அறிவொளியில் சில கிறுக்கல்கள் 4: கவியாயுதம்
கவிதைகளால் ஒரு ஆயுதம் செய்வோம்!
காற்றின் கரம்தன்னில் பொருத்தி வைப்போம்!
என்தமிழ் புகலறியாது புறம்பழித்து ஏசுவோர் செவியில்;
காற்றே வீசிடு யாம்அளித்த ஆயுத கவியை!
ஊற்றே ஊறிய கண்ணீருடன் மடியட்டும் அவர்செருக்கும்!
அறிவியலும் ஆயுதமும் ஏந்திய மொழியே பெரிதென்றால்!
அறத்துபாலும் பரணிபாடும் தமிழே அகில பெரிதென்பாய்!
அன்பும் காதலும் கரைந்த மொழியே சிறந்ததென்றால்!
அகத்தினையும் குறுந்தொகையும் அள்ளித்தந்த தமிழே சிறப்பென்பாய்!
உளவியலும் வாழ்வியலும் உணர்த்திய மொழியே வளம்என்றால்!
புறநானூறும் கலித்தொகையும் உறைந்த தமிழே வளம்என்பாய்!
ஒலிஅசையும் கலைஆசையும் விளைந்த மொழிஏ உயர்வென்றால்!
சப்தகூட்டை ஒளியாக சந்தகூட்டை கலையாக விளைத்த தமிழே உயர்வெண்பாய்!
தேவையனைத்தும் தெகிட்டும்தேனாய் தெளிந்திருக்க எவ்வகையில்,
என்தமிழ் இழிவாய் தோன்றியது உன்மட அறிவில்?!
إرسال تعليق