குறளில் எனக்கு பிடித்தது அதன் வரிசைதான் ஒரு பெரும்தன்மை கொண்டவர் இதனை பிரித்து வரிசைபடுத்தி வகைபடுத்தினார். இப்போது பாயிரவியல் என்னும் இயலுக்குள் இருக்கிறோம். பாயிரம் என்றால் இன்றைய மொழியில் ஒன்லைன் எனலாம் மொத்த நூலும் இந்த நான்கு அதிகாரங்களால் குறிப்பாக விளக்கப்படும்.
கடவுள் வாழ்த்து
குறளை முழுதாக கற்பது என்பது வாழ்வை முழுதாக வாழ்வதற்கு சமமானது. அதனால் இது வாழ்க்கை சார்ந்த கற்றல் என்பதால் இதனை இறையருளோடு வள்ளுவர் நமக்கு தொடக்கம் செய்கிறார். ஆதலால் நாமும் முழுமனதாக கடவுளை வணங்கி கற்றலை தொடங்கலாம்.
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
உரை : ஒரு குழலின் இயல்போசை ஊ என்பது போல் மனிதனின் இயல்போசை அகரம். அதனால் அனைத்து எழுத்துக்களும் அகரத்தின் திரிபுகளாம். அதுபோல் உலகம் ஆதிபகவானான பரம்பொருளின் திரிபு எனலாம்.
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
உரை : அனைத்தும் அறிந்த ஆசானான பரம்பொருளின் நன்மை தரும் தாள்(பாதம்) தொழாதவர் என்றால். கற்தனால் என்ன பயன்?.
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
உரை : செடிதனில் ஒன்றிய மலர் போல உயிருடன் ஒன்றியவன் பெரும் புகழுடை திருவடியை சேர்ந்தார் நிலமான உடலிலும் லகிலும் நீண்டு பெருமைபட வாழ்வார்.
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
உரை : வேண்டுதலான பற்றும் வேண்டாமை என்னும் வெறுப்பும் இல்லாத பரம்பொருளை அடியொற்றி வழிவர சேர்ந்தார்க்கு எப்போதும் துன்பம் இல்லை.
அதாவது . கடவுளை போல விருப்பும் வெறுப்பும் இல்லாத நிலைக்கு வந்தோர்க்கு எப்போதும் துன்பம் இல்லை.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
உரை : இறைவனின் செல்வமான அன்பொடு தஞ்சம் புரிந்தவரிடம் பிறப்பு என்னும் அறியாமையில் சேர்க்கும் நல்வினை தீவினை சேராது.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
உரை : உடலெனும் இயந்திரத்தின் வாயில்களான கண் செவி நாசி வாய் தோல். ஆசனவாய் பிறப்புறுப்பு என்னும் ஒன்பதில் ஐந்தான கண் செவி நாசி நாக்கு தோல் வழியாக வரும் மயக்க போதைகளை அறிவால் அவித்தவனின். பொய் தீர்ந்த மெய்யான ஒழுக்க நெறியில் தொடர்ந்து வருவோர் நீண்ட பெருமையுடன் வாழ்வார்..
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
உரை : தனக்கு ஒரு ஒப்பான உவமை இல்லாத கடவுளின் பதம்பற்றி வழிவாழ்வார்க்கு அல்லாது மற்றவர்க்கு மனக்கவலை மாற்றுவது கடினம்.
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
உரை : அறமான கடலில் ஆழங்கண்டவன் வழி வாழாது போவார்க்கு பிறப்பு பிறவி துன்பம் பாவம் என்னும் பிற கடல்களை நீந்தி கடத்தல் கடினம்.
9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
உரை : எண்குணங்களை கொண்ட இறைவனை வணங்காத தலைகள் ,கண்கள் இருந்தும் பார்வை இல்லாதது போல இருந்தும் பயனில்லாதவை.
அதாவது எண்குணத்தான் நின்ற அறவழியை அறிந்து அதுவழி செல்லாத போது அந்த அறிவு இருந்தும் அறியாமையில் இருக்கிறது . எனலாம்.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
உரை : பிறவி என்ற பெருங்கடலை இறைவனடி சேர்ந்து அவன் நெறி வாழ்ந்தவர் நீந்தி பிறவா கரை அடைவர். அடிசேராதார் - அதாவது அந்த வாழ்க்கை முறையில் இல்லாதவர்கள் . பிறவிகளை கடக்கவே மாட்டார் என்கிறார். வள்ளுவத் தெய்வம் ..
Hello all
ReplyDeleteYou are an Unique writer in tamil 👌
ReplyDeletePost a Comment