இதற்கு பெயரும் சிறுகதைதான் 2: ஏகலைவன்

இதற்கு பெயரும் சிறுகதைதான் 2: ஏகலைவன்

தங்கதகடுகள் பதித்தது போன்ற மேற்கூரையாய் செங்கதிர்களை கிரணித்து ஓய்ந்த கதிரவன் அயர்வின் உஷ்ணத்தை உமிழ்ந்த நேரம் அது. அடுத்த பக்கம் இருள் விழுங்கிய நேரம் நிறைய வேண்டியதால் இப்பக்கம் ஒளி மறைய வேண்டி விடை பெற்றது, அத்தகு மாலை வேளையில் மாணிக்கம் மேன்ஷனில் தஞ்சம் புகுந்தான் ராகுல்..


முதற்வேலை இப்போது விற்பனையில் உள்ள தங்கதிரை வார இதழை படித்து விடுவது என்பது தான், அத்தியாவிசய கடமைகள் தவிர்த்து வேறு எந்த உபரி வேலையும் இல்லாத சுதந்திரம் அவனுக்கு…

தங்கதிரை இதழ் 182 ; அட்டையில் முக்கிய செய்தி, எவர் புகழ்பாடி இந்த தங்கதிரை தன்னை வளர்த்து கொண்டதோ, எவர் பெயர் என்றால் வாசகர்கள் உடனே வாங்கி பிரிப்பார்களோ அவர்கள் பெயர்தான்; கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி கூட்டணியாக வாழ்ந்து வரும் இவர்கள்; 60க்கும் 20க்கும் பிடித்தமானவர்கள்…
வதனசேகரனின் இசையும் மதனகுமாரனின் வரியும் அத்தனை பொருந்திய இன்பரசம், இவர்களின் கூட்டணியில் முளைத்த பாடல்களுக்காகவே வெற்றிபெற்ற படங்கள் பல; இந்த 20 ஆண்டுகளில் இந்த கூட்டணி 4 ஆயிரம் பாடல்கள் உருவாக்கியுள்ளது, பெரும் சாதனை. இப்போது மீண்டும் இணைகிரது. வெளிவரவிருக்கும் ஒரு படத்தின் பெயர் சொல்லி ஒப்பந்தமிட்ட செய்திதான். தற்போதைய தங்கதிரையின் பரபரப்பு தகவல்..

சொற்பிழை இலக்கியபிழையெல்லாம் வழுவிலக்கணத்தில் சேர்த்துவிட்டு வரிவிடாமல் படித்து ரசித்து ருசித்தான் ராகுல், இக்கூட்டணியின் ஆணிதரமான ரசிகன். காதில் ஏதொ ரகசியம் கிசுகிசுத்த கொசுவினை கூட கவனியாமல் படித்து கொண்டிருந்தான்…
ராகுல் தனது 16வது அகவைக்கே அரைவருடம் பாக்கியிருக்க, உலகம் நவீனமயமானதன் அடையாளம் அவன் தோற்றத்தில் தெரிந்தது, அகம் புறம் இரண்டும் வேறுவேறு என்பதை உணர்த்துவதுபோல் இருபுறமும் திருப்பி அணியும் சட்டை, துவைக்கும் சிரமத்தை தவிர்பதற்காகவே 7,8 வரிகள் ஓடின ஜீன்ஸ் பாண்ட், காலை புதைக்கும் சவப்பெட்டிகள் போல ஷூக்கள், இரண்டு வர்ணம் இழைந்தோடிய சன் கிலாஸஸ் என அலங்காரத்தொனியில் கிளம்பினான்…

இன்று, மதனகுமாரனை சந்திக்க ரெக்கார்டிங்க் தியெட்டர் செல்ல வேண்டும், ஏர்கனவே, மதனகுமாரனை பலமுறை சந்திதிருந்தாலும் இம்முறை கம்பொஷிங்க் சமயத்தில் சந்திப்பது சிறப்பானது இதுபோன்ற வேளைகளில் வெளியாட்கள் எவரும் அனுமதிக்க படுவதில்லை, என்ன அப்பாயிண்ட்மென்ட் தான் இல்லை இருந்தாலும் அவர் சொல்லியிருக்கிறாரெ, சேகரான் ரெக்கார்டிங்க் ஸ்டுடியோ, வாசலில் காவலிருந்தான், ராகுல். இன்னொருவன் காவல் இருப்பது பொறுக்காத காவலாளி அவனை எட்டிதள்ளிட, வரும் காரின்முன் தவறிவிழுந்தான் அவசரமாய் இயக்கத்தை நிறுத்திய டிரைவர் அவரது தொனியில் இகழ்ந்து தள்ளினார், காரிலிருந்து இறங்கிய மதனகுமாரன் ராகுலை விசாரித்தார்; பின், இருவரும் ஸ்டுடியோவிற்க்குள் நுழைந்தனர்…
என்ன, மதனா புது அசிஸ்டெண்டா? இவன எங்க புடிச்ச?
உன் ஸ்டுடியோ வாசல்லதான்; ரெக்கார்டிங்க் பாக்கட்டுமேனுதான்! ஏற்கனவே தெரிஞ்ச பையந்தான்..
சரி, வதனா டிரெக்டர் வந்துட்டாரு கம்பொசிங்க் பொய்ரலாம்…
சரி வா, வாங்க அட உன் பெயர் கேட்கவே இல்லையே?
ராகுல் என்றான் ராகுல்..
டிரெக்டர் வந்தார் கம்பொசிங்க் துவங்கியது, சிட்சுவேசன் சொன்னார் ஆதாவது, நாம் எங்கிற படத்துக்கு டைடில் பாடல் அது வதனசேகரன் ஒரு டியூன் பாடினார் அதற்கு, மதனகுமாரன் எழுதின வரிகள் இது,
ஒலி கேட்கும் திசையிலே;
ஒரு பாடல் விளையுதே!
புவி உருளும் பொழுதிலே;
நிலவு திரலும் அதனிலே!
நாமேதான் உலகம் இனி, நமக்கேதான் உலகம்
டிரக்டர் சுத்தமா நல்லாயில்லைனு சொல்லிடாரு , அத கேட்டு மதனகுமாரன் ஆத்திரம் கொண்டு உன்ன மாதிரி அரகுர டிரெக்டர்ங்களுக்கெல்லாம் என்ன தெரியும்னு டவந்துரீங்க சினிமாவுக்கு நாங்க பார்காத ஒன்னு என்ன தெரியும் உனக்கு என்று ஆவேசமாய் திட்டினார்..
கோவம் கொண்ட டிரெக்டர் ராகுலை பாடல் எழுத சொல்லி வற்புருத்தினார் இறுதியில் ராகுலும் ஒப்புகொண்டான்…
ராகுலின் வரிகள்;
நாம் என்பது அன்பாகும், எங்கயில்
நாம் யாரும் புத்தரே!
நாம் என்பது அறமாகும் எங்கையில்
நாம் யாரும் வள்ளுவரே!
மழைதனை வரவேற்ப்போம், நிலவினில் நீர் சேர்ப்போம்!

பாடல் ராகுலின் வரிகளுடன் வெளிவந்தது, ஆனால் பெயர் என்னவோ மதனகுமாரன் என்று தான் வந்தது…
அந்த பாடலுக்கான தேசிய விருதும் மதனகுமாரன் மற்றும் வதனசேகரனுக்கு வழங்கபட்டது…

இச்செய்தியையும் தங்கதிரையில் வரிவிடாமல் ரசித்து ருசித்து படித்துக்கொண்டிருந்தான், ராகுல் என்னும் ஏகலைவன்….

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم