எனக்கும் ஒரு கீதோபதேசம்:1
நான்:
கண்ணா , ஏன் என்னை படைத்தாய்?
படைத்ததும் படைத்தாய் அறிவுடன் ஏன் படைத்தாய்?
எக்குரையுண்டு என்னிடம் பின் ஏன் வாழ்நாள் முழுதும் தோற்கிறேன்? இத்துணை துயர் படும்படி என் பாவம் இருக்கும் இவ்வுலகில்?
அல்லது நான் தான் என் பாவம் செய்தேன்?
கண்ணன் சொன்னான்:
நண்பா!
ஒன்றை அறிந்துகொள் திறன்இன்றி நான் யாரையும் படைத்ததில்லை ,
பலர் அதை பயன்படுத்துவதில்லை
நீ பயன்படுத்தினால் அது அவர்க்கு வினோதமாய் படுகிறது...
நான்: இருக்கட்டுமே என் திறன் பயன்பட்டும் நான் தோற்கிறேனே? மற்றோர்க்கு இழிவாய் போகிறேனே?
கண்ணன் சொன்னான்:
அறிவாய் நண்பா! மற்றோர்க்காக நீ ஏன்காதே!
இழிவாய் எண்ணினாலும் இறங்கு போகாதே!
ஓட்ட மூங்கில் தான் காற்றை ஓசையாக்கும் !
காலி கூடம் தான் நீர் அள்ளும்!
எதையும் எதிர்பாராமல் உன் பயணம் போகட்டும்.
பேசுவோர் இங்குதான் இருப்பர்.
நீ மேலே போவாய்...
إرسال تعليق