என் பார்வையில் பொங்கல் -1 போகி

பொங்கல் எனும்போதே பொங்கி வருகிறது ஒரு கட்டுரைக் காவிரி. அதிலும் என் பார்வையில் பொங்கல் என்னும் எனது கட்டுரையின் பிரதான நோக்கமெல்லாம் அன்பு சகோதரர்கள் அனைத்தையும் அர்த்தமுடன் ரசனையுடன் அனுபவித்து மகிழவேண்டும் என்பது மட்டுமே...
முதல் நாள் போகி; உழவன் தமிழன் தன்னை சீா்திருத்தி கொள்ளும் நாள். தான் பயன்படுத்திய பொருள்களை அனுபவங்களை தூய்மைபடுத்தி தேவையற்ற அல்லது பயன்பாடற்ற பொருளினை பிறர்க்கு அளித்து பொதுவுடமை போற்றுதல்.
போகிறவை போகட்டும் என மன திடம் கொள்ளுதல் ஒருவகை மரபு.
உழவன் தான் சேமித்து வைத்திருந்த கடைசி உணவு பொருளையும் போகட்டும் என்று கொடுத்தல் இத்தினத்தின் விழாக்காரணம் ...
அவன் போகட்டும் என்று கொடுப்பது ; நாளை பெறமுடியும் என்ற நம்பிக்கையிலையே... அதுவே போகியானது.
ஆகவே அன்பிற்கினியோரே, நாமும் நம்மிடம் இருப்பதை கொடுத்து இன்பத்தை விலைக்கு வாங்குவோம். ஒருவேளை போகிறது என்றால் தம்முடைய கசப்பான அனுபவத்தின் நினைவுகள் துன்ப துயரங்கள் போகட்டும் என்று நாளை வரும் நாளின் மீது நம்பிக்கை வைத்து விட்டுவிடுவோம்..
மறப்பது மட்டும் நம் மண்ணின் மரபல்ல மன்னிப்பதும் தான். எரிப்பது நம் வழக்கமல்ல , அதன் அடிப்படையோ வேறு .. மறித்து போனவைகளை எரித்து மண்னை வளப்படுத்தும் மாண்புடையோர் நாம். உழவன் கரும்பினை வீடு வந்தபின்; நிலத்தில் உள்ள வோ்கள் மறித்து போய்விடும் ஆதலால் அதனை எரித்து மண்ணிற்கு உரமாக்குவான். தண்ணீரில் முளைத்த தாமரை தண்ணீருக்கே உயிர்கொடுப்பது போல் ; மண்ணில் விரிந்த வோ்கள் மண்ணிற்கே உரமாகின்றன.
ஒருவேளை நம் மனதில் குணத்தில் வோ்விட்டுருக்கும் தேவையற்றவைகள் இருந்தால் அவற்றை வேண்டுமானால் எரித்து  நமக்கே உரமாக்கி கொள்வோம். எனவே எரிப்பதை விடுத்து இல்லாதோர்க்கு கொடுத்து போகியன்றே ஈகையெனும் பொங்கலின் தித்திப்பை எய்துவோம்...
பழமொழிகள் முக்கியமன்றோ? பழைய கழிதலும், புதியன புகுதலும் போகி என்கிறது பழமொழி; ஆமாம் உழவனின் பழைய உணவுகள் கழிந்து புதிய உணவுகள் கிட்டும் பெருநாளில் . நமது பழைய எண்ணங்கள் கழித்து புதிய எண்ணங்கள் உருவாகட்டும்....
அனைவருக்கும் போகியின் பொருப்பான வாழ்த்துக்கள்!!!

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post