இதற்கு பெயரும் சிறுகதைத்தான் 3 - நான்

நான் தான் ; 72 இன்ச் உயரத்தில் சராசரியான உடல்வாகு கொண்ட மானுடம், கலைந்த தலை, கருநிறம் ,  மேற்படி சொல்ல ஏதும் இல்லை, ஓ பேரா, பெயரில் என்ன இருக்கு உங்க பெயரே வைத்துக்கொள்ளுங்கள். அட, சொல்ல மறந்துட்டேன், நான் ஒரு டிடெக்டிவ் இப்ப கூட அந்த வேலையா தான் போகிறேன்...



கோர்ஜா காரிடாஸ் அப்பார்ட்மெண்ட் , சுமார் 450 வேதுகள் கொண்ட  அப்பார்ட்மெண்ட்; நுழைவு வாயிலில் ஒரு மேருவளைவு அடிக்கடி அலங்கரிக்கும் சிரமத்தைதவிர்க்க இயற்கையாகவே பல பூச்செடிகள் அங்கு வளர்க்ககப்பட்டிருந்தன. நுழைந்தவுடன் ஸெக்யூரிடீ இடம் எனது விவரங்களை பதிவு செய்யவேந்தியிருந்தது.. ஆயினும் ஸெக்யூரிடீ அன்றைய தேக்காண் க்ராநிகல் நுல் ஆர்வமாய் மேய்ந்து கொண்டிருந்தார்... அங்கிருந்து 20 மீட்டர் தோராம் நடந்து சென்றாள், தரைத்தளம் , கார் பார்கிங் , ஏ,பீ,ஸீ பகுதிகளை கடந்து ஈ பகுதியின் மின்தூக்கியில் ஏறி 3வது தளத்தை தேர்வு செய்து சென்று கொண்டிருந்தேன்..

கிணற்றில் இருந்து வாளி மேலெறுவதுபோல் மெல்ல மெல்ல ஏறியபின் 3வது தளத்தை வந்தடைந்தேன். இந்‌ஸ்பெக்டர் வல்லிராஜன் ஒரு உணர்வற்ற வரவேற்ப்பை நல்கினார்.
சொல்லுக வல்லிராஜன் பிலாத் நம்பர் என்ன? என் வேல என்ன? ... 216; ஒரு தற்கொலை கேஸ் பட், பட் என்ன சொல்லுங்க; பட் செத்தவன் ..... அதற்குள் 216 வந்தது காவலாளிகள் வாசலில் நீர்க்க வல்லிராஜன் அவர்களை அதிகாரத்தால் தகர்த்து உள் நுழைந்தார், ..

பேசிக்கொண்டு யதார்த்தமாய் வந்தாலும் நான் கவனிக்க தவறவில்லை, மின்தூக்கி கதவிலிருந்து 15மீ தூரத்தில் ஒரு இடது திருப்பம், 20மீ தூரத்தில் ஒரு வலது திருப்பம், பின் 5 அடிதூரத்த்ில் 216...

கதவு ஒருபக்க தாழ் வெளியிருந்து தான் பூட்டமுடியும் உள்ளே தாழ் தான் உள் நுழைந்தேன்; ஒரு சர்வ வசதியான அறை, சோபா, சுவர் தொலைக்காட்சி, போன்ற உயர் ரக சாதனங்கள் கொண்டது. மாடர்ன் சமயலறை, ஆனால் சிலமாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும். கவனித்து வைத்தேன்...

ஹால் இன் 3வது மூலையில் ஒரு நுழைவு கொண்டு அதனுள் படுக்கையறை, கழிவறை ஆகியன; படுக்கையறையில், நுழைந்தேன். கதவின் தாழ் உடைக்கபட்டிருந்தது. கதவின் வலத்துபுறம் சுவருடன் பூசப்பட்ட அலமாரியில் சில புத்தகங்கள்.. அவற்றை துலாவியபடி நகர்ந்தால் ஜன்னல் கம்பிககளற்ற ஜன்னல்...

அதன் வழியே, கீழே எட்டிப்பாததேன் சற்று உயரம் குறைவு தான்.. தூரத்தில் சிறுவர்களின் கால்பந்து ஆட்டம் நடந்து கொண்டிருந்தது, காம்பௌுன்ட் சுவர் உரஸிய சாலை மகளிர் கல்லூரியின் பிரதான சாலை . கல்லூோரி என்னவோ யூஎஸ், போன்ற கலாசாரத்தை தெளித்துழ்ளது..
சாலையை கடக்கும் ஒரு பெண் டீ-ஸர்த், குட்டை பாவாடையும் அணிந்திருந்தாள். டீ-ஸர்த் மேல் என்ற பகிராங்க அறைகூவலுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்.. எனக்கு அவள் நேர் கோட்டில் வரும் போது, டாப் ஆங்கிலில் பார்க்கும் போது, சப்பா.. இனிமேல் இந்த மாதிரி ஆங்கில கண்ணாடிய கழத்திடனும் . அச்சமயம் வல்லிராஜன் உள்ளே வந்தார்...
என்ன ஸார்; ஏதாவது பாயிண்ட் கிடைசுதா; ஆமா, பாடி எங்க மிஸ்‌டர் வல்லிராஜன். என்ன சார், நீங்க பாடிய இன்னும் பாக்கலியா? இருந்ததா தெரியலயெ (), சார் நீங்க என்ன சொல்லவரீங்க? ஐ மீன் சரியா பாக்கலனு சொல்றேன். ஸார் பின்னாடி திரும்பி பாருங்க..

பின்னால் தரையில் நெடுஞ்சாண்கிடையாக ஒரு மனித உடல், மாநிறம் விடுத்து ரத்த உறைய்வினால் சற்று கறுத்த பிணம், எப்படியும் இறந்து 5 மணிநேரம் இருக்கும். கண்கள் வீங்கியிருந்தன, பற்கள் கடித்ததால் நாக்கில் சில காயங்கள், எப்படி செத்தான் இந்‌ஸ்பெக்டர். தூக்கில் தொங்கி சார்...

அப்ப தற்கொலைங்கிரீங்க இல்ல வேற ஏதாவது விவரம் இருக்கா? இருக்கு ஸார் இந்த ஊசி , அட, இது ட்ரக் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் ஊசி அது பயன்படுத்த பட்டிருக்கு சார்.. அதனால் என்ன? ஒருவேளை கொலையா இருக்குமோனு, சேச்சே, ட்ரக் அடித்துவிட்டு மணாழுதததால், செய்துகொண்டிருக்கலாமில்ல. வேற ஏதாவது விவரம்...

சாரி ஸார், வேற ஏதும் இல்ல, இவன் எங்கும் வேலை செய்வதா தெரியல, யாருக்கும் அறிமுகம் இல்ல, .. அப்ப, ஸ்பை ஆ இருப்பனோ ? எப்புடி சொல்றீங்க ஸார்? வல்லிராஜன், அவன் புக்ஸ் , சுவர்ல இருக்குற நோட் மார்க்ஸ் எல்லாம் கூட சொல்லும்...

அப்போ, ஸ்பை ஏன் தற்கொலை பண்ணிக்கணும்;? தற்கொலைனு சொல்லமுடியாது காரணம் இந்த ஊசி, அப்படி கொலைநா யார் செஞ்சிறுப்பா? என்ன மோடிவ் இருக்கும்?ஸார்.. நிறைய இருக்கலாம் ஸ்பை வாழ்க்கைல சொல்லவா வேணும், பட் நீங்க இந்த கேஸை தற்கொலைனு முடிச்சிருங்க! ஏன் ஸார்? ...

இத பாருங்க வல்லிராஜன், உங்களுக்கும் சரி எனக்கும் சரி பல கேஸ் இருக்கு இதுல  தலையும் புரியாம வாலும் புரியாம, எதுக்கு இந்த கேஸ்? சரிங்க ஸார், கான்ஸ்தபிள் பாடிய, போஸ்ட் மாடம், க்கு அனுப்பிருங்க தனிப்பட்ட பிரச்னை னு  கேஸை முடிச்சிருங்க..

மீண்டும் நான் ஜன்னலின் விளிம்பிழிருந்து, கால்பந்து ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன், மனதில்  ஒரு சிறு சலனம்.; இது கொலை தான்னு எனக்கு தெரியும்; ஏன் இவன் ஸ்பை என்பதும் எனக்கு எப்பவோ தெரியும், இருந்தாலும்  சட்டத்துக்கும், தொழிற்கும், துரோகம் செய்வதை நினைத்தால்; மனம் கணக்கிரது , ... இவன் மட்டும் , ராஜேந்திரன் கொலையின் தகவல்களை திறத்டாமல் இருந்திருந்தால், இன்றும் இருந்திருப்பான், நானும் நேர்மையாய் இருந்திருப்பேன்.. உண்மையில் இது கொலைத்தான் என்றால் அந்த கொலைகாரன் தான் யார்? நான்தான்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post