திறனாய்வு_உதாரணம்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே. 


#திறனாய்வு_உதாரணம்
திறனாய்வுக்கான முறைகளை பற்றி எடுத்துக்காட்டு.. இது.. வழக்கமாக திறனாய்வு என்பது 8 வகைப்படும்.. அதில் ரசிகனாய் திறனாய்வு என்பது தன் விருப்ப கவிஞனின் திறத்தை எடுத்துக்கூறுவதாகும்.. இதுபடி பாரதிதாசனுக்கும் பாரதிக்கும் பல்வேறு திறனாய்வுகள் உள்ளன.. மற்றய ஒன்று  சக கவிஞனாக உரைப்பது...
இங்கு இலக்கண ரீதியாக இதனை சொல்லவில்லை சொல்வதிலும் நியாயமில்லை.. நமக்கு தேவையை மட்டும் பகிர்கிறேன்..  இலக்கணப்படி 8 திறனாய்வு முறை அதில் ஒன்றில் 5 வீதம் 40 கட்டங்கள் உண்டு அவற்றுள் பொதுவானதை எடுத்து வைக்கிறேன்.. இங்கு ரசிகனாக சொல்லப்படும் அல்லது கவிஞனாக ஆராயப்படும்.. என்பதை கருத்தில் கொண்டமையால்.. இப்படி ஒரு படிமம். மற்றவர் கூட்டியோ குறைத்தோ உரைக்கலாம் தவறல்ல.. பெரியவர்கள் எந்தன் இம்முறையில் திருத்தமும் சொல்லலாம் ஏற்றுகொள்வேன்... இது தனிக்கவிதை என்றாலும் புத்தகத்திற்கும் பொதுவியலாக அமையும்...
இனி வரும் திறனாய்வுகள் #கவிப்போம்_திறனாய்வு என்று டேக்கில் வைக்கப்பட்டால் எளிமையாக வடிக்க முடியும்..


இதோ திறனாய்வில் செய்ய வேண்டிய விவரிக்க வேண்டிய கட்டங்கங்கள்...
1) பொருள்நயம்
2) கருத்தாழம்
3) பார்வைநயம்
4) கவிதை வடிவம் / அழகியல்
5) சொல்நயம்
6) புறவியல் சிந்தனை..
7) ரசனைக் குறிய பதம்.. (பெரும்பாலும் இது கட்டாயமல்ல .. கவிப்போமில் தேவைப்படுமென நினைத்து சேர்க்கிறேன் )


இவைகளுக்கு முன் கவிஞரை பற்றிய விவரம். கவிதை இடம் பெற்ற தொகுப்பு.. கவிஞரின் இன்னபிற படைப்பு என்பது குறிப்பிடுவது வழக்கம்.. ரசிகனின் பார்வையில் இது தோன்றுவது இயல்பு.. ( எங்க தலைவர் யாரு தெரியுமா என்னன்ன எல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா ங்கிற மாதிரியான விசயமே)


கவிமுன்னுரை. :
மேற்குறிப்பிட்டுள்ள பாவானது அப்பர் என்றழைக்கப் படும் திருநாவுக்கரசர் அவரால் பாடப்பட்டது.. தேவாரம்.. பாடியவர்.. சமயக்குரவர் நால்வரில் ஒருவர்... இப்பாவானது சுண்ணாம்பு கரைசலால் நிறைந்த தேக்கத்தில் நிற்கவைக்க பட்டபோது பாடப்பட்டதாக வரலாறு..


1) பொருள் நயம் :
      தான் உணர்ந்த சிவனடியினை உரைக்கும் அப்பர் அதற்கு தேர்வு செய்யும் உவமைகளே நீண்டு நிற்கும் இனிமையினை தந்துள்ளது.. தேவர்கள் உணராத சிவனினை நாமறிய சொல்லம் எளிய பதமிது.. இதில் நயமென்ன என்றால்.. சிறிய பாவினில் சொல்லற் கரிய பொருினை உவமையொடு ஒப்புவித்தலே..


2) கருத்தாழம் :
     இப்பாவின் கருத்தாழம் நேசர் மனத்திருந்து மாறுபடுவது இயல்பே.. யாதெலாம் சிவ நிலையென அறிவர் பலர்.. சிவநிலைக்கு நிகரொப்பு தன்னை நேர்வு நேரத்தில் தன் மனத்தின் இனிய கனவுகளில் அனுபவங்களில் தொட்டுச் சொல்லும் எளிய கருத்து இது.. ஆனால் வலிய சந்த இசைப்பால் ஆழப்படுகிறது..


3) பார்வைநயம் :
       கவிஞரின் பார்வை சற்று உணர முயலுங்கள்.  அவரின் நோக்கம் என்பது சிவநிலை எத்தகையது என்று சூழ்ந்திருந்த மறுப்பாளர்களிடம் எதிரப்பாளர்களிடம் சொல்ல விழைகிறார். அவர்களின் இயல்பினை கவர்ந்து அவர்கள் ரசனைக்குரிய இடந்தனை தெரிவு செய்து பதமிடுகிறார்.. தண்டனையாக காவலர்கள் மத்தியில் சுண்ணாம்பு கால்வாயில் நிற்கவைத்து துன்புருத்த படுகையில் தன் தலைவனின் இயல்பை அதனினிமையை. சொல்ல முற்படுகிறார்.. காவலர்களின் அதிகபட்ச ரசனைக்குரிய பொருட்கள் இடங்கள்.. வீணை இசை.  மாலையின் நிலவும் .. வண்டுகளின் ரீங்காரத்துடன் இருக்கும் பொய்கையும். என அவர்தம் ரசனையை ஒப்புடைத்து சொல்லுதல்.. கேட்பவர்க்கு தெரிந்ததை வைத்து விளக்குதல் நல்லாசிரிய குணம்..


4) கவி வடிவம் / அழகியல் :
     இப்பா இலக்கணப்படி விருத்தபா வாகும் .. கவிஞரான அப்பர் இங்கு சிற்றோசையும் நெடிலோசையும். என்றபடி சந்தமிட்டுக் கொண்டது அழகுசேர்கிறது.. அந்த அழகியலில் இரண்டாம் அடியில் மூன்றாம் சீரை நீட்டியதில்.. இ்ன்னுமோர் நயமிடப்படுகிறது.. இறுதி ஏகாரம் கருத்தினை அழுத்தமிடச் செய்கிறது..


5) சொல்நயம் 
      முன்பே சொன்னது போல்.. கவிஞர் இங்கு ஒரு சிற்றோசை நெடிலோசை என்று அமைத்துக் கொண்டமையால்.. சொல் எளிமைபடுகிறது எனினும் தன் ஆதார கருத்தில் துளியும் பிசகாத உவமைகளும்.  அதற்கான ரத்தின சுருக்க சொற்களும் இக்கவியின்.. வசியவித்தை.. நற்சுருதி வீணையும் என்றோ.. மயங்கு வீணையும் என்றா இல்லாமல் .. கச்சிதமான சொல்லாக.. மாசில் வீணையும் என்று அமைக்கிறது வித்தைதானே..


6) புறவியல் சிந்தனை..:
      பொதுவாகவே கவிதை பண்முகம் கொண்டது.. இக்கவிதை தன் கருத்திலும் நோக்கிலும் செலுத்தும் நீரோடை போலமைந்தும்.  கற்றவர்க்கு அவர்தம் சிந்தனைக்கு மற்றொரு வெளி தரதான் செய்கிறது...  பாவின் படி மாசில்லாத வீணையும். நிலவும். வண்டுநிறைந்த குளமும். நல்ல தென்றலும் நிறைந்த இளம் வெய்யிலும் போன்றது சிவனின் திருவடி நிலை..
புறவியலில். (பிக்ஷன் என்பர் ) தனியொரு உலகினை அழகினை ரசித்து சுகித்திட தருகிறது.. நம் கற்பனையில் அந்த இடத்தினை காட்டுகிறது..  மூசு வண்டறை என்பதில்.. பூக்களாகிய பெண்டிர் பின் திரியும் ஆண் கூட்டம் என்றும் சிந்திக்க முடிகிற வெளி தருகிறது..


7) ரசனைக்குரிய பதம்..
    
      இப்பாடலில் என்றனது ரசனைக்குரிய பதம் யாதெனில்..
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
மாலையில் பூக்கும் பூக்களில் தேனிற்காக சூழ்ந்து திரியும் . வண்டுகளை நிறைந்த என்கிற நெடிய உவமையை நச்சென சொல்லும் பதமிது என்பதால்..


#வாழ்க_அப்பர் #வாழ்க_அவர்தம்_தேவாரம்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post