புதிய கவிஞர்களுக்கு

புதிதாய் கவிதை எழுதுவோர்க்கு என்னால் ஆன உதவியாய் சில அறிவுரை..

1) கருத்துரை
2) கற்பனையுறை
3)சந்த/வடிவ வுறை
4)தூவல்கள்
5)சொல்லாட்சி.

இது 5ம் ஒரு கவிதைக்கு சமையல் உபகரணங்கள். இவை அமைந்தால் அக்கவிதை படிமங்களாக சிறப்படைகிறது. இவை 5ம்  இன்றியும் எழுதலாம் அவை அவரவரர் விருப்பம்.

1) கருத்துரை:

       இந்த கருத்துரை என்பதே கவிதையின் முதலாகும். மூலம். ஒரு கவிதை என்பது ஏதோ ஒன்றை அழுத்தமாக சொல்ல பயன்படுவது.  காதல் பற்றிய கருத்துள்ளவை என பிரிக்கபடுவதும் இதைக்கொண்டே.. நாம் சொல்லும் கருத்தை முதலில் நிர்மாணித்து கொள்ள வேண்டும்..

2) கற்பனையுறை...

    இது கவிதையை மேன்மை செய்வது ஆகும். நாம் சொல்லும் கருத்தை எதுவரை கற்பனையோடு கலந்து அல்லது கற்பனை எனும் உறைக்குள் வைப்பது என்பதை சொல்லலாம்..

3) சந்த/வடிவ வுறை.
 
    சந்தம் என்பது பாடலின் தாள ராகத்திற்கு ஏற்றபடி அமைத்தல். தானதன தம்தம்.. என்பதற்கு கோடையிடி கொஞ்சும்.. என்று அமைப்பது. வடிவம் என்பது. இத்தனை வரிகள் வரிக்கு இத்தனை வார்த்தைகள் என்றபடி அமைப்பது. ஆக எழுதும் கவிதையை வடிவப்படுத்துதல் அவசியம்.

4) தூவல்கள்..

    இந்த தூவல்கள் அழகு படுத்த செய்வது. ஒரு ஆம்ப்லெட் மீது தூவப்படும் பெப்பர் போல சுவையையும் கூட்டுவது. உதாரணமாக. இயைபுத் தொடர். இந்த ரகம்.. அள்ளி நீர் எடுத்து
அருகம்புல் சாறெடுத்து   என்பதில் இறுதியில் வரும் ஒத்திசைவு அந்த கவிதைக்கு அழகூட்டுகிறது. மற்றும் சுவைசேர்க்கிறது. 

அவற்றுள் நிறைய தூவல்கள் உண்டு.அடுக்குத்தொடர் . இரட்டை கிளவி பயன்படுத்து சந்தத்தை மெருகேற்றுவது. எதுகை மோனை . மிகுதல் கொண்டு வடிவத்தை மேம்படுத்துவது.. அளபடை போன்றவையும் அடங்கும்..

5) சொல்லாட்சி..

    கவிதையின் உச்சகட்ட நிலையிதுவே.. கவிதைக்கான சொல்லும் கருத்திற்கான சரியான சொல்லைக்கொண்டு. அமைத்தல். படிப்பவர் அட்ராசக்க என லயிக்கும் இடமே இந்த சொல்லாட்சியில் தான்..

தீய சொல் சொன்னார்க்கு கேடு. என்பதை

வன்சொல் உரைத்தார்க்கு கேடு. என்பது சொல்லாட்சி..

சுருங்க சொல்லும் சொற்களை எடுப்பதால் நீண்ட கருத்தினை எளிய கவிதையாக்க முடியும். திருக்குறள் இதைதான் செய்தது..

சுழன்றும் ஏர்பின்னது உலகு என்கிற கருத்தின் சொல்லாட்சியை கவனியுங்கள்..

சுழன்றும் உழவற் பின் செலும் உலகு என்பதை சுருங்கி விரிக்கும் வள்ளுவர்தம் திறம் கொண்டு நாமும்  நற்கவிதைகளை இம்மண்ணில் இறைத்துப்  போவோம்.

நாளை உலகில் சேர்த்த காசும். சொத்தும் ஆடை அணிகலனும் இருந்தாலும் நமதில்லை.. இது போன்றவை அல்ல கவிதைகள்...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post