சாரிடா இது. கல்யாணம் ஆகிருச்சில்ல இனி 3500 ஆகிடும்... சரிவா மீடிங் ஹால் போகலாம் என்றான் வெங்கி... வேணாம்டா கார்த்தி முளியே சரியில்ல விஜயன் அங்கதான் இருப்பான் போல அப்புறம் உனக்கு கவிதா ஞாபகம் வந்துரும்..


விமல் எங்க. காரத்தி அந்த லிவர எடு. எடுத்தான். எங்கள் முன் ஒரு திரையற்ற படக்காட்சி  திறந்தது. அந்த லிவர வாங்கி தலைபாகத்திலுள்ள விசையை அழுத்த இனடர்காம் மைக் வந்தது. ஏம்பா விஐயா நாங்க யாருமே நித்யாவ பாத்ததில்ல கூட்டிட்டு வரியா? விமல் உன் கடமை உணர்வ கண்டு நான் வியக்குறேன்? எல்லாரும் ஜென்ரல் ஹால் வாங்கடா..
வந்தார்கள்; நித்யா லஷ்மி கடாசம் என்றால் மதவாதிகள் போருக்குவரலாம். மாடர்ன் தேவதை சாயல். அத்துடன் வர்ணனையை நிறுத்துவது நல்லது இல்லையேல் விஜயன் அடிக்கவரலாம். அவனவளாயிற்றே...

எல்லாரும் ஐாலியாக பேசிக்கொண்டிருக்க விமல் மட்டும் தனிித்திருந்தான் அப்படிபட்டவனல்ல . விமல் என்னாச்சு சொல்லு. ஒன்னுமில்லடா . டேய் என்னபத்தி உனக்கு தெரியுமில்ல அதே போல உன்ன பத்தியும்.... சொல்லு. நாம சரியா போகலடா .. அதனால என்ன கொஞ்சம் லேட்டாதான் போகலாம் பரவாயில்ல..
அதுஇல்லடா நாம வார்ம்ஹோல்ல மாட்டிட்டோம். எல்லாம் முடிஞ்சதுடா இனிநாம பூமிக்கும் போகமுடியாது. நேராவுக்கும் போகமுடியாது. .. என்னடா  சொல்ற? சரிவா பாக்கலாம் என்று ரெகுலர் ஹாலுக்கு சென்றோம்.உண்மைதான்..
விமல் எனக்கு கூகுள் சர்ச் வேணும்.. அது அந்த டிவில தான் வரும் பட் அவங்க யாருக்கும் தெரியவேண்டாம்.. விமல் மறைச்சாலும் இன்னும் எவ்வளவு நேரம் மறைப்ப சொல்லிடலாம். டேய் இன்னும் கொஞ்ச நேரமாவது.

வெங்கி டிவிய ஆன் பண்ணு . ஏன்டா உனக்கு யார் ஞாபகமாவது வந்துருச்சா? ஆமா கூகுள்ள எனக்கு ஒரு பொண்ணு பாக்கபோறோம். நித்யா நிவேதா ரெண்டு பேரும் பக்கத்து ரும்ல இருங்க. அதெப்படிண்ணா நாங்க இல்லாம நீங்க பொண்ணு பாக்கலாம்? என்றாள் நிவேதா. வெங்கி .. கார்த்தி . புரியுது பாஸ் நித்யா நிவதா ரெண்டு பேரும் பக்கத்து ரூம்ல போன வார சீரியல் பத்தி பேசிட்டு இருங்க நாங்க எங்க வேலய முடிச்சிட்டு வரோம்.. சொல்லுங்கண்ணா. விஐயா? இருக்கேன்டா .விமல் நீடிவி ஆன் பண்ணி கனெக்ட் ஆகுதா பாரு. உங்களுக்கெல்லாம் வார்ம்ஹோல் பத்தி என்ன தெரியும் சொல்லுங்க.. வறண்ட ஓட்டைனு தெரியும். கார்த்தி இப்ப பிரச்சனைல இருக்கோம்.வெங்கி உனக்கு? இவருக்கு சட்டத்துல இருக்க ஓட்டையே தெரியாது இதுல புதுசா எதையோ கேட்டா.. விஜயா? கேள்விபட்டுருக்கேன்டா . டேய் பவி உனக்கு தெரியாதுனு மட்டும் சொல்லு நீ குடுச்ச கோக்க எப்படி வெளிய எடுக்குறதுன்னு இவங்களுக்கு காட்டுறேன்.விமல் உன்ன கூகுள் தானடா கனெக்ட்பண்ண சொன்னேன். 
பண்ணி தேடிட்டேன் அதுல அறிவோம் அறிவியல் பவித்ரன் கலைசெல்வன்னு வருது. அத திற என்ன எழுதினேன்னு ஞாபக்மில்ல. டேய் நடிக்காதடா உன்ன பத்தி எனக்கு தெரியும். இப்ப பிரச்சன அதுவில்ல என்றான் வெங்கி..

பவி என்ன நடந்ததுனு சொல்லு . இல்ல என்ன நடக்கும்னு சொல்லு. அண்ணா எனக்கு ஒன்னுமே புரியல ஜாப்பனீஷ் படம் பாக்குறமாதிரி இருக்கு.. .. சரி சொல்றேன் வார்ம் ஹோல்ங்கிறது ஒரு புழுமாதிரி நம்ம கண்ணுக்குதெரியாது.நாம அதன் வாயினுள் நுழைஞ்சிட்டா  நம்மள ஜீரணம் பண்ணி வெளியேத்துற மாதிரி எங்க எப்ப எப்படி வெளிய வருவோம்னே தெரியாது.பட்

என்ன பட்? விமல் சொல்ற டீட்டைல்ல தான் நாம தப்பிக்க வழி . கார்த்தி . எடுத்துட்டு வரேன்ணா. விமல் தயிர் பச்சடி போதும் பிரியாணி சொல்லு. என்னத்த சொல்ல 15 நிமிசமாச்சு நாம மாட்டி அவ்வளோ தான் எனக்கும் தெரியும். சுத்தம். சில விசயத்த நடக்கட்டும்னு விட்டறனும் . கார்த்தி அதுவரைக்கும் தேவையானது எல்லாம் இருக்கா பாரு.
ஆக்சிஜன் பிரச்சனயில்ல நாம வெளிவிடும் கார்பன்டையாக்சைட் ட சுத்திகரிச்சு மறுபடியும் ஆக்சிஜனா தர மாதிரிதான் டிசைன் பண்ணேன்.. சபாஷ் விஐயா அப்ப நாம வெளிய வந்துறலாம். 
கார்த்தி வெங்கி விஜயன் எல்லாம் அந்த ரும்க்கு போங்க. விமல் நீ மட்டும் இங்க இரு.. விமல் அந்த கதவ லாக் பண்ணி ரிமோட் என்கிட்ட குடுத்துடு. விமல் தப்பு பண்றனோ ? இல்லடா அவங்க எல்லாருக்கும் ஆள் இருக்கு நமக்கு யாருமேயில்ல அதனால ஒரு தப்புமில்ல. இருந்தாலும் உன்ன வர சொன்னது கொலை தான. என்னடா கொஞ்சநேரம் காத்தில்ல கிராவிட்டி இல்ல நான் அத அனுபவிச்சதேயில்ல. இல்லடா கொஞ்ச லேட்டாச்சுனாலும் செத்துருவோம். பரவால்லடா உனக்காக தான சாகறேன். அப்படி விட்டுற மாட்டேன்டா ஒருவேளை நான் பிழைக்காட்டியும் இந்த ரிமோட் அழுத்தி நீ அந்த ரூம்க்கு போயிரு. ரெடி3...2...1

அவனுங்க அங்க என்னடா பண்றாங்க எந்த பொசிஷன்? பாஸ் நீங்க திருந்தவே மாட்டீங்களா? சொல்லு விஜயா? அவனுங்க ரெண்டு பேரும் செத்துகிட்டு இருக்காங்க நம்மள ரூம்ல விட்டு லாக் பண்ணிட்டு இந்த ரூம் தவிர விண்கலத்தோட மொத்த காத்தயும் வெளியேத்தி அதோட பிரஷர் மூலமா வெளிய வர பாக்குறாங்க. டேய் இதெல்லாம் தெரிஞ்சுமா  நீ உள்ள வந்த. இல்லடா இங்க வந்ததுக்குபின்னாடி கேமரால பாத்தேன். மொதல்ல அவங்கள காப்பாத்துற வழிய பாக்கலாம்வா. 
முடியாது வெங்கி, காத்துவெளிய போய்தள்ளனும்னா கூட 25 நிமிசமாகும். நம்ம விண்கலம் ஓடிட்டு இருக்கு அதனால எதுரிலதள்ள பிரஷர் பத்தாது. வார்ம் ஹோலே வாக்யூம் உருவாக்கவெளிய தள்ளினாதான் உண்டு. ஒரு மனுசனால 3 நிமிசத்துக்கு மேல மூச்சடக்க முடியாது இப்ப 2 நிமிசம் ஆகிருச்சு இன்னும் ஒரு நிமிசத்துக்குள்ள.நம்மளால வெளிய போக முடியாது அவங்க சாகுறதயும் தடுக்க முடியாது. கதவ தொறங்கடா முட்டாளுங்களா செத்தற போறானுங்கடா..

ரிமோட் மூலமா கதவ திறந்து விமல உள்ள தள்ளிவிட்டுட்டேன். இல்ல நானும் போயாகனும் இல்லனா இவங்க திரும்ப போக முடியாது. டேய், கேன****** என்னவேல பண்ண கொஞ்சம் போயிருந்தா, போயிருப்பேன் அதான. உனக்கு கவிதா வெய்டிங் எனக்கு யாரும் வெய்டிங் இல்ல . ஏன் நாங்கல்ல . சரிசரி டேய் விமலா இன்ஜின ஆப் பண்ணூடா ஏன்டா? ம் டீசல் விலை ஏறிபோச்சு டேய் ரன்னிங்க்ல இருந்தா எப்படிடா ப்ரஷர் பத்தும்? சாரிமறந்துட்டேன். நல்லா மறந்தபோ  நான் வரல எல்லாருமே போயிருப்பீங்க. 
நல்லா கேளுங்க. இந்த ரூம் வால்யூம் 6 பேருக்கு 4 மணி நேரம் தாங்கும். அதுக்குள்ள நாம ஏதாவது கிரகத்துல இறங்கியாகணும். நம்மகிட்ட இருக்க ஆக்சிஜன் கப்பர்ஸ் 3 மணி நேரம் தாங்கும். அதுகுள்ள நாம் ஏதாவது பண்ணி ஆக்சிஜன் லோட் பண்ணியாகணும். 
பவி நாம இன்னும் வெளிய வரலடா அதுக்குபதிலா  இன்னும் உள்ள போயிருக்கோம். மைகாட் என்னடா பன்றது. ஒன்னுமில்ல விமல் நாம வாய்வழியா வரனும் பாத்தோம் ஆனா வேறவழியாதான் வரனும்ங்கிறது விதி. 
இதுவரைக்கும் எவ்வளவு தூரம் வந்துருக்கோம் அதாவது காத்த வெளிய தள்ளின அப்புறம். 1500 கிமீ டா. அப்ப இன்னும் 8 நிமிசத்துல வெளியவந்துறலாம்.இந்த 8 நிமிசத்த எப்படி செலவுபன்றது. வெங்கி இப்ப பொண்ணு பாக்கலாமா? ஓடிரு . எங்க ஓடுறது இந்த ரூம்ம தாண்டி னா சொர்க்கம் தான். சரி நிவேதா கடைசியா எந்தசீரியல் பாத்த சொல்லு ? சன்டிவில வேண்டாம் அது ஒரு வருசமா கதை நகரவேயில்ல. வேற சீரியல்? அதில்லண்ணா நாகினினு சீரியல். வேண்டாம் அது ஒரு எப்பிசோட்க்கு 3மணி  நேரம் ஆகும் அதுக்கு கார்த்தி தான் கரெக்ட்...

பவி இப்ப இன்னும் வேகமா போகுதுடா ஆனா விண்கலம் ஆப்ல தான் இருக்கு. விஜயா மானிட்டர் ஹால் போகனும் அந்த கபாபர்ஸ் குடு. தேவையில்லடா நாம கேமரால பாக்கலாம் இதோ இது மானிட்டர் ஹால் கேமரா எப்படி வேணும்னாலும் ட்ராக் பண்ணிக்கலாம்.  அட 360 வச்சிட்டியா? இது 6 கேமராடா ஒவ்வொன்னும் 90அதனால 360க்கு மேலயே இருக்கும் இன்னும் அக்குரசியா. நீ நடத்துடா.. சரி ஆனா ப்ளானடெஷன் ஆபிசர் தான் பாத்து சொல்லனும். சரி நான் பாக்குறேன்.. சக்சஸ் நாம ஒரு கிரகத்தோட ஈர்ப்பு வளையத்துக்குள்ள நுழைஞ்சிருக்கோம்.  அப்ப வார்ம் ஹோல்லயிருந்து வெளியவந்துட்டமா?  இல்ல வார்ம் ஹோலும் சேர்ந்து தான் நுழைஞ்சிருக்கு.
வாய்ப்பில்லை, வார்ம் ஹோல் எந்த கிரகத்துக்குள்ளயும் நுழையாது. ஆனா நுழைஞ்சிருக்கு. அப்ப அதுவார்ம் ஹோலே கிடையாது. விமல் மறுபடியும் கூகுள் . ஆனா அந்தரூம்ல காத்தில்ல போயி ஆன் பண்ண முடியாது. . விஐயா அங்க எதாவது பண்ண முடியுமா? அங்க கேமரா இல்லடா.. ஆனா கனபார்மா சொல்லு இது வார்ம் ஹோல் இல்லதான? இல்லடா வேற ஏதோ ...

அப்ப அதுக்கு எதுக்கு காத்து.. என்னடா சொல்ற? வெளிய போன காத்த உள்ள எடுத்திட்டு இருக்கேன். நீ ஜீனியஸ்டா . ஆனா 1 நிமிசம் கழிச்சு போ. அண்ணா இப்பாவேற ஏதாவது சீரியல் வேணாமா தாயே.. அண்ணா நான்  எதாவது கவிதை சொல்லட்டா? சொல்லுடா எல்லாரும் டென்சனாகட்டும். ஐயோ திடீர்னு வர மாட்டங்குதே..

நிலவென்ன நைட் வாட்ச்மேனா?
நிதம் இரவில் திரிகிறதே....
ஆண்டவா இவனுக்கு அமாவாசை பற்றிய.அறிவ குடு. லோடட் பவிஇப்ப போலாம். பாத்து கீபோர்ட உடைச்சிடாத.ஏன் கவிதை அவ்வளோ மோசமில்லயே.. கார்த்தி . சாரிண்ணா.. வாடா இப்ப உன்ன மாதிரி அறிவாளி ஒருத்தன் தேவை. மறுபடியும் முன்ன மாதிரி பண்ணிட மாட்டீங்களே. என்னநம்பி நிவேதா இருக்கா. நிவேதா நீ சொல்லு இவன என்ன பண்ணலாம் ? இந்த கவிதைக்காகவே கொல்லலாம். 
அடிபாவி நேத்து ஆஹா ஓஹோன்னு சொன்ன. அது வேற நிவேதா.. உங்க ஊடல் கலாட்டாலாம் அப்புறமா கன்டினு பண்ணுங்க இப்ப வேல.

சாரிண்ணா. வார்ம் ஹோல் இல்லயே அத எதுக்கு கூகுள்ள தேடனும்? கரக்ட்டா கார்த்தி . நடப்பதுநடக்கட்டும் நடப்பதெல்லாம் நன்றாய் நடக்கும் வரை நமக்கும் நல்லதுதான். காத்திருப்போம் நமக்கு இது புரியும்வரை காத்திருப்போம் . புரியும் காலம் கண்களை மூடிய போது. கார்த்தி தனதுமொபைலில் தரமணி பாடல்களை வைத்திருந்தான். அதில் பாவங்களை என்கிற பாடலில் நா.முத்துகுமாரின் கைவரிசயில்...

காயங்களை கட்டிக்கொண்டு உன்னிடம் வந்துவிட்டேன். என்
பாவம் யாவும் தூயவனே எங்கோ மறந்துவிட்டேன்.
என்கிற வரியில் எனது நடுநிசி கனவுகள் தோன்றியது.அதில் உலகின் பெரும் ரகசியத்தை நடராஜன் வடிவில் அறிந்ததைசொன்னேன். இன்றும் அந்த ரகசியம் தேவை படுகிறது.
முகமது ரசூல் அல்லாஹ்
சல் அல்லாஹி ஆவுநபி ஆல் சல்லிம்
யா ரப்யூவல் ஆவுநபி சல்லம் என்று பாடல் முடிந்தது. மைகாட்
நடக்கபோவதை அறிந்தால் எத்தனை துன்பம் என்பதை உணரவேண்டும் . இன்னும் கொஞ்சம் பொறுப்போம். அண்ணா ஆயுதம். கார்த்தி கிட்நாப்ட்  கேஸீக்கு என்ன தண்டனை கோர்ட்ல பெனால்டி  இ்ல்ல 6மாசம் - 3 வருசம் . ஏன்ணா ? விஜயன வர சொல்லு . எதையும் மறைக்காதீங்கண்ணா எல்லாருக்கும் தெரிஞ்சா நிறைய ஐடியா கிடைக்கும் வேறயேதோ பிரச்சன சொல்லுங்கண்ணா.. நாம கடத்தபட்டிருககோம்டா. விளையாடாதீங்கண்ணா இங்க யாரு நம்மள கடத்த போறாங்க . பட்ஜெட் பத்தாது.
விஜயா நாம ஏலியன்ஸால கடத்தபட்டிருக்கோம். எனக்கு ஒரு காரியம் பண்ணனும் . செவ்வாய் கிரகம் இங்க இருந்து எவ்வளவுதூரம் பாரு. நம்மாள அவங்கள கனெக்ட் பண்ண முடியுமா பாரு.. இரு பாக்குறேன் .நானும் வரேன். மானிட்டர் ஹால்ல மானிட்டர் 7ல் பார்த்தபோது. நன்றி கடவுளே.
பவி . செவ்வாய் கிரகம் 7 நாள் . பூமி 6.5 நாள் ரெண்டுமே கனெக்ட் பண்ணமுடியும். ஆனா நாம எங்கயாவது லேண்ட் ஆகணும் அப்ப தான் லொகேஷன் சொல்லமுடியும். குட் இ்ன்னும் 4 நிமிசத்துல நாம லேண்டாக போறோம். ரைட் அவங்க இஷ்டபடியே விடு விட்டுகொடுப்பதுநல்லது தான்.
நாங்கள் தரையிறங்கியது இறக்கபட்டது.ஒரு புதிய இடம் கிரகமல்ல அது ஒரு பேஸ் ஸ்டேஷன். அதாவது எதோ ஒரு கிரகவாசிகள் செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையே உருவாக்கிய விண்வெளி நகரம். 
விஜயா நாம உடனே சேப்ஆகனும் . கவலைவேண்டாம் ஐவி மோட்ல போட்டுறேன். அது என்ன? இன்விசிபிள் மோட் எந்த சிக்னலாலயும் கண்டு படிக்க முடியாது நாமளும் ப்ளூடூத் தவிர எந்த சிக்னலும் பயன்படுத்த முடியாது. சரி பரவாயில்ல இது எவ்வளவு நேரம் தாங்கும். தாங்கும் 1 மாசம் . அவ்வளவுநாள் தேவையில்ல. ஐவி மோட்ல மானிட்டர் பண்ண முடியுமா? தராளமா விணகலத்தையே ஓட்டலாம்.
மானிட்டர் ஆன் பண்ணு எல்லாரும் பாக்கசொல்லு நான் என் ரூம்ல ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வந்தறேன்.
விஐயா மானிட்டர் ஆப். கார்த்தி என்ன பாத்த சொல்லு . அண்ணா ஏலியன்னு யாருமே இல்ல நிறைய மனிதர்கள் தான் இருக்காங்க. வெங்கி. ரோபாட்ஸ் நிறைய இருக்குடா எந்திரன்ல வரமாதிரி. நிவேதா . நான் குடோன் பில்டிங் தான் பார்தேன். நித்யா. ரோபாட்ஸ் மூலமா மனிதர்கள வச்சி என்னமோ பன்றாங்க அதுக்குதான் இந்த நகரத்தையே அமைச்சிருக்காங்க. சுஜாதா கதைகள்ல வரமாதிரி கனவு தொழிற்சாலையாகவும் இருக்கலாம். குட். 

பவி உனக்கு சிலத காட்டனும் . மானிட்டர் ஆன் பண்ணி . இங்க பாரு இந்த டிஜிட்டல் எம்படட் க்ளோசூர். தான் இந்த நகரத்தின் நுழைவு வாயில் அதுலதான் வந்ததும் போனதும் பதிவாகுது. அதாவது பையோமெட்ரிக் போல. இது இந்த நகரம் பூரா ஒரு போர்வை மாதிரி போர்த்தியிருக்கு. எப்படி சொல்றது. புரியுது விஐயா மேல சொல்லு. இந்த க்ளோசூர் பேர்வை க்குள்ள நுழையும் போதே எல்லா பொருளும் ரோபோக்களின் கட்டுபாடடுக்கு வந்துருது. இங்கயிருந்து போற எந்த விண்கலத்தையும் எந்த ரோபோவாலும் அது இருந்த இடத்திலிருந்தே திரும்ப வர வைக்க முடியும். அதெப்படி?

இந்தவீடியோவ பாரு நம்மள மாதிரியே இவங்ககிட்ட சிக்கின விண்கலம் அது. அதுல வந்த மனிதர்கள பாரு. அவங்க அந்த விணகலத்துக்கு ஒரு ரிமோட் ட்ராக்கிங் டிவைஸ் வெச்சிருக்காங்க. விசயம் என்னனா நாம  ஐவி மோட்ல இருக்குறதால அவங்களால வெக்கமுடியல. இப்ப நான் என்ன சொல்றேன்னா நாம ஐவி மோட்ல இருந்த படியே ஏதாவது ஒரு ரோபோவ ஹக் பண்ணி அதுமூலமா நாம அந்த க்ளோசூர் போர்வைய திறந்து போயிறலாம்..தப்பிச்சு போயிறலாம்..

நாம தப்பிக்க போறதில்ல விஜயா. என்னடா சொல்ற? ஆமாம் நாம தப்பிக்க போறதில்ல மொத்த நகரத்தையும் ஒருவழி பண்ணிட்டு தான் போறோம்.
எப்படி சாத்தியம்? இங்க இருக்முறதெல்லாம் ரோபோஸ் சண்டலாம் போட முடியாது...  தெரியும் விஐயா அதுக்கு வேற வழியிருக்கு... அதுக்குநாம தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு.  எதுக்காக இவங்க வார்ம் ஹோல் மாதிரியான ஒன்ன உருவாக்கி பிடிக்கனும் ? இல்ல மனிதர்கள இங்க கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? யார் இத செய்கிறார்கள்? ஏன் செய்கிறார்கள்? எல்லாம் தெரியனும் டேய் அதெல்லாம் நமக்கு எதுக்குடா நாம தப்பிச்சா போதும்டா..

விஜயா கடத்தபடுறது மனிதர்கள். 360ல மினி கேமராஸ் இருக்கா? இருக்குடா ஒரு 3 வேணும். நித்யா நிவேதா. விமல் நீங்கமூணு பேரும் கேமரா ஆப்பரேட் பண்ணி இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்குதா பாருங்க. 
விஐயா நீ எம்படட் களோசூர் போ அதோட ப்ரோகிராம் காப்பி வேணும். வெங்கி . கார்த்தி நீங்க பாக்கவேண்டியது சர்வர் ரூம். ரோபோக்களோட தலைமையகம் தலைவன் அப்புறம் ஒரு கெமிக்கல் லேப். நான் பாக்கவேண்டியது ... விஜயா கேமரா 360 என்ன சிக்னல் ? அது ப்ளூடூத் தான் பிரச்சனயில்ல..
சீ கருமம். என்றாள் நிவேதா . என்னாச்சுநிவேதா.. அண்ணா இங்கவந்து பாருங்க. சொல்லு. இந்த நகரத்துக்கு நடுவுல ஒரு பெரிய மிஷின் இருக்கு. அதுல ஒரு மனுஷன போட்டு தோல உறிச்சு . சின்ன சின்ன ஊசியால குத்தி ரத்தத் உறிஞ்சி. அப்புறம் தசையெல்லாம் உறிச்சு துண்டுதுண்டா வெட்டி ஆசிட்ல போட்டு . எலும்புகள போட்டு கரைச்சுப்பா பாக்கவே கோரமா இருக்கு . எதுக்கு இதெல்லாம் செய்றாங்க?  புரியலயா பவி. எல்லாம் கேமிக்கல்ஸ் காக. டேய் கேமிக்கல்ஸ்காக மனுஷனயா கொல்லுவாங்க?. இருக்கலாம் கேமிக்கலே இல்லாத இடத்துக்கு தேவைபடும் போது. யூ ரைட் விமல். நிவேதா மனுஷன் உடம்புல அதிகம் இருக்குற கேமிக்கல் என்ன? கார்பன் . மெக்னிசம்.க்ளோரைட் இதெல்லாம் அதிகம் இருக்கும். நித்யா நீ என்ன சொல்ற . அண்ணா உங்களுக்கு புரியலயா விமல் சொல்றது சரி ஆனா கேமிக்கல் மட்டுமில்ல ஹார்மோன்ஸ தான் திருடுறாங்க ஹார்மோன்ஸ் தனியா கிடைக்காது. அதுமில்லாம அத ட்ரிக் பண்ணா கெமிக்கல்ச சுரக்கும் இதனால நிறைய கெமிக்கல் கிடைக்கும்..
ம் . அப்ப ஹார்மோனுக்காக திருடுறாங்க. இப்ப எனக்கு தெரியவேண்டியது. இந்த திருடுற ஹார்மோன்ஸ் எல்லாம் எங்க வெப்பாங்க? அது டைரக்ட்டா ஜீப்பிட்டர் போகுது. என்ன ஜீப்பிட்டரா? ஆமா அவங்க தான் இத செய்றாங்க. சரி அப்ப உறிஞ்சும் போதே ஜீப்பிட்டர்ல எடுத்துக்குறாங்க இல்ல.. விஜயா உன் வேலய நிறுத்திரு. 

வெங்கி எதுனா ஒரு ரோபோவ அலேக்கா தூக்கிரு. ஆனா கழுத்துக்குள்ள இருக்குற கேபிள புடுங்கிட்டு தூக்கிட்டுவா. கார்த்தி என் ரூம்ல ஒரு வெள்ள பெட்டி அத எடுத்துட்டுவா.. 
ரோபோ வந்தாச்சுடா. குட் நித்யா நீ கம்ப்யூட்டர் தான . அமாண்ணா. அப்ப இதோட நியூரல் . செக்யூரல் ஸ்கீமாக்கள எடுத்துவை. விஜயா இதோட கன்ட்ரோல் எங்க இருக்கு பாரு..

வெள்ள பெட்டி வந்தாச்சு நிவேதா நீ கெமிஸ்ட்ரி தான என்கூட வா கார்த்தி அந்த கெமிக்கல் லேப் எங்க இருக்கு. இங்கயிருந்து 1 கிமீ. ரோபோ தலைமையகம் தாண்டி. எப்படி போனா சிக்காம போக முடியும்? ரோபோ தலைமையகம் வரைக்கும் யாருமேயில்ல.தலைமையகம் தாண்டுறது தான் கஸ்டம். அத நான் பாத்துக்குறேன் கார்த்தி. நிவேதா போலாமா.

நித்யா உன்னால நியூரல் ஸ்கீமா மாத்த முடியுமா? அண்ணா எல்லாம் பொம்ம பொம்மய இருக்கு. இதுவா இது ஐபார் லாங்குவேஜ் நீ என்ன பண்ற இதுல ப்பேஸ் னு இருக்கு பாத்தியா அதுக்கு கீழ இருக்குற லைன் எல்லாம் காலி பண்ணி அத ரோபோக்குஇன்ஸ்டால் பண்ணு. விமல் நான் கால் பண்ணும் போது நான் சொல்றத மட்டும் செய்.
வெங்கி நீ எங்கங்க எல்லாம் விண்கலம் இருக்குனு தேடி கண்டுபிடி. காரத்தி நான் கால் பண்ணி சொல்லும் போது நீ இந்த ஷட்டர திற நாங்க உள்ள வரனும்.

கெமிக்கல் லேப். நிவேதா இந்தா இந்த மூணு பாக்ஸ்ஸயும் க்ரயோெஐனிக் ஹோல்டர்ல வெச்சிரு . இந்த முதல் பாக்ஸ்ல இந்த பச்ச ட்யூப் ல இருக்குற கெமிக்கல ஹைட்ரஜன் டெட்ரா ஆக்ஸைட்  ஓட கலந்து முதல் பாக்ஸ்ல இன்ஜெக்ட் பண்ணிடு. அதே மாதிரி ரெண்டாவது பாக்ஸ்ல சிகப்பு டியூப். மூணாவது பாக்ஸ்ல வெள்ள டியூப். எல்லாம் இன்ஜெக்ட் பண்ணதும் முதல் பாக்ஸ இந்த டிஸ்மென்ட்லரோட வெச்சி அங்க மனுஷங்கள அடைச்சி வச்சிருக்குறரூம்ல வென்டிலைட்டர் வழியா உள்ள போட்டுட்டு நீ நம்ம விண்கலத்துக்கு போயிடு. நான் இப்போ சர்வர் ரூம் போறேன்.. 

கால் ஆன் தெம் ஒன். விஜயா விமல் நித்யா கார்த்தி வெங்கி நிவேதா எல்லாருமே உங்க டைமர்ல.40 நிமிசம் வைச்சிக்கோங்க. இனி மேல் நமக்குள்ள எந்த காலும் கிடையாது. இங்க சர்வர் ரூம்ல சர்வரரோட ஒரு ஹெல்மட் கனெக்ட் ஆகியிருக்கு இந்த ஹெல்மட்ட ரோபோ தலைவன் போட்டுகிட்டதும் அங்க இருந்தே இவங்க ஒவ்வொரு ரோபோக்களையும் ஆப்பரேட் பண்றாங்க. ஆக இப்ப நான் இந்த ஹெல்மட்ட மாட்டிகிட்டு கொஞ்சநேரம் அவங்கள  கனெக்ட் பண்ணவிடாம இங்க இருக்குற எல்லா ரோபோக்களயும் கன்ப்யூஸ் பண்ண போறேன். அதுக்குள்ள நீங்க செய்ய வேண்டியது.  நித்யா நீ அத்தன ரோபோக்களுக்கும் நாம செஞ்ச டம்மி ஸ்கீமாக்கள 11 வது நிமிசம்த்துலருந்துதான் நீ ஆரம்பிக்கனும். 24வது நிமிசதத்துல முடிச்சறனும். முதல் பத்து நிமிசம் யாரும் எந்த வேலையும் செய்ய.வேண்டாம். நிவேதா நீ 13வது நிமிசத்துல விண்கலத்துல ஏறிடனும். விமல் 14 வது நிமிசத்துல இருந்து அந்த லிவர் மைக் மூலமா நீ மனுஷங்கள கேன்வாஸ் பண்ணி ரோபோ தலைமையகத்துக்கு பின்னாடி இருக்குற விண்கலத்துல 23 வது நிமிசத்துக்குள்ள ஏற வ்சாகனும். விஐயா நீ 16வது நிமிசம்எல்லா விண்கலத்தையும் ஐஆர் மூலமா திறக்கனும் 28 வது நிமிசம் க்ளோஸ் பண்ணிடனும். வெங்கி கார்த்தி நீங்க அதுக்குள்ள முதல் 5 வி்ண்கலத்தையும் திறந்தறனும் .. என்ன ஆனாலும் 26வது நிமிசம் எல்லாரும் விண்கலத்துக்குள்ள இருக்கனும். ஆல் த பெஸ்ட். 

இப்போது அந்த ஹெல்மட்டை மாட்டிக்கொண்டு நாங்கள் கிளம்பும் போது புரோகிதர் சொன்ன மந்திரங்களை சொல்லி பார்த்தேன். இந்த மந்திரங்கள் நமக்கே புரிவதில்லையே ஜீப்பிட்டர் வாசிகளுக்கா புரியபோகிறது.. 
ம் 29 நிமிடம் ஆகிவிட்டது. சர்வர் அட்மினிஸ்ட்ரேட்ல டிஜிட்டல் எம்படட் க்ளோசூர் பாராவில் அட்மினரல் செட்டிங்கில் ஓப்பன் செய்து அதற்கு 13 நிமிட டைம் வைத்தாயிற்று. மீண்டும் அட்மினிஸ்ட்ரேட் ல் ஹாக்டு ஸ்பேஸ்சிப் பாராவில் அட்மினரல் செடடிங்கில் செலக்ட் ஆல் ஸ்டார்ட் ஆல் ட்ரைவன் கண்ட்ரோல். ரன் அப்டூ 45 மினிட்ஸ் தென் கட் அட்மினரல் கண்ட்ரோல் . லீவ் தெம் மேனுவல். எல்லாம் டைப் செய்தாயிற்று என்டர். எல்லா விண்கலத்தையும் அனுபபியாச்சு.இப்ப நம்ம விண்கலத்த அனுப்பனும். பாக்கெட்ல் இருந்த ஸ்பேஸ்சிப் ரிமோட்டை கொண்டு பூமிக்கு அருகில் செல்லும் வரை ஆட்டோமேட்டிக்ஆக வைத்து பின் மேனுவலாக வைத்து செட் செய்து விட்டு. 

வெளியே வந்தேன் கெமிக்கல் லேப்பில் இருந்த மிச்ச இரண்டு பாக்ஸயும் எடுத்துஒன்றை அந்த மிஷினில் போடடு உடைத்து மிஷினை மேனுவலாக ஓடவிட்டேன். ரோபோ தலமையகம் சென்று பார்த்தேன் அத்தனை ரோபோக்களும் பொம்மையென கிடந்தன. இத்தனை பிரம்மாண்டமான விண்வெளி நகரம் இன்று என்னை தவிர யாருமில்லை என்று நினைக்கும் போது ஒருவித சுதந்திரத்தை உணர்ந்தேன்.
தலைமையகத்தில் ஒர வில் அம்பு இருந்தது அம்பு விட்டு விளையாட வேண்டும் என்று ரொம்பநாள் ஆசை எடுத்துக்கொண்டேன். மூன்றாவது பாக்ஸை அந்த ஹெல்மட்டுக்குள் வைத்து விட்டு . விமலுக்கு கால் செய்து.

டேய் பவிடா நான்சொல்றத மட்டும் கேளு. நாம காத்துக்காக ஒரு ரூம்ல இருந்தோம்ல அந்த ரூம்ல கேமரா கண்ட்ரோலுக்குகீழ ஒரு பார்சல் இருக்கும் .அத நித்யாவுக்கும் விஐயனுக்கும் குடுத்துடு. அந்த கவிதா யாருனு பாத்து வெங்கிக்கு கல்யாணம் பண்ணி வெச்சிரு. டேய் நீ எங்கடா இருக்க. முதல்ல நான் சொல்றத கேளு. என் ஆபீஸமனோஜ் கிட்ட குடுத்துரு. டேய்முதல்ல நீ எங்க இருக்க சொல்லு. நான் அந்த விண்வெளி நகரத்துலயே தான்டா இருக்கேன். சர்வர் ரூம்ல ஒரு கேமரா இருந்தத நான் கவனிக்கல நான் பண்ணது எல்லாம் அதுல அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.  நான் உங்களோட வந்தா என்னை வச்சி உங்க எல்லாரையும் புடிச்சிடுவாங்க. எல்லாம் என்னோடயே முடியட்டும். இன்னும் 7நிமிசத்துல எல்லாம் பழையபடி அவங்க கண்ட்ரோலுக்கு மாறிடும் . நான் இங்க இருந்தா நான் மட்டும் தான் காரணம்னு என்னோட மட்டும் விட்டுடுவாங்க. அதான். விஜயனோட அப்பாம்மாட்ட பேசிட்டன் நித்யா வீட்லயும் பேசிட்டேன் அந்த பார்சல்ல அவங்க கல்யாண பத்திரிக்கையும். விஜயனுக்குஇந்தியன் ப்ளானேடேசன்  எம்பசில ஹெட் கமிஷனர் வேலைக்கான ஆர்டரும். நித்யாவுக்கு என் கல்யாணகிப்டா அவ கேட்ட சுஜாதா சார் லெட்டரும் இருக்கும்.  பாய் எல்லாரும் சந்தோஷமா வாழுங்க.
முதல் பத்திரிக்கை அவருக்கு தான் தருனும்னு இருந்தேன் . விஜய் திருப்பு அங்கயே போலாம். இந்த வெண்ண என்ன மயிரு தியாகம் பண்றது செத்தா எல்லாரும் சாகலாம் திருப்புடா வண்டிய. முடியாதுடா  நாம பூமிக்கு போறவரைக்கும் ஆட்டோமேட்டிக்கா வச்சிருக்கான். டேய் அந்த ஆட்டோமேட் செட்டப்ப மாத்துனா போகமுடியாதா . போகலாம் ஆனா அது ஹார்வேர் எனக்கு தெரியாது. என்க்கு தெரியும் என்றாள் நித்யா அதுக குஅதோ அந்த பாக்ஸ் கண்ணாடிய திறக்கனும். திறந்து பார்த்துமுடியல என்றதும் வெங்கி ஓங்கி உதைத்தான் கண்ணாடி உடைந்து ஆட்டோமேட்டிக் ட்ரைவ் நின்றது . .

 7 நிமிடம்முடிந்தது . எல்லாம் மெல்ல மெல்ல அவர்கள் கைவசம் மாற துவங்கியது. முதலில் அந்த க்ளோசூர் சீராக்கபட்டது பின் ஆட்டோமேட்டிக்காக அந்த மிஷின் ஓட்டபட்டது. இவர்கள் விண்கலமும் வந்தது.

விஜயா உள்ள போ என்றான் விமல் . முடியாதுடா இந்த க்ளோசூர் திறக்காம போக முடியாது அதுக்கு உள்ள இருக்க ஏதாவது ஒரு ரோபோ நமக்கு கட்டுபடனும். நான் வேணா ட்ரை பண்றேன் எதாவது ரோபோவ ஹாக் பண்ணி திறக்க வைக்கலாம். இல்ல நித்யா இப்ப எல்லாமே பழையபடி மாறிருக்கும் நாம முயற்சி பண்ணி ஏதாவது ஏடாகூடமா ஆகிற போது.  அப்ப என்ன பண்ணலாம் விமல். எதுவும் வேண்டாம் நித்யா. என்னசொல்றீங்க வெங்கிண்ணா? ஆமா நான் பக்கம் இருக்குற வரைக்கும் அவனால சாகமுடியாது. ஏன்னா நான் வருவேன்னு அவனுக்கு தெரியும்.எனக்கு எதும் ஆக கூடாதுங்கிற பயம் அவனுக்கும் இருக்கும்.


ரோபோக்கள் மெல்ல எழுந்தன .நான் என் மொபைலில் கவிதைகள் படித்துகொண்டிருந்தேன். வெங்கியிடம் இருந்து மிஸ்ஸிட் கால் . வீணாபோனவன் நீ வந்துருக்கனு தான் தெரியுமே சாகறேன்னு சொல்றேன் மிஸ்டுகால். ஹலோ . டேய் இந்த என்னாது அது பேர்வையாமே அத தொறடா. டேய் நீங்க.போகலியா? எப்படி போறது? என்மேல அவ்ளோ பாசமாடா? அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்ல. ஊருக்கு போன மொக்க கேஸுக்கெல்லாம் யார் தீர்த்துவக்கிறது அதான். பாவிடேய் இருடா உன்ன வந்து வெச்சிக்கிறேன் . எனக்கு கவிதா வெய்டிங். ஜயோ ஆண்டவா!. தொறந்து தொல. இருடா இன்னும் நிறைய வேல இருக்கு எல்லா ரோபோவும் என்ன கொல்ல வந்துட்டு இருக்கு. அய்யயோ துப்பாக்கீ எதாவது இருக்கா. ஒரு வில்லும் ஒரே ஒரு அம்பும் இருக்கு . அதவெச்சி என்ன புடுங்குறது. இருடா நானெல்லாம் பிரம்மாஸ்திரம்டா. இந்த வாய் மட்டும் தான்டா உனக்கு . 
கால் கட் பண்ணிட்டு அந்த க்ளோசூர. ட்ரான்பரண்ர்ட் செய்து. ரோபோக்கள் நெருங்க நெருங்க.. 3...2..1. அந்த அம்பை பக்கத்திலிருந்த வைலட்கலர் டியூப் குத்தி எடுத்து மேலே க்ளோசூருக்கு அம்பை விட்டேன். அவ்ளோ தான் எல்லாம் டுமீல். 
கால் செய்து டேய் எவ்ளோ நேரம்டா மேல இருப்பீங்க கீழ வாங்கடா பசிக்குது. 

வரமுடியாது போடா. 






சில நிமிடங்கள் கழித்து விண்வெளியில் எங்கள் விண்கலம் அமைதியாக பறந்து கொண்டிருந்த போது. கார்த்தி வந்து அண்ணா என்னணா பண்ணீங்க. ஒரே அம்பு மொத்த ரோபோவும் காலி . ரோபோமட்டுமில்லடா ஜீப்பிட்டருல இருந்த இதோட தலைமையகமும் காலி. என்னணா சொலறீங்க அதெப்படி? பிரம்மாஸ்திரம் கேள்விட்டுருக்கியா அதான். அதுஎப்படி உங்க கிட்ட. டேய் நம்ம ரீமேக் படம் மாதிரி பேருதான் பழசு உள்ள இருந்த டெக்னாலஜியெல்லாம் புதுசு . மிஷின்ல ஒரு பாக்ஸ் வெச்சனா .  ஹெல்மட்ல ஒருபாகஸ் வெச்சனா . நிவேதா ஒருபாக்ஸ மனுசங்கள அடச்சிவெச்ச இடத்துல போட்டாளா. அதுல என்னணா இருந்தது? நிவேதா போட்ட பாக்ஸ்ல நான் செஞ்ச லிக்விட் ட்ரான்ஸ்மிட்டர் சிப் உள்ள வெச்ச 1000 கொசு இருந்தது அதுஅந்த மனுஷங்கள கடிக்குறதுக்கும் முன்னாடி இந்த சிப் உள்ளதள்ளிடும்.
மிஷின்ல்ல மிளகு சைஸ்ல இருந்த ரேடியோ ஆக்டிவ் பொருள் ஒன்னொன்னும் 150 மில்லிகிராம் யுரேனியம். அத அந்த மிஷின் உறிஞ்சு ஜீப்பட்டருக்கு அனுப்பிருச்சு 2மில்லிகிராமுக்கே இன்னும் ஜப்பான் அவஸ்தபடுது. .

மூணாவது பாக்ஸ் அந்தஹெல்மட்ல வெச்சேன் அதுவும் யுரேனியம் தான் அது எல்லா ரோபோக்குள்ளயும் தூசி மாதிரி போய் ஒட்டிகிட்டது. 

இந்த ரெண்டு பாக்ஸ்ல இருந்த யுரேனியத்த வெடிக்க வைக்க ரெண்டுமே கனெக்ட் ஆனது அந்த க்ளோசூர் தான். அதுமுழுசா + எனர்ஜியால ஆனது அம்போட நுனியில காத்தோட் அயன தடவி மோதவெச்சேன் அதனால எல்லா இடமும் ஸார்ட் ஆகி வெடிச்சிருச்சி அவ்வளவு தான் .. சூப்பர்ணா நீங்க.

காயங்களை கட்டிகொண்டு உன்னிடம் வந்துவிட்டேன் - என்
பாவம் யாவும் தூயவனே எங்கோ மறந்துவிட்டேன்..
என்கிற வரிகள் மூளையை சாந்த படுத்தி கொண்டிருந்தது...


முற்றும்
நன்றி வணக்கம்



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم