கோடியகவைப் பலகண்டு - தம்மக்கள்
கோடிகணக்கை அறியாது - தேனுண்ணும்
தேனியிற்கு மலராகி - மொழியுண்ணும்
நேசருக்கு அழுதாகி - புனையும்
கவிஞருக்கு சொல்லாகி - வணங்கும்
அன்பர்க்கு தாயாகி - பிள்ளையுடன்
விளையாடும் சேயாகி - இடிந்துரைக்கும்
வீரத்தின் தேவி - அறிவுருத்தும்
ஈரத்தின் ஆவி - உலகத்தே
இன்னுயிர் யாவும் - நின்னுயிராக
மண்ணிருந்தே விண்வளர்ந்த - தாயே
முக்கண் ஈசனையும் முப்பால் குறலோனையும்
முப்புறமும் தந்தாயே - எங்கள்
கற்பனைக்கு சொற்புனைந்து அற்பனுக்கும் ஆற்றலிட்ட
அன்னை உருவாக - நிதம்
இவ்வுலகம் கண்டுயர இன்னும்பல அற்புதத்தின்
ஆதியென நின்றாயே - கடல்
தின்றுபசி கொன்றபின்னும் வென்றுநினை விழுங்கியனும்
வேர்பிடித்து வந்தாயே - மலர்
கொன்றையோனும் கொற்றவையும் காவலென கொண்டிருந்தும்
கொள்கைகொடி தந்தவளே ..- எம்தமிழே
Post a Comment