எப்போதும் தமிழன் ஒரு கடவுளை இருவேறு தினத்தில் கொண்டாடுவதில்லை. ஆனால் இன்றோ தமிழ்புத்தாண்டு இருதினமாய் திரிந்திருக்கிறது . என்றாலும் இந்த தை திருநாளுக்கு தான் எத்தனை கிளை பண்டிகைகள்....
தை 1 இல்;
அறுவடைத் திருநாள்
திருவள்ளுவர் தினம்
உழவர் திருநாள்
திராவிடர் திருநாள்
தமிழ் புத்தாண்டு
எதற்கு இத்தனை பெயா்கள் என்ற ஆய்வுக்கு வரும்போது பாதிக்குமேல் அநியாய பூடகமாய் இருப்பது தெளிவு . அறுவடை முடிந்தபின் தான் போகி . விவரத்திற்கு எனது முந்தையகட்டுரையான என் பார்வையில் பொங்கல் 1 போகி யினை படிக்கவும்...
திருவள்ளுவர் தினம் ; தமிழர்க்கு மீதமாய் பல நாட்கள் இருப்பினும் இதை மட்டும் கொண்டாடுதல் தவறு . பண்டிகை அன்று வள்ளுவரும் கொண்டாட சென்றிருப்பார்
உழவர் திருநாள்; ஆக சிறந்த பொருத்தமான பெயர். உழவன் அறுவடை முடித்து அதன் பின் செய்யும் கடமைகளையும் முடித்து கொண்டாடும் நாள் அல்லது நன்றி சொல்லும் நாள்....
திராவிட திருநாள் ; எப்பண்டிகைகளிலும் சேரா திராவிட சகோதர்கள் இன்று வந்து தொற்றிகொள்வது கொஞ்சம் ஆபத்து... வளையும் வில் தான் அம்பு வீசும்....
தமிழ் புத்தாண்டு; இதுதான் முக்கியமாக அலச வேண்டிய தலைப்பு . இருதினங்கள் , மாறுபட்ட மரபு, அதை ஆய்வு செய்ய வேண்டிய கடமை நமக்கு, தை 1 பூமி சூரியனின் பின்பக்கம் விடுத்து முன் பக்கம் வரும் தினம் அதனால் நாம் சூரிய பொங்கல் கொண்டாடுகிறோம்.. சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள்
தமிழ் மரபை பொருத்தவரையில் நிலவே அனைத்துக்கும் ஆதாரம். அதாவது பஞ்சாங்க நியதிபடி நிலவுதான் திதி கால நாயகன்..
சித்திரை என்பது சிறுநிலவு என்பதாகும் .. சிறிதிலிருந்து வளர்ந்து வரும் நிலவு .. சிறுநிலவு பிறத்தல் என்பது ஆண்டு பிறத்தலாய் .. சித்திரை என்ற மாதம் புத்தாண்டாயிற்று....
Post a Comment