வினோத
மரணங்கள் தொடர்கதை பகுதி 2
வலசையூர்
மத்திய சிறைச்சாலை; பெரும்பாலும் ஊடகங்களுக்கு தெரியாமல் நடக்க வேண்டிய கேஸ்களும்,
விசாரனைகளும் இந்த வலசையூர் சிறைச்சாலையில் தான் நடக்கும். அதற்க்காகவே முன் தினம்
இரவே சிங்கனை
அங்கு
அழைத்து சென்று சிறப்புக்காவல் விசாரனை கூட சிறையில் அடைக்க பட்டிருந்தது.
அது
இருக்கட்டும்; இப்போதய பிரச்சனை யெல்லாம் உதவி ஆணையாளர் கார்த்திகேயன் காணாமல் போனதுதான்.
நேற்று காலை வலசையூர் வர கிளம்பியவர் இன்னும் வந்து சேரவில்லை எந்த வித தகவலும் இல்லை.
இப்படிபட்ட சூழலில் காவல்துறை ஒரு தேர்ந்த டிடெக்டிவை நாடவேண்டியது அவசியம், அப்படி
தேர்ந்த டிடெக்டிவாய் தேர்வு செய்ய பட்டவன்
பிரபு, 25 வயது துடிப்புள்ள இளைஞன் சற்று புத்திகூர்மை உடையவன்..
பிரபு,
தன் முதல் கட்ட விசாரனையை ஆய்வாளர் ரங்கராஜனிடம் இருந்து அனுகினான், சுமார் 20 நிமிட
விசாரனைக்கு பின்ன் நடந்தவை அனைத்தையும் அறிந்து கொண்டான். இப்போதைக்கு பிரபுவின் முக்கிய
வேலை கார்த்திகேயன் கண்டுபிடித்து தருவது. அடுத்தடுத்த விசாரனையில், கார்த்திகேயன்
வலசையூர், வந்தது புலப்பட்டது . ஆனால் சிறைச்சாலை விசாரனை கூடத்திற்க்கு வரவில்லை இடையில்
என்ன நேர்ந்திருக்கும் ? முழுமையான சந்தேகம் சிங்கன் மற்றும் அவனது கூட்டதார்கள் மீதே
என்று மனம் சொல்லியது. என்றாலும் ஒரு புறம் மட்டுமே தேடி உண்மை குற்றவாளியை அறிய இயலாது..
எனவே,
கார்த்திகேயன் காணாமல் போனதில் சிங்கன் முதற்காரணம் ஆக இரண்டாவது காரணம் உண்டு அது
யார்? அதற்கு கார்த்திகேயனின் பழைய கேஸ்கள்
பூர்வீகம், வலசையூர் சம்மந்தபட்ட விசயங்கள் என்று அலசவேண்டும் என்று பிரபு தனது மன
நதியை ஒடவிட்டான்....
இப்படியே
எண்ணப்பல்லக்கில் சித்திர பயணம் செய்து கொண்டிருந்த பிரபுவுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது,
சிங்கன் அகோர மரணமடைந்தது, விரைந்து சென்று பார்த்தான், விசாரனை கூடத்தினுள் இருக்கும்
சிறையில், சிங்கன் தன் வலதுகையை பின்புறமிருந்து முதுகுதண்டினை உடைத்து நுழைத்து, மார்பெழும்புகளை
நொறுக்கி, கிழித்து, வெளிவந்த கையின் சுண்டுவிரலில் ரத்த நாளத்தின் பிடியில் தூக்கிலிட்டது
போல இருதயம் தொங்கியபடிகிடக்க, ஆள்காட்டி விரலை தாடையை துளைத்து பற்க்களை பிடித்து
கொக்கி மட்டினார் போல் மடித்து, பிடித்தபடி இருந்தான், மன்னிக்கவும் இறந்து கிடந்தான்!...
இதுபோன்றதொரு,
கோரமரண சடலத்தை பார்க்கும் எல்லொர்க்கும் தலைசுற்றி வாந்தி மயக்கம் போன்ற விளைவுகள்
ஏற்படும் ஆனால் பிரபுவின் இடதுகையின் ஒரு நரம்பு மட்டும் அதிவேகமாக துடித்துக்கொண்டிருந்தது..
ஏன் இத்துணை கோர மரணம், யார் செய்திருப்பார்கள் இதை, சத்தியமாக இது தற்கொலைக்கான சாத்தியமே
இல்லை, சிறைக்காவல்ரிடம் விசாரனைக்கணை பாய்ந்தது...
பிரபு:
எப்படி நடக்கும், அப்படி நீங்க அந்த நேரத்தில்
என்ன செய்திட்டு இருந்தீங்க?
காவலர்:
சார், ஒரு டீ சாப்பிடலாமேனு போனேன் , வந்து பார்த்தா இப்படி கிடக்குறான்..
பிரபு:
இது உங்க ரெகுலர் டீ டைமா?
காவலர்:
இல்லை சார்,
பிரபு:
பின்ன! ஏன் இன்னிக்கு மட்டும் இந்த டைம்..
கா
வலர்: காலைல இருந்து டியூடி சார் , டிபன் கூட சாப்பிடல அதான்,
பிரபு:
இந்த லொக்கெர் ல cctv camera இருக்கா?
காவலர்:
இருக்கு சார், எல்லா லொக்கெர் லயும் இருக்கு..
பிரபு:
நீங்க போய், இந்த லொக்கெரொட வீடியோ எடுத்துவைங்க அவன் இந்த லொக்கெர் உள்ள போனதுலைருந்து
இப்பவரைக்கும்..
காவலர்
சென்றபின், பிரபு சிறையை சுற்றி நோட்டபார்வை வீசினான். 17mm மொத்தம் கொண்ட அங்கிள்களால் செய்யபட்ட சிறை எளிதில் உடைக்க முடியாது, டியூடி
ஆபிசர் தவிர வேற யாராவது வந்தாங்களானு பார்க்கனும்.
வீடியோ
தயாராக இருக்க, பிரபு play செய்தான், சிங்கன் வந்தது முதல் யாரிடமும் பெசவில்லை, அசையவில்லை,
தூங்குகிறான், பின்னர் உணவு வருகிறது சாப்பிட்டான் பின் தானாக ஏதோ உளறினான்.. பின்
நடந்த சம்பவம் தான் பயங்கரம், அவன் தன் கையை தானே வளைத்து முறுக்கி பின் முன் சொன்னதெல்லாம்
நிகழ்ந்தது...
தன்னை
தானே இந்த அளவில் செய்துகொள்ளமுடியுமா? அவனது எழும்புகள் அத்தனை இலகுவாகுமா? இதை கட்டாயம்
அறிந்தாக வேண்டும்....
<தொடரும்>
إرسال تعليق