டூரொவுக்கு
ஒரு விண்வெளி பயணம் அத்தியாயம் 2 சென்றடைதல்
வாகனம்
சரியாக WD00017XL142K1227 இல் பயணித்து கொண்டிருக்க, முகில் சந்தியாவிடம் HEALTH
REPORT 1 இன் பிரதியை வாங்கிகொண்டு medical cabin க்கு சென்றான்.
அச்சமயம்
கழானி தனக்கு வேண்டிய Technical Treatment Gadgets களை கணக்கு பார்த்து கொண்டிருந்தார்
. ரதன் Planet Nature Description தயார் செய்துகொண்டிருந்தான், முகில் கழானியிடம்
medical sufficiency report ஐ பெற்றுகொண்டு planetation cabin க்கு சென்று கொண்டிருந்தான்.
Monitor
7 இல் விமல் அனைத்து செயல்களையும் வேவு பார்த்துக்கொண்டிருந்தான், அதற்குள் கபிலிடம்
இருந்து அழைப்பு வர விமல் special cabinக்கு சென்றான். அச்சமயம் ரதன் யாருக்கும் தெரியாமல்
விமலின் cabinக்குள் நுழைந்தான். அங்கு எதையோ
ஸோதனையிட்டு திடுக்கிட்டு வெளியே வந்தான். அச்சமயம் 3rd meeting க்காக,
சந்தியா வெளியே வர ரதன் முகத்தை கவனித்தாள் திடீரென ரதன் மயங்கி விழுந்தான், சந்திய
அலற உடனே முகிலும் கழானியும்வந்தனர் அனைவரும் பதற்றதுடன் இருந்த சந்தியாவை கண்டு யோசிக்க
ரதன் விழுந்துகிடந்தது கண்டு கழானி அவனை ஸோதிக்க ; பாவம் அதற்குள் ரதன் இறந்து விட்டிருந்தான்.
[ எனக்கு பிடித்த கதாபாத்திரம் என்பதால் முதல்லயே கொன்னுட்டேன்]
அனைவரும்
சோகத்தில் ஆழ்ந்தனர் கபிலும் விமலையும் தவிர, பின்னர் விமல்; சந்தியா health
report 2 அனுப்பிடு ஆனா ரதன் இறந்த தகவல் அங்கு சொல்லகூடாது, என்று மிரட்டிட சந்தியா
பயந்து பதுங்கினாள். கழானி அவனது உடலை இங்கு வெளியே வீசிவிடுங்கள் என்று விமல் அதட்ட;
கழானி ஒத்துகொள்ளவில்லை யாருக்கும் தெரியாமல் medical cabin ல் இருந்த கிடங்குனுள்
பதுக்கிவைத்தார்.
அச்சமயம்
தொடங்கி கழானிக்கு விமல் மீதும் கபில் மீதும் சந்தேகம் வர, meeting hallக்கு சென்றால் அங்கு ரதன் இறப்பிற்க்கு
5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் அச்சமயதில் கழானி விமல் மற்றும் கபிலின் முகத்தில்
ஒரு அலட்சியத்தை கவனித்தார், அவர் சன்தேகம் இன்னும் வலுத்தது..
இப்பொது
meeting துவங்க ரதன் பதவியில் முகில் அமர்தபட்டான், சந்தியா mediator ஆக நியமிக்க பட்டாள்,
வாகனம் WD 00017XL142K1230 வை கடந்த நொடியில்
MEETING முடிந்தது, அவரவர் cabinக்கு திரும்பினர்..
கழானி
சந்தேகம் வலுக்க, அதே வேளையில் ரதன் இறப்பின் மர்மம் என்ன என்பதை அரிய வேண்டும், யாருக்கும்
தெரியாமல் அதை கண்டறிய விரும்பினார்,இரகசியமாய் விமல் cabin சென்று வேவு பார்த்தார்,
அங்கு அவர் கண்டுபிடித்த ஒரே விசயம் monitor 7 மட்டுமே. யாரும் அறியா வண்ணம் தன் கேபினுக்கு
திரும்பினார்...
தற்போது
சந்தியா health report 6 ஐ ITSRO தலைமையகதிற்க்கு அனுப்பினாள்,கூடவே முகிலின்
planetation report 1 ஐயும் இணைத்து அனுப்பினாள்; 6வது meeting இல் கழானி சற்று உன்னிப்பாக
இரருந்தார் நிகழும் நடவடிக்கைகளை சீராக மனதில் பதிய வைத்துகொண்டார், meeting இல் அவர்
அறிந்த செய்தி duro வை 270 மணிகளில் 17வது imaginery latitude ல சந்திக்க பொவதாக அறிந்திருந்தார்..
பின்
மீடிங்க் கலைய வாகனம் WD00017XL142K1234 இல் நுழைந்தது. கழானி medical cabinஉள் வந்து
எப்படி இந்த மர்மத்தை கண்டறிவதென்று எண்ணினார், கிடங்கு நியாபகம் வர அங்கு சென்று பத்திர
படுத்த பட்ட ரதனின் உடலை BMSN [BRAIN MEMORY SAVING NODE ] MACHINE இல் கிடத்தினார்..
(BMSN என்பது மனித மூளையை செயல்படுத்த வைக்கும் ஒரு இயந்திரமாகும். அதவது heart
attack வந்த நோயாளியை CURRENT SUPPLY செய்து பிழைக்க வைப்பதுபோல் மூளைக்கு என்று கண்டறிந்த
மெசின்)....
முதலில்
நிகழ்ந்ததை அறிய அவனது மூளை சேமிப்புகளை ஒரு பிரதியாக (copy) எடுத்து ஒரு கணினியில்
சேமித்து வைத்து கொண்டார், பின்னர் fluctuation 1 செலுத்த ஒரு அசைவும் இல்லை,
[fluctuation 1, 2700milli volt] , fluctuation 2 விற்க்கும் பயனில்லை; கழானி வருத்தபட்டார்
காரணம் fluctuation 3 இல் செயல் படவில்லையேல் மூளை செல்கள் செத்து திரவமாகிவிடும்,
என்பதால், தயங்கினார் பின்னர் திடமனதுடன் fluctuation 3 ஐ செலுத்தினார். ஒரு அசைவும்
இல்லை, மிகுந்த கவலையுடன் தன் முயற்சியில்
தோற்றதை எண்ணி வருத்தப்பட்டார், அந்த துக்கத்தில் ஆழ்ந்த அவரை ஒரு clap sound கலைத்தது,
சுற்றும் முற்றும் பார்த்தார் கழானி யாருமில்லை ஆயினும் clap sound கேட்க, ரதன் மீது
கவனத்தை செலுத்தினார் அவனது கால் தரையில் தட்டுவது clap sound ஆக கேட்பது கண்டு பூரித்துப்போனார்.
[பின்னாடி கத்தி தீம் ம்யூசிக் வேன்டுமென்றால் போட்டு கொள்ளுங்கள்]
என்ன
மிஸ்டர் கழானி; நான் பிழைக்க மாட்டேன்னு முடிவு பண்ணிடீங்களா? ; ரதன்
ஆனா
நீ ஏற்கனவே இறந்து போய்ட்ட நியாபகம் இருக்குதா? ; கழானி.
ஆமா,
ஆனா அது உண்மையில்ல திடீர்னு மூளை வேலை செய்யல்ல அதனால தான் இப்படி ஆகிறுக்கு ஆனா உங்க
ட்ரீட்மென்ட் பரவாயில்ல..; ரதன்.
ஆனா
இறப்பதுக்கு முன்னாடி நடந்தது எல்லாம் நியாபகம் இருக்கா இல்ல restore பண்ணட்டுமா?
; கழானி
ஏன்
மறுபடியும் சாகனுமா? டாக்டர் , மறந்துடீங்களே restore heat ல brain நியூரான்கள் எல்லாம்
damage ஆகலாம்னு. ஆனா என்ன நடந்ததுனு எனக்கு ஞாபகம் இருக்கு; ரதன்..
அதுவுமில்லாம,
இப்பவெ என் முதுகுதண்டு என் உடம்போடு ஒத்துழைக்க மாட்டேங்கிறது.. எப்ப்படியோ இந்த கதைக்கு
நீங்க ஹீரோ ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்... ரதன்..
இல்ல
நான் எப்பவும் கீ குடுத பொம்மையாகத்தான் இருக்க விரும்புரென், அதுவும் ஹீரோ லவ் எல்லாம்
பண்ணனும் நமக்கு அது ஆகாது : கழானி
ஆனாலும்
நீங்க லவ் பண்ணவேண்டிய கட்டாயம் ஒன்னு இருக்கு டாக்டர், ஏன்னா நான் ஆட்டி வைப்பவன்
ஆகிட்டென் , நீங்க ஆடித்தான் ஆகனும்..
நீங்க
என்ன சொல்லவரீங்க ரதன் புரியலையே; புரியும் அடுத்த meetingக்கு டைம் ஆச்சி கிளம்புங்க
அங்க புரியும் உங்களுக்கு முக்கியமா நாம தெரிஞ்சிக்க வேண்டிய தகவல்கள், duro வ நாம
மீட் பன்னபொர இடம், இப்போ நாம் கடந்து கொண்டிருக்கும் கிரக நிகர் கோடு...
Meeting
hall நிறைந்தது. அதன் common display வில்
முகில் தனது ஆய்வுகளை திரையிட்டு விளக்க துவங்கினான்..
Duro
ஒரு அதி இயல்பான கிரகம் அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் பூமியை போலவே இருக்கிறது..
இன்னும் 150 மணி நேரத்தில் நாம் டூரோவை 17வது
கற்பனை செங்குத்து ரேகையில் சந்திக்க போறோம், என்று முடித்தான் முகில்.. சந்தியா இதுவரை
13 health report அனுப்பிவிட்டாள். இப்போது வாகனம் WD00017XL142K1240 இல் மிதந்து கொண்டிருப்பதாக
கூறினாள், அத்துடன் MEETINGமுடிந்தது...
வாங்க
டாக்டர் என்ன தகவல் கிடைச்சது? ரதன்.
பெரிசா
ஒன்னும் இல்ல ஆனா நீங்க கேட்ட ரெண்டும் கிடைச்சது, உங்க பதவி இப்ப முகில் கிட்ட இருக்கு
latitude 17 ல duro ல தரையிரறங்க போறோம், இன்னும் 150 மணி நேரத்தில் , இப்ப
WD00017XL142K1240 வை கடந்திருப்போம்...
அப்ப
முகில் எதையும் முழுசா கண்டுபிடிக்கல, ஆனா டாக்டர் சார் எனக்கு ஒரு சந்தேகம், முகில்
எப்படி அதாவது கபில் விமலுக்கு எப்படினு நினைக்கிறீங்க..
அதையென்
கேட்குறீங்க எப்பவோ பூமியில கொத்தடிமைகள் இருந்தார்களாம், அப்படி ஒரு அடிமை தான் முகில்..
கழானி,
அப்ப
ஒரு பெரிய சூழ்ச்சி இருக்கு அதனால நாம இப்பவே இணையனும், என் கேபின்ல மன்னிக்கனும் இப்ப
முகில் கேபின் ல 4வது அலமாறில 3வது drawer ல
ஒரு செகப்பு நிற பாக்ஸ் இருக்கும் அதை
யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்துருங்க நான் இறந்ததுக்கு முன்னாடி என்ன நடந்ததுனு
அப்புரம் சொல்ட்ரேன்..
ஆனா
அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ரதன், ஒன்னு முகில் இல்லாதபோது எடுத்திரலாம் ஆனா
monitor 7 அ நெனைச்சாதான்....
மிஸ்டெர்
கழானி, அப்ப நீங்க சந்தியாவ வர சொல்லுங்க... ரதன்
(தொடரும்).....
Post a Comment