ஐல்லிகட்டு - சில பார்வைகளும் கேள்விகளும்.

மனிதகுலத்திற்கு இருவித புரிதலுண்டு ஒன்று தனக்கு எதுவசதியோ அதைமட்டும் சரி என்று கொள்வது. இரண்டு எதுசரியோ அதை வசதியாய் கொள்வது.  எனது நண்பர் குருபாய் சற்றே நியாயமான கேள்வியை பதியவைத்தார். ஒரு சாதியினர் விளையாட்டு எப்படி தமிழர் கலாச்சரம் ஆகும்? என்று . இந்த கேள்வியின் புரிதலே இருவகையானது. ஒன்று ஒரு தனிபட்ட சாதியின் விளையாட்டை தமிழர் கலாச்சாரமென திணப்பது என்பது. இரண்டு என் சாதிக்கும் அந்த விளையாட்டிற்கும் சம்மந்தமே இல்ல அதெப்படி தமிழர் கலாசாரம் ஆகும்? அப்ப நாங்கலெ்லாம் தமிழனில்லையா? என்பதும். அவர் எப்படி சொன்னார் என்பது அவரது பார்வைக்குரியது. என் கடமை பதில் சொல்வது மட்டுமே.

இத அவருக்கு போன் பண்ணி சொல்லிருக்கலாமே ஏன் கட்டுரை. இதுவும் ஒரு வித விளம்பர யுக்தி கலப்புதான். எனக்கும் இதுபற்றி பார்வையுண்டு என்கிற தன்னிலை விளக்கம் தான்..

முதல்ல ஐல்லிகட்டு அமைப்பிற்கான எனது கேள்விகள். முதல்ல ஐல்லிகட்டுக்கான விளக்கம் நீதிமன்றத்தில் வழங்கபட்டதா? ஏறு தழுவுதல் என்பது தான் ஐல்லிகட்டு என்று சொன்னதை அறிவேன். ஆனால் ஐல்லிகட்டு என்பது சல்லிகட்டுஎன்று யாருமே சொல்லவில்லை. சல்லி என்றால் சில்லறை காசுகள் அதை முடிச்சியாக மாட்டின் கொம்பில் கட்டி அதை கழற்ற வேண்டும் என்ற முறை விளக்கபட்டதா என்பது தெரியவில்லை. இதை விட நீங்கள் எல்லாரும் எளிதான ஒரு பார்வையை கோர்ட்டில் வைத்திருக்கலாம். எங்கள் இனத்தின் கலாச்சாரம் என்று குறிபிட்ட மெஜாரிட்டி கணக்கில் எழுதி கொடுக்கலாம். இந்திய அரசியல் சட்டத்தின் படி எந்த ஒரு இன கலாச்சாரத்தையும் தடுக்கும் அதிகாரம் அரசிற்கோ நீதிமன்றத்துக்கோ இல்லை. மான் வேட்டை சட்டபடி குற்றம். ஆனால் வட மாநில குரூமன்ஸ் போன்ற பழங்குடியினர் வருடாவருடம் மானை பலியிடும் விழா இன்றைய காலத்திலும் நடைபெறுகிறது...

இப்ப பீட்டாக்கான கேள்விகள்...
மாடுகள் சித்ரவதை என்பது எப்படி சொல்லுங்கள். ஆட்டவிதி படி வாலை பிடித்தாலே பவுல். விளையாட்டில் விபத்துக்கள் சகஜம் கார் ரேஸில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் தெரியுமா? மேலும் குதிரை ரேஸ் க்ளப்களில் வளர்க்கபடும் குதிரைகள் கூட ட்ரையின் செய்யபடுகின்றன அவை வதையென்று சொல்ல பீட்டாவுக்கு வாயில்லையோ?

இது நீதிமன்றத்துக்கான கேள்விகள்...
நான் லாயர் இல்ல ஆனா என் பாயிண்ட்  ஏற்றுகொள்ள படவேண்டியது நீதிமன்ற கடமை. சொல்வது என் உரிமை.  மாடுகள் வதைக்கபடவில்லை என்றும் ஐல்லிகட்டின் அறிவியல் பண்ணனி என எல்லாம் ஏற்கனவே விவரிக்க பட்டிருக்கும்.  ஒரு பெரும் மக்கள் சந்தையில் தன் மாட்டை வீரியம் உள்ளது என்று விளம்பர படுத்துகின்றனர். இதில் மாடுகள் எதற்கு வதைக்கபட வேண்டும்? ட்ரையென்செய்வது வதைப்பதா? அப்போது தேசிய ஆசிய மாவட்ட மாநில அளவிலான அத்லெட்டிக்ஸ்  நீச்சல் போன்ற போட்டிக்காக தினமும் மனிதர்கள் பயிற்சி செய்விக்கபடுவதும் வதைப்பதற்கு சமம் தானே? மாட்டை விட மனித உயிர் துச்சமா? மருந்து வைப்பதாய் குறை சொல்லியதும் வைக்கபடுவதில்லை என்று விளக்கமளிக்கபட்டதும் நடந்தவையே. நீதிமன்றம் இதை சொல்ல வேண்டும். 3 மடங்கு ஸ்டாமினா இருக்குபூஸ்ட் குடி என்பது ஊக்கமருந்து தானே. டிஎச்ஏ இருக்குற காம்ப்ளானை குடி அறிவு வளரும் . என்பதும் ஊக்க மருந்துதானே . டாலர் சார்பர் என்று ஹார்லிக்ஸ் குழந்தைகளை ஒரே மாதிரியான உடலமைப்பில் வளர்க்க முறபடுவது வதையாகாதா? இதை ஏதும நீதிமன்றம் தடைசெய்யவோ தடைசெய்ய பரிந்துரைக்கவோ இல்லையே ஏன் சட்டமில்லையா தீர்ப்பெழுத மையில்லையா? இன்னுமிருக்கு. நீதிமன்றம் இத்தனை அறிவீனமான கேள்வி கேட்குமா அல்லது நீதிமன்றத்தில் சம்மந்தபட்டவர் கேட்டு நீதிமன்றம் வாயடைத்து கிடக்குமா? மாட்டிற்கு பதில் சிங்கத்தை குடுக்கிறோம் விளையாடுவீர்களா? என்று நீதிபதி கேட்கிறார். அத்தனை முட்டாள்தனம் உடையவரை நீதிபதியாய் எப்படி ஏற்பது. விளையாட முடியுமோ இல்லையோ. சிங்கம் தருகிறோம் என்றால் சிங்கம் மிருகமில்லையா ?. அல்லது சிங்கத்தை வதைப்பது தவறில்லை என்று சட்டமுள்ளதா? அல்லது பீட்டா காளைகளை மட்டுமே தடை செய்யுங்கள போதும் என்று சொன்னதா?. விளையாட்டில் ரிஸ்க் இருக்கிறது என்கிறீர்களல்லவா. வரேன். எப் 1 கார்ரேஸ் உலக பிரபலம் அதில் ரிஸ்க் இல்லையா? விமானம் போனால் தரையிறங்கினால் தான் உயிர் நிசம் என்கிற அளவில் ரிஸ்க் இருக்கிறது. விமானங்களை நீதிபதி தடை செய்வாரா? கடலில் மீன்படிக்க செல்கிறானே. வெயிலில் காய்ந்து குளிரில் உறைந்து உப்பு காற்றில் கருவாடாகி இலங்கையிடம் தப்பி பிழைத்து மீன்கொண்டு வருகிறானே அது ரிஸ்க் இல்லையா? அதற்கு இந்த அரசாங்கமும் நீதிமன்றமும் எந்த வசதி செய்து தர முடியும்?. சரி அப்படி கொண்டு வந்த மீன்களுக்கு உயிரில்லையா? அது உணவிற்காக கொல்லபடுவது நீதிமன்றத்துக்கு தெரியாதா? ப்ராய்லர் கோழி ஒவ்வொரு ஞாயிரிலும் ஆயிரக்கணக்கில் கொன்று சமைக்கபடுகின்றனவே . பீட்டாவுக்கு ப்ராய்லர் கோழிகளை தடைசெய்ய வாய்யில்லையா? இது ஏதுவுமே தடைசெய்ய படவில்லை  ஆனால் விளையாட்டை தடைசெய்ய எப்படி நீதிமன்றம் தலையிட முடியும். மறந்துட்டேன் வீடியோ கேம்ல விளையாடுங்கனு சொன்னதில்ல. இது எப்படி இருக்கு தெரியுமா? ஒருவருக்கு காம உணர்வு வந்தால் தன் மனைவியிடம் உறவு கொள்வதை தடை செய்து. எங்க நாட்டுகாரங்க உறவுகொண்ட வீடியோ இருக்கு பாத்துக்கோ என்பது போல இருக்கிறது.  பீட்டாக்கு அதுவும் அடுத்த திட்டமா இல்ல நீதிமன்றம் அதற்கும் தீர்ப்பு வழங்குமா?

இப்ப குருபாய் மாதிரியான நடுநிலையாளர்களுக்கான கேள்விகள்.. பாய் மேல கேட்டது போல ரப்பாதான் இருக்கும் நீங்கள் இலகுவாக எடுத்துகொள்ளவும்.
சாதிய விதையை தெரியாம வெச்சிடீங்க பாய். மனிதன் கழிவுகள மனிதனே அகற்றும் நிலை மாறணும்னு இதற்கு சம்மந்தமில்லாத ஒன்றை உள்ள செரிகினீங்க  கமல் பட வசனம் மாதிரி. இப்பல்லாம் யாரும் அள்ளுவதில்ல பாய் எல்லாம் கம்பரசர் பொருத்தபட்ட டேங்குகள் தான் அள்ளுது. அத ஆப்பரேட் பண்ண தான் ஆளுங்க இருக்காங்க. இனி விசயத்துக்கு வருவோம். கமல்சார் சொன்ன பதில முதல்ல சொல்லிறேன் அது எனக்கு வசதியா இருக்கும். ஏறுதழுவதல் என்பது கட்டியணைப்பது மாதிரியான அன்பின் செயல் . அதை தடை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அமைதி காலங்களில் அந்த போர்குணங்கள்  மறைந்துவிட கூடாதென்பதற்காக. அலகு குத்துவது போன்ற நிகழ்வுகள் உண்டு அந்த முதல் ரத்தத்தை பார்த்து பயம்தெளிய. என்பதுஅவரது பார்வை.. இப்போ நான். தழுவுதல் என்பதே நிறைய வகையிருக்கு உதாரணமா காதலிய கட்டிபிடிப்பதற்கும் குழந்தையை கட்டிபிடிப்பதற்கும் உள்ள வத்தியாசமே தழுவுதல். வீட்டுல அண்ணனுக்கும்  தம்பிக்கும் சண்டை வரும் போது கடைசி தம்பி யாராவது தடுக்க பின்னாடியிருந்து இறுகபிடிப்பது தழுவுதல் அதையும் மீறி நழுவி அண்ணன் போகும் போது உடல் திமிரும் அது இன்னும் பலபடுத்தும். அப்படிதான் மாடுகளையும். கிட்டதட்ட ஒரு கபடிதான்.இது உணர்வியல் பதில். அறிவியல் பதில் செமன்ஸ் ஜீன்னு நிறைய பேசிட்டாங்க. சைக்கலாஜிக்கலா ஒரு காரணம் உண்டு . வீரம் உடலில் ஊரும். கோபம் காமம் போல அதுவும் ஒரு உணர்வுதான். காமம் வடியும் வடிகால்கள் அனைவருக்கும் தெரியும் சொல்லமுடியாது சென்சாருக்கு போயிடும். கோபம் வார்த்தைகளால் அழுகையால் வடியும் ஆனா வீரம் எப்படி வடியும். பாக்ஸிங் போன்ற விளையாட்டால் என்றால் இது ஒரு அட்வான்ஸ்டு பாக்ஸிங் . சரி எக்ப்ரிமெண்டலா சொல்றேன் உங்கள இறுகபிடிச்சிகிட்டதும் தப்பிக்க உங்க பலத்தை திரட்டி பயன்படுத்தும் போது உடம்பில் ஒருவித சிலிரப்பு ஆக்ரோசம் வருதில்லையா? அதுதான் உங்க ஆரோக்கியத்தின் ஊற்று. அவ்வளவுதான் இந்த விளையாட்டு.

குறிபிட்ட சாதி மட்டும் தான் விளையாடுறாங்க என்பது .சரினு விட்றலாம் ஆனா நான் ஏன் சப்போர்ட் பண்ணனும்னு கேட்டா இங்கவாங்க.

சரி இப்ப ஐல்லிகட்டு நிறு்தியாச்சு மாடெல்லாம் போச்சு னு வைங்க பசு கன்னு போட்டாதான் பால் கறக்கும்.இப்ப ஆர்டிபிசியல் இன்செமினேஷன்  மூலமா பண்ணனும்னா டெஸ்ட் டியூப் பேபி மாதிரி தான் . இரண்டாவது முறை கருவை தாங்க பசுவால் முடியாது. அதவிடுங்க  இந்திய தேசத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் சாதாரணமாய் மாதம் குறைந்தபட்சம் 15லிட்டர் பால் வேணும் நாம் அகிலஉலக அரசியல் பேசும்டீக்கடைகளுக்கு குறைந்தபட்சம் 30 லிட்டர் வேணும்.  அவ்ளோ பாலும் பசு மாடுகிட்டதான் கிடைக்கும் . அந்த டெஸ்ட் டியூப் செமன்ஸ் பாரின்ல இருந்து வரனும். காம்பிடெஷன் இல்லனா அவன் சொல்றதுதான் ரேட் அப்ப பால் விலை லிட்டர் சுமார் 95 ரூபாய்க்கு வரும் . தர ரெடியா? இல்ல இந்த டம்மி சப்போர்ட் தர ரெடியா?..

ஏ1 ன்னு நம்ம நாட்டுமாடுங்க பாலுக்கு கிரேட் உண்டு . நமக்கு தெரிஞ்ச பெரும்பாலான விஷம் சைனைட் அதஅந்த பால்ல கலந்தா சைனைட் தனியா கடைசியில் நிற்குமே தவிர கலக்காது. அதனாலயே பெரியவங்க காப்பியோ பாலோ குடிச்சா கிளாசில் கொஞ்சம் மீதியிருக்கும் அது அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பழக்கமானது.  மத்த கிரட் பால்ல அது லாக்டோ சைனைட் ஆகிரும் அதாவதுபாலும் விஷமாகும். இப்ப சொல்லுங்க காளைகள் வேணும் தான..

எனக்கு தெரிந்து நீண்ட காலமாக டார்வின் தியரிய தொடாம இருப்பது மாடுகள் தான் குரங்கிலிருந்து மனிதன் வரும் முன்பே மாடுகள் இருந்தன . இன்றும் அவை மாடுகளாகவே இருக்கின்றன . நாம் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று பத்திரமாக ஒப்படைக்க வேண்டிய கடமையில் இருக்கிறோம்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post