பணப்புழக்கம்...

நேற்று 8 நவம்பர் நள்ளிரவு முதல் மத்திய அரசின் அறிவிப்பின்படி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனஅறிவிக்கப்பட்டது. அதன்பால் பல்வேறு வரவேற்புகளும், எதிர்ப்புகளும் எழுந்தன ..
இக்கட்டுரை அதை சார்ந்தது என்றாலும் அதைப் பற்றியது அல்ல... இந்நிகழ்வின் தாக்கத்தால் எனக்கும் என் அக்கா மகன் ஹரீஷ்க்கும் நடந்த உரையாடல் எனலாம்.. அதில் அவன் கேட்ட ஒற்றை கேள்வி என்னை இக்கட்டுரைக்கு இழுத்து வந்தது..
இதுதான் அந்த கேள்வி ,  ஏன் பணம் தேங்குவதால் என்ன? அல்லது சிரிய அளவில் பதுக்குதலில் என்ன தப்பு? வெளிநாடுகளில் கூட தனித்தனியா அவனவன் காசு வச்சிக்குறானே? நான் என் எதிர்காலத்துக்காக சேத்துவக்கிறேன் ஒரு வீடுகட்ட , கார் வாங்க இல்ல சொந்தமா தொழில் தொடங்கனு எத்தனையோ தேவை ? அதனால நாட்டுக்கு அதாவது புழக்கம் இல்லாததால என்ன நஷ்டம் வந்துட போகுது?
சிவாஜி படத்துல  ஆபிஸ் ரூம்க்கு போக சொ்லும் முன்ன ஒரு மீடிங் இருக்கும் ஆடிட்டர் டிரைவர் மாதிரியானவர்களுடன் ... அங்கு சுஜாதா அவர்கள் மேல கேட்ட மொத்த கேள்வியையும் அதன் பதிலயும் இரண்டே வசனத்தில் சொல்லிவிடுவார் . அது அவர் தனிதிறன்.
ஏங்க எங்க ஐயா சம்பாரிக்கிறத அவரே வச்சிக்குறாரு இதுல என்ன தப்பு?
உங்க ஐயா வரிகட்டாம ஏமாத்துறதால தான் அரிசி விலை காய்கறி விலைல இருந்து பால் விலை வரைக்கும் எல்லாம் உன்தலைல தான் விடியும் ..
கிட்டதட்ட அதே கேள்வி அதே பதில் தான். ஆனா கேட்டது ஹரீஷ் ஆச்சே அவ்வளவு விவரமில்லாதவனில்லையே?. அதான் இந்த பதில்..  அவன்பால் அனைவருக்கும் ஒருவேளை தெரியாமல் பதுக்கும் நபர்கள் தெரிந்துகொண்டால் அதன் வாயிலாக திருந்தட்டுமே என்கிற நல்லெண்ணத்துடன்..
முதலில் அந்த கேள்விபடியுங்கள் என் தேவைக்கு சேர்க்கிறேன் .. உங்களின் தேவைக்கு சேர்ப்பது சரி அது நியாயமான விதத்தில் தேவையான தொகைக்குள் இருக்கும் வரை அதன் பெயர் சேமிப்புதான் ..
ஏன் வெளிநாட்டுல கூட தான் வச்சிருக்கான் என்பதில் அந்தநாடு வளரவில்லையாங்கிற கேள்வியும் அடங்கும். இருக்கு அது குறிப்பிட்ட வரம்புக்குள்ள அரசு சார்ந்த நிறுவனத்தில் முதலீடுகளாக இருக்கு...
தன் தேவைக்காகவும் தேவைக்கு மேலாகவும் குறுக்குவழியில் அளவிற்க்கு அதிகமாக ரகசியமாக சேமிப்பதை தான் கருப்புப்பணம் என்கிறோம்..
உண்மையில் , கருப்புப்பணம் பதுக்கபடுவதன் காரணம் எவன் என்ன ஆனால் என்ன என் தேவைக்கும் ஆடம்பர தேவைக்கும் பணம் தேவை என்கிற எண்ணம் தான்..
சரி பணம் புழங்காவிடில் என்ன? இந்த கேள்விதான் முக்கியம்..
உங்களிடம் நான் வெறும் 20 ரூபாய் தாள்கள் இரண்டு தருகிறேன்.. என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அதில் ஒன்றை பத்திரமாக வைத்திருங்கள் அது சேமிப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள்...
மீதமுள்ள 20 ரூபாயை எப்பொழுதும் கலகலவென மனித நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில்  உதாரணமாக நண்பருடன் சென்று டீ குடிப்பதாய் வைத்துக்கொள்ளுங்கள்... 20 ரூபாயை கொடுத்து அந்த ரூபாயை கண்காணியுங்கள்... பத்து நிமிடத்துக்குள் அந்த 20 ரூபாய் இன்னொருவரிடம் சென்று சேர்ந்துவிடும்..
பின் அவரை கவனியுங்கள் அவர்  வேறோரு இடத்தில் அந்த 20 ரூபாயை செலவுசெய்தார் என்று வைத்துகொள்ளுங்கள்..  இப்போது பாருங்கள்
ஒரு  20 ரூபாய் நோட்டுக்கு நீங்கள் இரண்டு டீ குடித்தீர்கள்,.பின் அந்த இருபது ரூபாய் வேறொருவருக்கு தரப்பட்டது.. பின் அவர் அந்த 20 ரூபாய்க்கான ஒரு பொருளை வாங்கி சென்றார். ஆக ஒரு 20 ரூபாய் புழங்குவதால் 60 ரூபாய்க்கான செயல்களை செய்கிறது..
அடுத்த கேள்வி , அப்படி புழங்காததால் நாட்டுக்கு என்ன நஷ்டம் ?
சரி இங்கே புழங்கிய ஒரு 20 ரூபாய் 60 ரூபாய்க்கு பயன்பட்டது, உங்களிடம் கொடுத்தஇன்னொரு 20 ரூபாய் எத்தனை ரூபாய்க்கு அல்லது எதற்கு பயன்பட்டது? இல்லைதானே!  அப்படி புழங்காமல் போவதால் இரண்டு டீ கடைக்காரருக்கு விற்காமல் போகிறது என்று வைத்துகொள்ளுங்கள். அந்த இரண்டு டீயின் விலை மற்ற டீக்களின் மீது சுமத்தபடும்...
இது வெறும் இரண்டு டீ ஒரு 20 ரூபாய் என்பதால் அதே உங்களைப்போல் அந்த குறிப்பிட்ட டீக்கடையில் ஒரு 30 பேர் இருந்தால்? 30*20=600 இந்த 600 ரூபாய் டீக்கு மட்டுமல்ல அனைத்து பொருள்களிலும் ஏற்றம் அடையும்.. அதன் நஷ்டம் என்ன முன்புசெலவு செய்த 20 ரூபாய் 60 ரூபாயாக பயன்பட்டது அல்லவா? அதன்படி பெருக்கிபாருங்கள் , 600*40(இருபது கையில் இருப்பதால்)= 24000 ஆக 24000 ரூபாய் விலை ஏறும் அந்த விலையில் வாங்கும் போது சராசரியாக 10 ரூபாய்  பொருள் .2.4% அதிகரித்து  12.5 ரூபாயாக விற்கபடும். அதன் மீது ஏறும் 2.5 ரூபாய் நஷ்டம் தானே அதும் 30 பேருக்கும் 30*2.5= 75 ரூபாய் பொதுவாய்  நஷ்டம்..
ஆக, வெறும் 20 ரூபாய் சேமிப்பதால், 2.5 ரூபாய் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு முறையும் நஷ்டபடுகிறோம் என்றால் 100 ரூபாய்,1000 ரூபாய் என கணக்கிட்டு பாருங்கள்... (தலைசுற்றினால் ஒரு டீ குடித்தபின் தொடரவும்)..
அப்படியானால் சேமிக்கவே கூடாது என்கிறாயா ? என்று கேட்டால் .. சேமிக்கலாம் , நமது சேமிப்பை திறபடுத்தி புழக்கப்படும் இடங்களில் சேமிக்கலாம் , உதாரணமாக.
அரசு சாரந்த வங்கிகளில் சேமிக்கலாம், எல் ஐ சி போன்ற நிறுவனங்களில் சேமிக்கலாம்.. இவை பிற்காலத்தில் பயமின்றி இருக்க உகந்தவை.. வங்கிகளில் சேமிப்பதால் பணப்புழக்கம் பாதிக்காமல் சேமிக்கமுடியும்.. எப்படின்று ஒருபத்து நிமிடம் பணக்கவுன்டர் பக்கம் நின்று பார்த்து தெரிந்துகொள்ளவும்..
ஒருவேளை ஒவ்வொரு தனிமனித சேமிப்பும் பதுக்கலும் செலவழித்து புழக்கப்பட்டால் பெரும்பான்மையான பொருட்களின் விலை குறைந்துவிடும்.. யாரும்பணத்திற்கு அலையாமல் அத்யாவசிய தேவைகளுக்கு எளிதில் புழக்ககூடிய அளவில் வரும்.. பெரும்பான்மையானவை இலவசமாக அரசு வழங்காமலேயே இலவசமாய் கிடைக்கும்...
நன்றி...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post