கும்மிப்பாடல் எழுதுவது எப்படி

இன்று #கும்மிப்பாடல் எழுதுவது பற்றி பார்க்கலாம்.


கும்மி என்பது இசைக்கபடும் ஒருவித கவிதைநடை.. இது வெண்பாவின் சகோதரம் என்பதால் . மாசீர் விளச்சீர் காய்ச்சீர் பற்றிய அறிதல் அவசியம்..


கும்மிக்கு இரண்டு வகையுண்டு. இயற்கும்மி . ஒயிற்கும்மி.. பொதுவாவே கும்மினா பெண்கள் குழுவா பாடுறதுனு தெரிஞ்சதுதான்..


#இயற்கும்மி :


இதுக்கான ரூல்ஸ் க்யா ரே ? அப்படினா. சிம்பிள்.


ஒரு அடிக்கு ஏழசீர் இருக்கணும்.


இந்த மொத்த பாட்டுக்கும் இயற்சீர் வெண்சீர் வெண்டளை மட்டும் தான் வரணும்


பாட்டோட கடைசி சீர் #விளங்காய் சீரா இருக்கணும். (கருவிளங்காய் / கூவிளங்காய்) பெரும்பாலும் முடியும் போது கும்மியடி னு முடிப்பதனால விளங்காய் தானா உட்காரும்..


ஒரு பாராக்கு 2 - நாலு அடி நமக்கு எல்லாமே அப்படித்தான்..


ஏழுசீர் வரதால 4சீர் மேல 3 சீர் கீழ வரணும்.. (திருக்குறள் அமைப்புல)


வழக்கம் போல எதுகை மோனை இயைபு  சிறப்பு .


உதாரணம்:

மையைபூசி என்னை திருடி மயக்கிடும்

மாயப் பெண்ண வளே

கையைபிடித்து கட்டி யணைக்க துரத்தும்

ஆசைக் கோம லமே.


இனி.


#ஒயிற்கும்மி :


இது சிம்பிள் மூணு அடி தான் ஒரு பாரா.


முதல் அடிக்கு ரெண்டு வரி . அதாவது ஏழுசீர் திருக்குறள் டைப்ல.


இரண்டாவது அடி #முடுக்கியல் னு பேரு. இந்த அடிக்கு வெண்டளை தேவையில்லை.. பட் ஒரே மாதிரியான சீர் தான் வரணும் .. 4 சீர் மட்டுந்தான்..


#உதாரணமா:


புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளாமாங்காய். னு இருக்கணும்


மூணாவது அடி ஒரு வரிதான் . 3 சீர் தான் வெண்டளை அவசியம்.


உதாரணம் :


வட்ட மதியும் வாரி யிறைத்த

சொட்டும் நிலவை பருகிட

அள்ளிட அள்ளிட 

அன்பினை தின்றிட

துள்ளி வந்திடும் காதலியே.


#ஓரடிக்கும்மி :


இது சாட்சாத் திருக்குறள் மாதிரிதான் . பட் கடைசி சீர் ஓரசையா இருக்கனும்னு அவசியமில்ல...


உதாரணம் :


சுழலும் பூமி கிறங்கி கெடக்கு

சுழலும் காற்றதன் போதையிலே 



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post