ஹைக்கூ எழுதலாம் வாங்க..

ஹைக்கூ எழுதலாம் வாங்க..

  எழுதுறதுக்கு முன்ன சில தகவல்கள்.. ஹைக்கூ இன்று சர்வதேச அளவில் பரவியிருந்தாலும் அது ஜென்களின் சொத்து..

ஒரு ஹைக்கூ தன் இலக்கணங்கள் மிகவும் சிலது தான் .

1) ஒரு காட்சி அல்லது ஒரு நிதர்சனத்தை எவ்வித கற்பனையும் உவமை உருவகமும் இல்லாது நேரடியாக சொல்வது .

2) இடம், காலம் ,நபர் அடையாளம் கூடாது..

3) ஒரு சாதாரண வரி நம் சிந்தனைக்குள் தீக்குச்சி போட்டதுபோல் இருக்க வேண்டும்..

4) வாழ்க்கை தத்துவத்தை பின்குறிப்பாக கொண்டிருக்க வேண்டும்..

5) இயற்கையை மட்டுமே பேச வேண்டும்.

6) 17 சிலபல் (அசைகள்) கொண்டது.. 575  5552 755 773 என பதினேழு அசைகளை எந்த கூட்டணியிலும் அமைக்கலும்..

உதாரணம் -

  காற்றும் வீசுகிறது
  மரமும் அசைகிறது. - மண்ணில்
பழங்கள் விழுகிறது

- இயற்கையை சொல்கிறது
- வாழ்க்கை தத்துவம் இருக்கிறது (விதியின் வழி என்பது)
- காற்/று 2 வீ/சுகி/றது - 3 மரமும் -2 அசை/கிற/து 3 - மண்/ணில் - 2  பழங்/கள்  2 விழு/கிற/து -3.... 5+5+2+5 - 17.அசைகள்.

- இடம் நபர் காலம் இல்லை
- காட்சி உள்ளது. நிதர்சனமும் உள்ளது
- இந்த வரியை வைத்து சிந்தித்தால் சில பல சிந்தனைகளை புரிதல்களை தருகிறது..

மேலும் ஹைக்கூவின் ஆரம்ப கால கட்டம்  ஞானத்தை சொல்வதாக அமைந்தது  காரணம் அது ஜென் துறவிகளின் பயன்பாட்டில் இருந்ததால்.. பின்னர் பல ஜப்பானியர்கள் தாங்கள் கண்ட காட்சியை இப்படி  அமைத்து கொடுக்க


 உலகமதனை பற்றிக்கொண்டது...




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post