அறிவொளியில் சில கிறுக்கல்கள் 5 - நட்சத்திரங்கள்

அகண்ட ஆகாயம் என்ன
இருளடர்ந்த கருங்கடலா?
அங்கிருந்து மிதப்பதென்ன
தோணியென்ற நிலவா?
ஒற்றை தோணி நிலவுக்கு
கற்றையாய் சிலக்கோடி
நட்சத்திரங்கள் என்ன
மினுமினுத்திடும் கலங்கரை விளக்கா?


காற்றிடம் கதை பேசும்
மானுட கவிஞரெல்லாம்
மாறிடாமல் நட்சதிரத்துக்கு
அடிமை சாசனம் கொடுத்திட
நான் மட்டும் விதிவிலக்கா?
விடியலுக்கு ஏங்குபவன்
நட்சதிரங்களை ரசிப்பதில்லை
இரவினில் தூங்குபவன்
நட்சதிரங்களை பார்ப்பதும் இல்லை
இருளில் அரண்டவனுக்கு
நட்சதிரங்கள் தெரிவதில்லை
இரவின் ஆண்டவனுக்கு
நட்சதிரங்கள் தேவையும் இல்லை
கறக்காத பாலின் பொறுமை போல
சுறக்காத தேனின் இனிமை போல
திறக்காத காட்டின் பசுமை போல
தினந்தோறும் வானில்  வண்ணமயமாய்
காத்திருக்கின்றன நாம் பார்த்திட
ஏங்கி கிடக்கின்றன நட்சத்திர கூட்டங்கள்!!!!!
பவித்ரன் கலைச்செல்வன்

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS