போகியின் போகி..

பழையன கழிதலும் புதியன புகுதலும் - போகி ஆமாவா?.. ஆமாம்  ஆமாம் அப்படி தான் சொல்றாங்க .. இல்லையே.. இல்லையா? எப்படி? போகி எப்படி? .. இது எனக்கும் இன்ஜினியர் அஜிக்கும் நடந்த உரையாடல்..

ஆமா நிஜமா போகி பழையன கழிதலும் புதியன புகுதலும் தான்.. ஆனா பழம்பெருள் அல்ல.. அறுவடை நெல் அளக்க போகம் என்பர். நாலு போகம் வௌயணும் னு புறநானூற்றுல கொற்றவைக்கிட்ட வேண்டிய பாடல்களும் உண்டு...

ஒரு காணி விளச்சல் ஒரு போகம்.. ஓராண்டுக்கு வளரும் நெற்பயிர் அறுவடை செய்து வீடுசேரும் நாள் போகி.. அதுவும் மாலை சூரிய மறைவுக்குபின் தான் மொத்த வேலைகளையும் முடித்து வீட்டுக்கு புதுநெல் கொண்டுவருவர் வேளாண்மக்கள்.. ஆகவே அம்மாலை போகநாழிகை எனப்படும்.. போகநாழிகை போகநாழி ஆகமருவி பின் போகியானது..

போகி என்பது போகம் தரும் பெண் தேவதை என்றும் கொள்ளபடுவதுண்டு.. அன்னம் வழங்கும் அன்னபூரணி.. அன்று மாலை வீடுவருவதால்.. வீட்டை தூய்மை செய்து அலங்கரித்து வரவேற்பர் . ஆகவே போகி வரும்நாள் போகி பண்டிகை என்றாகுதல் நயம்..

நடுவுல எங்கிருந்து வந்தது பழைய கழிதல் என்பது என்றால் இதோ இங்கிருந்துதான்.. நெற்குதிர் அல்லது கொள்ளம் என்பன அக்கால வீடுகளின் நெற்சேமிப்பிடம். அங்கே எஞ்சிய நெற்பயிர்களை எடுத்து தனித்து வைத்துவிட்டு புதுநெல் அங்கே கொட்டிவைக்கபடும்.. அதுவே பழைய கழிதல் புதியன புகுதல்..

இந்த எரிக்கும் வழக்கம் சூழ்ச்சி ஆனால் அதன் பின்னணி அறிந்திடுதல் நன்று.. முக்கூடற்பள்ளு படித்தவர்களுக்கு தமிழர் கொண்டாட்ட நயம் புரியும்.. ட்ரெக்கிங் போகும் சிலர்க்கு அது அனுபவம்கூட.. பொதுவாக சொல்வோம்..

இந்த தலைமுறைக்கு நீலவானம் (மன்மதன் அம்பு) பாடலும் முன்தலைமுறைக்கு துள்ளி எழுந்தது காற்று பாடல் வீடியோவை கவனியுங்கள்.. இரவில் சிலகட்டைகள் சுள்ளிகள் கொளுத்தி சுற்றி அமர்ந்து பாடுவர் ஆடுவர் .

சுற்றத்தாரோடு கொண்டாடுவர் . அக்கால வாத்தியமான கொட்டு முழவு நாயினம் குழல் யாழ் போன்றன இசைத்து ஆடுவர்..

இத்தகு கொண்டாட்டமே கொளுத்தும் பண்டிகையாக திரிக்கபட்டு நமக்கு இழப்பை தேடிதந்தது.. பலர் கரும்பு அறுவடைக்கு பின் அந்தவயலில் எஞ்சிய வேர்களை கொளுத்துவதை குறிப்பிடுவர்.. ஆனால் உண்மையில் கரும்பு அறுவடைக்கு பின். எருவை கொட்டி நீர்விட்டு விளைந்தவையை வேருடன் பிடுங்குவர்..

இத்தகு கொண்டாட்ட போகியை போக்கி கொளுத்து போகியாக்கிய சூழ்ச்சியர்களுக்கு என் ஆசிகள்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post