மீண்டும் ஒருமுறை

மிஸ்டர் என்றதும் என் கண்ணில் பட்டது அவர் தடித்த அழுத்தம் நிறைந்த மூக்குக்கண்ணாடி. கிராமோபோன் காலத்து கறகறக் குரலுடைய 65க்கு குறைசொல்ல வியலாத வயதுடையவர். முந்திய தொப்பை சற்றுதான் .. இளகிய சதைத் தொங்கும் கைகள் . க்ராஃப்டி ஆர்டிட்ட சட்டை. எமர்லெண்ட் என்னும் ஜீன்ஸ் பாண்ட். கையிலொரு கிட்பாக்ஸ் போன்ற பெட்டி..

ம். பவித்ரன் லெட் ஐ.. சொல்லுங்க நீங்க .. நான் மிஸ்டர் வைத் .. ஓக்கே மிஸ்டர்ங்கிறது இருக்கட்டும் அதென்ன வைத்?. வைத்தியநாதன் சிம்ப்ளி..

சரி சொல்லுங்க.. நான் கேஸ் குடுக்க வந்துருக்கேன். ஸாரி நான் இன்ஸ்ட்ரஸ்டிங் கேஸஸ் மட்டும் தான் எடுக்கிறது வழக்கம். இதுவும் இன்ஸ்ட்ரஸ்டிங்கா இருக்கலாம் இல்ல...

ம் பார்க்கலாம். கேஸ்?... அதுக்கு முன்னாடி டைம் ட்ராவல் பத்தி என்ன நினைக்குறீங்க.?..  ஆனா நான் கேஸ் பத்தி கேட்டதா நினைக்குறேன்.. அதனால தான் கேட்குறேன்.. என்ன பதில் எதிர்பார்க்குறீங்க?..  எதுவாயிருந்தாலும் சரி பவித்ரன். உண்மையில எனக்கு டைம் ட்ராவல் நம்பிக்கை இருக்கு பட் அதை பத்தி பேச பிடிக்காது.

அப்படினா உங்க பர்சனல் விருப்பு வெறுப்புகள கொஞ்ச நேரம் ஒதுக்கி வெக்க முடியுமா? ம். மேல சொல்லுங்க.

முதல்ல உங்க வேலை என்னனு சொல்லிடறேன். இல்லனாஇது பிக்ஷன் கதைனு சொல்லிட்டாலும் ஆச்சிரியமில்ல.. எனக்கு விசயம் மட்டும் சொல்லுங்க..

சரி இதோ இந்த பாக்ஸ் இருக்கே இத நீங்க கண்டுபிடிக்கனும்.. ஏன் இதான் இங்கயே இருக்கே.. ஜி இது ஒரு டைம் மிஷின். இத வர்ற புதன்கிழமை காலை 3:10 க்கு திருடப் போறாங்க.. நான் இத செஞ்சு டெஸ்ட் பன்றதுக்காக போனப்ப இந்த இன்ஸிடெண்ட்ட பாத்தேன்.  அவங்க யாருனு தெரியல.. அதனால இது தொலைஞ்ச அப்புறம் கண்டுபிடிக்கனும்..

சரியா புரியல அவங்க திருடினத பாத்தேங்கிறீங்க அதும் எதிர்காலத்துக்கு போய் அப்ப அவங்க திருடிட்டாங்க. அப்புறம் எப்படி நீங்க இங்க..?.. டைம் மிஷின் ல இன்ட்ரெஸ்ட்டு இல்லனு சொன்னது பொய்தான.. உண்மைதான்.. இன்ட்ரெஸ்ட் இல்ல ஆனா அத பத்தி தெரிஞ்சிருக்குறது தப்பில்லையே... அவர் அங்கங்கள் வியர்த்து உலர்வதை கவனித்து வைத்தேன்..

அந்த நடுக்கம் ஏதோ விபரீதத்தை உணரும் விதமாக இருந்தது. சொல்லுங்க மிஸ்டர்.. வைத். ஒரு சைக்காலஜிஸ்ட் இப்படியா டென்சன் ஆகுறது.. ம் நீ பெரியாளுதான் எப்படி கண்டுபிடிச்சே.. ஏன் கண்டுபிடிக்கனும் நான் உங்கள ஒருமுறை அரஸ்ட் ல விசாரிச்சிருக்கேன்.  உங்களுக்கு நினைவுல இல்லபோல.. ஓ அந்த கேம் ட்ரபிள் கேஸ் சாரி  ஐம் நாட் இன் மைண்ட்..

ஹரே!.. அண்ணா சொல்லுங்க.. தீன் காபி தேவோ .. ம் சரி என்று சென்றவன் கார்த்தி.. நிரஞ்ஜன் கொஞ்சம் லீவ்.. அடுத்த வாரம் அவனுக்கு மேரேஜ் சோ.. எனக்கு பத்திரிக்கை வந்துருச்சு அண்ணா உங்களுக்கு.?.. இல்ல.. ஏன் அண்ணா என்ன பிரச்சன.. சீப் கெஸ்ட்க்கு பத்திரிக்கை தேவயில்ல.. 

காபியோடு நடந்த உரையாடல்கள் இவை..
மேல சொல்லுங்க வைத்தியநாதன்.. ம். நான் முழு உண்மையும் சொல்லிடுறேன்.. நான் எக்ஸ்பிரிமெண்டா..ரெண்டு பாக்ஸ் செஞ்சேன். அதுல டைம்மிஷின் ஒன்னு.. இன்னொன்னு?..(கார்த்தி) அது... அது.. யூசிபிஐ.. என்னது பேங்கா?.. டேய் கார்த்தி .. சாரிண்ணா.. இல்ல கார்த்தி யூசிபிஜ னா ultimate characterized personality injector .. அது என்ன பண்ணும் வெள்ளசார்.. வெள்ளசாரா? ஆமா வைத் னா வெள்ளதான ?.. டேய் மீமீ மூஞ்சா..

சரிசரி விசயத்த சொல்லவிடுங்க.. ம்.. அது என்ன பண்ணும்னா.. அதுல சில ப்ரோக்ராம் பண்ண கேரக்டர் இருக்கு அதுல இருக்குற ஹெட்செட்ட மாட்டி அதுல இருக்குற ஏதாவது கேரக்டர செலக்ட் பண்ணி இன்ஜெக்ட் அழுத்தினா. பேசன்ட் சைக்காலஜி ஸ்ட்ரங்கா இருந்தா அந்நியன் மாதிரி ரெண்டு கேரக்டர்.. இல்லனா பேசண்ட் கம்ப்ளீட்டா அந்த கேரக்டரா மாறிடுவார்.. மொழி தோரணை குணம் திறமைனு எல்லாம் எல்லாம்..

இன்விக்சிபிள்.. சரி அதுல என்னென்ன கேரக்டர்ங்க இருக்கும்.. ராமாயணம் மகாபாரம் வந்த எல்லா கேரக்டரும். பெரிய தலைவர்கள். ஹிட்லர். முசோலினி . மாதிரியான ஆட்கள்னு ஏகம் ஏகம் 3 லட்சத்து 40 ஆயிரம் கேரக்டர்.. அடேங்கப்பா.. எனக்கு மட்டும் கிடைச்சா அர்ஜுனனா மாறி ஏகபட்ட கல்யாணம் பண்ணிப்பேன்.. டேய் கார்த்தி நீயின்னும் நிவேதாவுக்கே லாயக்கில்ல.. கொஞ்சம் ஸ்டாப்..

வைத்தியநாதன் சார். எனக்கு புரிஞ்சது. ஆனா அவங்கள எப்படி பிடிக்குறது?.. அடயாளம் இல்ல க்ளுயில்ல.. ம் .. அதான் பிரச்சன..

அண்ணா நீங்க எந்த கேரக்டர செலக்ட் பண்ணுவீங்க.?.. தெரியல.. என்னணா. ஐன்ஸ்டீன் தியரி எல்லாம் சொல்றீங்க. இது தெரியலனு போய்.. என்ன சொன்ன... சூப்பர்..

வைத் ஐடியா வந்துருச்சி.. எனக்கு சொல்லுங்க.. நீங்க பாத்துட்டு திரும்ப வந்துருக்கீங்க.. அப்ப பாக்ஸ் இங்க தான இருக்கனும்.. சரிதான் ஆனா இல்லயே.?. என்னதிது முட்டாள்தனமா இருக்கு புதன்கிழமைக்கு இன்னும் நாலுநாள் இருக்கு. புதன்கிழமை இருக்குற பாக்ஸ் இப்ப இல்லயா? எப்படி?..

வைத் பை டேட் சொல்ல முடியுமா. 25 பிப்ரவரி... மைகாட் வைத் நீங்க தெளிவா இருக்கீங்களா இல்லயா... இல்ல எங்க டைமவேஸ்ட் பண்ண வந்தீங்களா.? ஏன்?.் ஏன்.. ?..  வைத்தியநாதன்.. இது மார்ச் 13.

ஐயோ மைகாட்.. நான் பின்னாடி போகாம முன்னாடி வந்துட்டேன்.. டியர் வைத்.. பாஸ்ட் இஸ் பாஸ்ட் இறந்தகாலத்துக்கு யாராலயும் போக முடியாது.. சாரி நீங்க சொல்றது உண்மையா இருந்தாலும் இனி இந்த கேஸ் பயனில்ல... நீங்க போய்டு வாங்க.. இதோட விபரீதத்த இந்த உலகம் சந்திச்சு தானாகனும்..

ச்சை என்று துக்கத்தில் அழுதார் வைத்தியநாதன்.. எழுந்துபோனார் டைம் மிஷினை விட்டுவிட்டு பேனார்.. கார்த்தி ஏதோ நோண்ட. நாங்கள் மீண்டும் ஒருமுறை. நேற்றிலிருந்து நிகழ்கிறோம்..

மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம்.. அந்த பாக்ஸ் முக்கியம்.. ரொம்ப முக்கியம்.. உங்களுக்கு தெருவிலோ எங்கேனும் கிடைத்தால்.. எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.. ஆரஞ்சு கலர் டூல்பாக்ஸ் மாதிரியான பைப்பர் சூட்கேஸ் உள்ள ஒரு  ஹெட்போன். இதர போர்டு சமாச்சாரங்கள்..சகிதம்..

மீண்டும் ஒருமுறை ஆரஞ்சு பெட்டி.. மீண்டும் ஒருமுறை விபரீதம்..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post