தினமொரு நிதமொரு
மரத்தடி ஓய்ந்தும்
ஞானம் பெறவில்லை
ஞானமும் பணத்தைபோல்
மரத்தில் காய்ப்பதில்லை போலும்.
இறைதேடி வந்த வண்டுக்கு
இறைவனை சொல்லி எண்ணபயன்.
என்றுகூட எண்ணிருக்கலாம் மரம்..
இங்கங்கு தாவும்
குரங்கினத்திடம் மனதையும்
ஒற்றுமை ஒப்பந்தமொன்றை
இறைவன் கையெழுத்திட்டான் போலும்.
கிளைவிட்டு தாவும் பண்பில்
மட்டும் பகுத்தறிவானோம் என்று
பற்றிய பின்விட்டு வருந்தினோம்
மலர்மழை பொழியும் என்று
கனாக்கண்ட வர்க்கு புளியங்காய்மழை
பொழியச் செய்த
மந்திக்கு நன்றிசொல்லற் போலும்
நியதிகள் எதிர்க்க மனமில்லா
ஞானியாக தர்க்கவியல் அறியா
மூடனாக இருக்கின்றோம்
மாலைக் கதிரவன் செம்மை படர்த்த
தாமரை வாடிடும் அல்லி அலங்கரித்துக்கொள்ளும்
இருமை இயற்கையின் தாரகமோ .
இதனை புரிந்து கொள்ளும்
கல்வியை மட்டும் நாம்
யாவரும் பெற்றிருக்கவே இல்லை.
Post a Comment