விண்வெளி செல்வோம் வா....

வெட்டவெளி யாவும் இங்கு பூ பூத்ததே..
விண்வெளி எங்கும் மின்னொளி மினுக்கிறதே...
விண்மீன்கள் தோரணமாய் தெரிகிறதே...
வெளிச்சத்தில்   வெண்ணிலா கூட வெட்கபடுதே.....
முட்டிக்கொள்ளும் முகில்களும் கூட முத்தமிடுகுதே...
செல்லும் வான்வழி எங்கிலும் வானவில்லே பாதையானதே....
விண்ணில்
மின்னல்கள் மின்ன...
மேளமாக
இடியும் இடிக்க...
இதயம் குதிக்க...
உடலும் சிலிர்கிறதே....


உதிர்க்கும் மழைக்கும் உயிர்க்கும் விதைகளே... என்றும்
விண்வெளி என்பது வியப்பின் கதைகளே...
மிதக்கின்ற கிரகங்களும் ஔிர்கின்ற ஔிகளும்.... என்றுமே
மிதமாய் மனதை வசியம் செய்குதே...
நிதம் நித்தம் மயங்கும் மனிதா...
நிலவினை கடந்து விண்வெளி அடைவாய்...
விண்வெளி செல்வோம் வா ...
விண்ணெறி செல்வோம் வா...
மனதின் மகிழ்வை நிதம் காண...
மங்கள நிகழ்வாய் இதும் ஆக...
விண்வெளி செல்வோம் வா....
விண்ணெறி செல்வோம் வா...
நானும் இங்கு நீயும் விண்வெளி காண
நேரமில்லையா சொல்....
தேவையில்லையா சொல்...
சற்று நேரத்தில் சக்தி நிஜம் தனை..
காண நீயும் செல்...
கண்டது என்ன சொல்...

1 Comments

  1. விண்வெளி செல்வோம் வா.... >>>>> Download Now

    >>>>> Download Full

    விண்வெளி செல்வோம் வா.... >>>>> Download LINK

    >>>>> Download Now

    விண்வெளி செல்வோம் வா.... >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post