தமிழிற்கு திருபுகழ்

On the type of muththai tharu pathi thirunagai...

ஒற்றைப்புகழ் பெற்றத் திருமொழி
நற்றைப்பெரு மங்கைக் கிணையவள்
கற்றைச்சுவை கொண்டப் பலகவி - எனகூறும்

மற்றைக்கிளை போன்றப் பலமொழி
தோன்றத்துணை என்றேப் புகழுடை
உற்றத்துறை கற்றப் பலரினை - தனைகொளும்

பற்றைப்பல கொண்டப் பெருமொழி
வித்தைப்பல தந்தக் குருவிவள்
மத்தைப்பல கண்டத் தேனமுது - தானவளும்.

ஏட்டைப்பிடி பாட்டாய் பிறந்தினும்
நாட்டற்படி  ஆட்டும் நிலையடை
வாட்டுத்துயர் தாண்டித் திளையென - பலபாடும்

முக்கண்னுடை மூத்த முதுமொழி
ஒக்கண்னென  ஒன்றில் பெருமையள்
தக்கஞ்செயு தக்கத் தகுதிகள் - பலவாகும்

வெட்டிற்பல சுக்குச் சுக்கென
மட்டிற்பல துண்ணித் துகளென
கட்டிற்பல நுண்ணிச் செய்யுளென - கூறாகும்.

மக்கட்புகழ் பெற்றத் திருமகள்
தக்கக்கவி பாட்டுக் கினியவள்
காக்கத்தலை  போற்றப் புனையது - அமுதாகும்.

அண்டும்துயர் கண்டும் வளமிவள்
தொண்டும்துணை கொண்டக் கிரியிவள்
விண்ணும்அணு கண்டப் பெருமையள் - தமிழாகும்.

மாண்டும்பலர் ஆண்டும் பனிமுகை
தாண்டும்புல புத்தென்ற இளமலர்
தூண்டும்புது பாட்டிற் புதியவள் - தாயெனவே

கற்றைச்சடை கங்கைக் கொண்டவன்
உற்றைத்திரு ஊற்றாய் நிறைந்தவன்
தற்றைத்தனை உற்றத் தாய்மொழி - எந்தமிழே.

நல்லாள்வுன் நீள்தாழ் வாழிய
அல்லற்பிணி நீங்கிச் செழிக்க
முல்லைப்பூ போன்றேப் பூத்துநீ - வாழியவே.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post