:அறிவொளியில் சில கிறுக்கல்கள் 3: ஏலெ
ஏலெ நிமிடம் பிறந்தது உனக்காக
ஏலெ நேரம் வந்தது உனக்காக
வாலே பூமி பந்தாளவா ,
உதயம் உண்டானது வா!
ஏலெ கறைகள் கரைந்தது நமக்காக
ஏலெ தடைகள் தகர்ந்தது நமக்காக
வாலே மேகம்தாண்டி போவோம் வா
மழையில் நனைவோம் வா!
உலகம் என்னும் பூவின் மேலே
நாம் உள்ளம் என்னும் மகரந்தம்
ஓசோன் கிழித்து வளியை திறப்போம்
ஒளியில் கலந்து மிணுமினுதிடுவோம்!
ஏலெ நட்சத்திரம் ஆகலாம் வானில்
ஏலெ விண்வெளிக்கு போகலாம் SOONனில்
வாலே இரவினிலே கலக்கிடலாம் வா
விடியலிலே விழுந்திடலாம் வா!
ஒளிதூறலிலே ஒலிபெருக்கி நாம் நனைந்திடுவோம் - கரைந்திடுவோம்!
மறுகாலையிலே ஓய்வேடுக்க நாம் இறங்கிடுவோம் - உறங்கிடுவோம்!
உறாங்கிருக்கும் வேளைதன்னில் நமது கண்ணில் - கனவு கண்டு திளைத்திடுவோம்!
ஏலெ காகிதமாய் பிறக்கலாம் பலமுறை
ஏலெ கவிதைகளில் குளிக்கலாம் சிலமுறை
வாலே காற்றினிலே மிதக்கலாம் சிலநொடி
ஏலெ காதுகளில் மொழிந்திட வா....!
கால்கள் கொண்டு நடந்திருக்க வேண்டாம்;
சிறகு வாங்கி சிகரம் தாண்டி பறப்போம்!
சீமண்ட் பூசிய சுவர்கள் யாவிலும்;
சிறுகதை எழுதி சிறப்புடன் படிப்போம்!
إرسال تعليق