கம்பனோர் கத்துக்குட்டி ராமகாவியம் இயற்றும்வரை..
எம்வள்ளுவனும் கத்துக்குட்டி குறளாற்றி முடிக்கும்வரை...
செம்புலவரெல்லாம் கத்துக்குட்டி தம்புலமை வெளிதருமுன்.
உம்புலமையும் கத்துக்குட்டி எல்லாம் கற்கும்குட்டி..
குற்றிலுகரம் அதுவும் குன்றியழகு தருமே
அவ்வுகரம் நீண்டால் அளபெடை யாகுமே.
எவ்விதமாயி னென்ன ஏற்கவொரு கூட்டமிருக்கு...
அவ்விதமே தொடங்கும் அத்தனையும் கவிதைகளே...
முற்றுகளில் முயங்கிட முனைவனாக்கும் தமிழ்..
முக்கூடல் வளர்த்தது பொதிகையதன் திமில்..
கொக்கென காத்திடாது நதியென ஊற்றுமே.
அக்கதை அறிவீரா அகந்தை இதுவே...
Post a Comment