வள்ளுவரு

ஏடெடுத்து ரெண்டுஅடி
எழுதிவெச்சு புத்திசொன்னான்
சொன்ன புத்தியெல்லாம் நம்ம
வாழ்க்கை உயர்த்திடத்தான் ..

நல்லவழி சொல்லிவெச்சான் உலகத்தையே கையில் வெச்சான்
உள்ளபடி இன்பங்கள நல்லகுறளுக்குள் பொதிச்சுவெச்சான்
ஐயனென நின்னுப்புட்டு ஐயங்கள தீர்த்துவெச்சான்.
நல்லநெறி தன்கருத்தில் நலமொடு பதிச்சு வெச்சான் 

இன்னவகை இல்லையென ஏதுமில்ல வள்ளுவன
சொன்னவக சோர்ந்துபோக சொந்தம் பொதுவாக இருந்துபுட்டான்.

சரணம் 1

பாட்டனவன் சொல்லிவெச்ச பண்பொடுதான் நடந்துவர
கோட்ட கொடி தேவையில்ல நாம எப்போதும் அரசன்தான்..

சொந்த கத சொல்லவில்ல கொஞ்சங்கூட சோகமில்ல
பந்தமென நம்மனசில் பத்திரமா வெச்சிருக்க
துன்பமொன்னு வந்துடாம நன்றிசெய்யும் வள்ளுவரு வல்லவரு நல்லவரு..

{பல்லவி }

சரணம் 2

எக்கச்செக்க சொல்லவிட்டு எதுகமோன கண்டெடுத்து
வித்தகமா வெச்சவரு வெள்ளமன முள்ளவரு.
குத்தங்கொற வந்துப்புட்டா ஆறுதலா கூடநின்னு
முத்துவித நெஞ்சுக்குள்ள வெச்சிடுவார் வள்ளுவரு. ..

துள்ளிவரும் ஆத்துவெள்ளம் அள்ளுமுன்ன ஓடிவிடும்.
உள்ளங்கையில் தேனப்போல உள்ளநெறி சொன்னவரு..

சாதியில்ல மீதியில்ல சட்டமொடு சாயமில்ல
நீதியத்தான் சொன்னவரு நம்மதமிழ் வள்ளுவரு.

{பல்லவி}



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post