அறிவாளியின் ஹைக்கூ -1 : இறைவா நீயுமா?
கடவுள் என்றவன்
கண்ணெதிரே தோன்றினான்
காண்வியந்து,
களவொழிந்து தெளிந்தேன்நான்!
கரம் சேர்த்து கைதொழும்பி
இறைவா என்றேன்
சிரம் சாய்த்து ஒளி தளர்த்தி
வரம்தரவா என்றார்!
என்னகேட்க ஏதுகேட்க
எதிறிருப்பவன் படைத்தாவனாயிற்றே
ஆண்டவா யான்என்கேட்க ஒரு க்ளூ குடேன்!
பொன் வேண்டுமா? பொருள் வேண்டுமா?
குபேர செல்வம் வேண்டுமா?
இறைவா நீயுமா தனலக்ஷ்மி யந்திரம் விர்க்க தொடங்கினாய்?
சரி! காணி நிலம் வேண்டுமா?
ரியல் எஸ்டேட்டா?
மோட்சம் வேண்டுமா?
மிச்சம் வாழவேண்டாமா?
சாகாவரம் வேண்டுமா?
வாழ்வு சலிக்காதா?
யோகியாகி என்னருள் பெறுகிறாயா?
இனியும் ஆகவேண்டுமா?
சப்பா.... என்றார்
சுப்பா.... என்றேன்
என்ன வேண்டும் ஏதாவது கேள்?
என்..னா... வே... னு.. ம்..?
சரிப்பா! எல்லோர்க்கும் நல்லவனாய்
வாழும் வரம் தா! என்றேன்.
அப்போது மறைந்தவர் தான்
இன்னும் தென்படவில்லை!
ஏன் இப்படி யோசித்தால்?
இறைவனையே இல்லை என்பவர்க்கு
மத்தியில் அவரே அல்லாடும் போது
எனக்கு எப்படி?
என்றாலும்,
இறைவா நீயுமா?
إرسال تعليق