ஆசைகள் உண்டெனக்கு

ஆசைகள் உண்டெனக்கு 


அதிகாலையில் கதிரவன் சோம்பல் முறிப்பதை பார்க்க ஆசை
அந்திமாலையில் தாமரை தூங்குவதை ரசிக்க ஆசை


காடுகளுக்குள் உயர்ந்த மரக்கிளையில் உறங்க ஆசை

பசித்திடும் பொதெல்லாம் பகிர்ந்துகொள்ள ஆசை


புறாக்களின் கூட்டத்தினை வேடிக்கை பார்க்க ஆசை
ஆழ்கடலில் மிதந்தபடி தொடுவானம் சிவந்ததை பார்க்க ஆசை

பூப்பதற்கு முன் பூவின் சுகஅனுபவத்தை பார்த்திட ஆசை

நரிகளின் கண்ணீர் பார்க்க ஆசை
நடுஇரவில் தூற வயலின் கேட்க ஆசை


விடியுமுன் மூங்கில் காட்டின் சிறுங்கார குழல் கேட்க ஆசை

மழைக்கு முன் ஆடும் மயில் பார்க்க ஆசை
மழையால் சிலிர்க்கும் புல்வெளி பார்க்க ஆசை


நதியின் இசைகேட்க ஆசை
காற்றாற்றின் வெள்ள மேளம் கேட்க ஆசை


பாலைவனத்தின் மதிய வேளையில் தண்ணீர் குடிக்க ஆசை
பழங்கால புராணங்கள் படிக்க ஆசை
ஆசைகள் உண்டெனக்கு
அலையின் நுரையில் ஒரு குமிலாகும் ஆசை
பட்டாம்பூச்சியின் சிறகில் குடியேறும் ஆசை

பறவையுடன் கூட்டமாய் பறந்திட ஆசை
கானக்குருவியாய் குயிலாய் கிளியாய் பாடிட ஆசை

காா்மேகத்தில் சிலகணம் உருகிட ஆசை
கரைந்திட்டால் மழையாய் பொழிந்திட ஆசை


கவிதை எழுதும் காகிதமாகிட ஆசை
கவிதையோடு காற்றில் பறந்திட ஆசை

தீண்டா சிமிழாய் கற்புடன் இருக்க ஆசை
தூண்டா விளக்காய் ஞானம் பெற்றிட ஆசை

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم