காவடி சிந்து - முருகக் கடவுள்.

வடிவது கண்டுவிழி நீர்க்கும் - நின்
வதனத்தை கண்டுருகப் பூக்கும் - நினை
எண்ணிவிட துன்பமது எண்ணிலிலா தூரமொடி போக்கும் - பதம் - சேர்க்கும்

அடியதைத்  தேடிவருங் கோடி - உன்
அறுபடை வீடுவரு மன்பர் - திசை
எட்டுமிசை கொக்கரிக்க மெட்டுபறை கொட்டடிக்கக் காக்கும் - துயர் - நீக்கும்

பன்னிரண்டு கரம்கொண்ட காட்சி - விழி
என்னிரண்டு கொண்டதவும் சாட்சி - உமை
தந்ததாெரு வெற்றிதரு தங்கவடி வேல்கொண்ட நீட்சி - கடல்
முன்னிருந்து வெற்றிமகன் ஆட்சி - அவன் - மாட்சி

குன்றுமதில் நின்றகுகன் போற்றி - மலை
காற்றிலாடு சேவற்கொடிப் போற்றி - நிதம்
ஆடிவரும் மயிலுக்கும் தேடிவரும் தேவருக்கும் போற்றி - உடல்
வென்றுவுனில் நின்றவர்க்கும் போற்றி. - வேல் - போற்றி..

கந்தனையே வந்தடைவோம் என்று - நினை
வந்தனையே செய்யுமவர் வென்று - உயர்
நற்புகழும் பெற்றுவிடும் அற்புதங்கள் கற்றுவிட லென்று - உனை
சிந்தையிலே வைத்தவரை இன்று - சரண் - நன்று.

சித்தனவன் செந்தழலால் வந்து - அவன்
சிந்தையுற கந்தகுரு வென்று - தன்
அப்பனுக்கே பாடஞ்சொன்ன சுப்பனையே நாடியிங்கு வந்து - படி
அத்தனையும் தாண்டியிங்கு வந்து - மனம் - சிந்து.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post