கவிதையில் உண்டான காதல்

கவிதையில் உண்டான காதல்

கொல் என சிரித்தாள் வேல்விழியாள்; உத்தமனேசரின் மகள்; பொதுவாகவே பெண்களுக்கு தொண்டைகுழியிலிருந்து தான் சிரிப்பே துவங்கும், ஆனால் காதலன் அருகிலிருக்கும் போது; அடிவயிற்றில் இருந்து சிரிப்பு துவங்கும் அப்படித்தான் சிரித்தாள் வேல்விழியாள், கவியரசு சொன்ன கவிதைக்கு…


கோடையில் மாலையில் தொடுவானம் சிவந்ததுபோல நாணத்தில் சிவந்தமுகம். சிரிப்பை வெள்ளியாய் கொட்டியது, கண் இமைக்காமல் பார்த்த கவியரசோ அணு உலை வெடித்ததாய் ஒரு சிரிப்பென்றான், அழிவுக்கா சிரித்தேன் என்றாள் வேல்விழியாள், தமிழ்போற்றும் எழுத்தாளனின் மகள் அல்லவா, பின் என்ன இந்த சிரிப்பால் தானே எனை அழித்தாய் என்றான் கவியரசு…

ஊடலின் முதல் பத்தி துவங்க கவியரசே காரணம்; அதற்குள் உறவு உண்டான வரலாற்றை நாம் பார்த்துவருவோம். அரங்கம் நிறைந்த கூட்டத்தில் மேடையில் சில முக்கிய பிரமுகர்கள் இடையே வெள்ளைதாடியுடன் ; வெளுத்த காவியுடன் எழுத்தாளர் உத்தமனேசர். அவரது புதிய படைப்பை வெளியிட கூடின அரங்கம். அவரை வாழ்த்தி பலர் கவிமன்றமே ஊறிடும்படி ஐஸ் வைத்தனர், இறுதியாய் வந்த கவியரசின் கவிதைகளும் கருத்துகளும் உத்தம்னேசரை ஈர்த்த்டமையால் அவர் வீட்டு மனிதனாய் போனான் கவியரசு…
அதுவரை இல்லாத ரம்மியம் அன்றுமட்டும் ஏதோ ஒன்று சிற்ப்பாக இருந்தது வேல்விழியாளிடம்,பெயருகேற்ற பார்வை கண்கூசிப் போனான் கவியரசு. அவளிடம் இருந்த மாற்றதை அவன் குறிப்பறிவதற்குள் அவளது சில தீண்டல்களில் இருந்த மின்சாரம் சொன்னது அவளது  ஈர்ப்பை, அன்று முதல் அவன் கவிதைகளின் முதல் மரியாதை வேல்விழியாளாகினாள்..
பலவேளாய்யில் உத்தமனேசருடன் உரையாடுகையில் அவனது கண்கள் அவளை தேடுவதை உத்தமனேசர் அறிந்திருக்க நியாயமில்லை அந்த அளவில் கவியரசை அவர் நேசித்தார். ஊடலின் முடிவை அறிந்துக்கொள்ளத்தான் வேண்டும்…

ஊடல் முற்றிப்போகும் வேளையில் தலைவனுக்கு என்றெ ஒரு பங்கு உண்டு அப்படியெ நகர்த்தி போன கவியரசை தடித்தது என்னவொ வேல்விழியாள்தான்..
பொதுவாகவே ஊடலை முடிப்பது தலைவனின் தீண்டல்தான். இங்கு கவியரசு அதற்கு தயாரில்லை ஆகவே அப்பணி வெல்விழியாளிடம் சென்றது..
தீண்டலின் இன்பம் என்பதை அன்றுதான் கவியரசு உணர்ந்திருக்க வேண்டும். அந்த இன்பத்தில் கிறங்கி மயங்கி கிடந்தவனை உலுக்கி நிருத்தியது ஒரு கவிதை..
அற்றை தினத்தில் ஆறமுது கொண்டான்,
பேதை இத்ழில் தேனொன்றை உண்டான்
ஒற்றை துளியின் சுவையின் திகைப்பில்
மயங்கி கிறங்கிய என் தலைவன்!
[ ஏதோ தோணி எழுதினது கவிதை மாதிரியாவது நினைச்சுகொங்க]
விழித்தவனுக்கு மயக்க ஊசியாய் போனது கவிதை போதையில் இருந்தவளை தண்ணீர் ஊற்றி எழுப்பியது போல, கம்மி உருமியது, உத்தமனெசரின் கணத்த குரல், “அம்மா வேல்விழி கொஞ்சம் காபி குடும்மா” என்று சென்றது குரல்…

நடுங்கிய கவியரசுக்கு உத்தமனேசரை எதிர்கொள்ளும் திராணியில்லை என்றறிந்த வேல்விழியாள், தானே சென்று உத்தமணேசரிடம் தாழியை உடைத்தது போல் விசயத்தை உடைத்தாள், உத்தமனேசரும் உடைந்தார், ஆனாலும் வேல்விழியாள் பேசிய வார்த்தைகளில் கவியரசின் நடை இருந்தது, ஜாடிக்கான மூடி என்றெண்ணியவர் ஒரு தகப்பனாக கலங்கினார். மகலே! கவியரசின் வாழ்க்கை மோசமானது அவனது இன்னல்களை னீயும் சுமக்க நெரிடும் ஏற்ப்பாயா? என்று தான் அஞ்சுகிறேன்; நான் எழுத்தாளன் மகளாயிற்றே அப்பா என்றாள் வேல்விழி, ஆர்வவேகத்தில் சொன்னதாய் தெரிந்தும் அவள் நம்பிக்கை பிடித்தது, மேலும் கவியரசையும் பிடித்திருந்தது, ஒத்துகொண்டார்.

கவிதையில் உண்டான காதல் கனிந்தது!!!


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post